மோர்சுக்கு மரியாதை செய்த கூகுல்

goolecode1கூகுல் தேடியந்திரத்தை நேற்று பயன்படுத்தியவர்கள் கொஞ்சம் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கலாம்.காரணம் முகப்பு பக்கத்தில் கூகுல் என்ற வார்த்தையை காண முடிந்திருக்காது.அதற்கு பதிலாக புள்ளிகளின் சிதற‌லையே பார்த்திருக்க முடியும்.

இது எதோ தொழில்நுட்ப கோளாறு என பலரும் நினைத்திருக்கலாம். ஒரு சிலர் தங்கள் உலாவியில் பிரச்சனை என்றுகூட நினைத்திருக்கலாம்.

ஆனால் இது கோளாறும் இல்லை தற்செயலாக நடந்தது இல்லை. கூகுல் தனக்கே உரிய பாணியில் லோகோவில் திடமிட்டு செய்த மாற்றம் தான் இது.

கூகுலின் வரலாற்றை அறிந்தவர்கள் முக்கிய தினங்களின் போது அந்த தினங்கலுக்கு ஏற்ப கூகுல் தனது லோகோவை மாற்றியமைத்து வருகிறது என்பது தெரிந்திருக்கும்.

உதாரணமாக கிறிஸ்துமஸ் என்றால் லோகோவில் கிறிஸ்துமசை குறிக்கும் சித்திரங்கள் இடம்பெறும். ஒலிம்பிக் போட்டி என்றால் ஒலிம்பிக் விளையாட்டை லோகோ நினைவு படுத்தும். இதே போல புகழ்பெற்றவர்களின் பிறந்த தினங்களின் போதும் அவர்களை கவுரவிக்கும் வகையில் லோகோவில் மாற்றம் செய்யப்படும்.

கூகுல் லோகோவில் செய்யப்படும் மாற்றங்கள் டூடுல் என்று அழைக்கப்படுகின்றன.போதுவாக இந்த சித்திர லோகோ மிகவும் அழகாக இருக்கும்.

ஆனால் நேற்று நிகழ்ந்த மாற்றம் இப்படி அமையவில்லை.கலைந்த புள்ளிகளைப்போல இருந்த அந்த சித்திரம் குழப்பத்திஅயே உண்டாக்கியது.

விஷயம் என்னவென்றால் கம்பிகள் மூலமான தகவல் தொடர்புக்கான தந்தி சேவையின் அடிப்படையான குறியீட்டு மொழியை உருவாக்கிய சாமுவேல் மோர்சின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவை கவுரவிக்கவே கூகுல் மோர்ஸ் கோட் என்று சொல்லப்படும் சங்கேத மொழியை போலவே தனது லோகோவை அமைத்திருந்தது.

மோர்சின் முழு பெயர் சாமுவேல் ஃபிலே பிரிஸ் மோர்ஸ்.அமெரிக்காவில் பிற‌ந்து வளர்ந்த மோர்ஸ் அடிப்படையில் ஒரு ஒவியர். வரலாற்று காட்சிகளை திறம்பட வரைந்து வந்த மோர்ஸ் தகவல் தொடர்புக்கான சங்கேத மொழியை கண்டுபிடித்தன் மூலம் உலக்ப்புகழ் பெற்றார்.

19 ம் நூற்றாண்டிலும் 20 ம் நூற்றாண்டின் பெரும்பகுதி முழுவதும் தகவல் தொடர்பில் அவரது முறையே கோலோச்சியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “மோர்சுக்கு மரியாதை செய்த கூகுல்

  1. பதிவுக்கு நன்றி. நானும் இக்கருத்தையொட்டிய ஒரு பதிவை பதித்துள்ளேன்.
    http://askubisku.blogspot.com/2009/04/blog-post_467.html#comments

  2. நேற்று எனக்குள்ளே கேட்டகேள்விக்கு விடை கிடைக்கவில்லை.
    இன்று உங்கள் மூலமாக அது கிடைத்துவிட்டது…

    நன்றி நண்பரே

  3. //இது எதோ தொழில்நுட்ப கோளாறு என பலரும் நினைத்திருக்கலாம்//

    ஹி ஹி ஹி நானும் தான்

  4. as you pointed out, I know that matter, there are some change any special event, anyhow I dont know this matter
    :கம்பிகள் மூலமான தகவல் தொடர்புக்கான தந்தி சேவையின் அடிப்படையான குறியீட்டு மொழியை உருவாக்கிய சாமுவேல் மோர்சின் பிறந்த நாளை முன்னிட்டு

    thanks a lot for this work..

  5. mathi

    THANKS FOR YOUR INFO