இப்படி ஒரு தேடியந்திரம் தேவைப்படலாம் என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால், பொய்யான ஒரு தேடியந்திரத்திற்கான தேவை உண்மையானது என்பதால், பிலிம்சோர்சிங் தளம், தேடியந்திரம் போல தோற்றம் தரக்கூடிய பொய்யான தேடியந்திர சேவையை உருவாக்கியுள்ளது.
திரைப்படம் அல்லது குறும்படங்களை இயக்கும் போது, முக்கிய பாத்திரம் அல்லது துணை பாத்திரம் இணைய தேடலில் ஈடுபடுவது போல ஒரு காட்சி வரலாம். இந்த காட்சியை படமாக்க என்ன செய்வீர்கள்? இதென்ன அந்த பாத்திரம் கூகுளில் தகவல் தேடுவது போல காட்சி எடுக்க வேண்டும் என்று உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்.
இது இயல்பானது தான் என்றாலும், கூகுளில் தேடுவது போல காட்சி அமைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கூகுளிடம் அனுமதி வாங்க வேண்டுமா என்பது தான் அது. கூகுளிடம் அனுமதி தேவை எனில் முறையாக வேண்டுகோள் சமர்பித்து பதிலுக்கு காத்திருக்க வேண்டும். வர்த்தக நோக்கிலான திரைப்படம் எனில் இப்படி செய்வதே சிறந்ததாக இருக்கும்.
இல்லை எனில், யார் கேடக்கப்போகிறார்கள் என துணிந்து கூகுள் தேடல் ஸ்க்ரீன்ஷாட்டை வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் சிக்கல் வரவாய்ப்பில்லை. ஆனால் எதிர்பாராமல் காப்புரிமை மீறல் எனும் நோக்கில் வில்லங்கமாகும் வாய்ப்பிருக்கிறது.
தவிர, இந்த படம் இணையத்தில் வைரலாகி விட்டது எனில் , கூகுளுக்கு தேவையில்லாமல் விளம்பரம் அளித்தது போல ஆகிவிடலாம். இதைவிட சிறந்த வழி, கூகுளை பயன்படுத்தாமல், ஏதேனும் ஒரு தேடியந்திரத்தை பயன்படுத்துவது போல காட்சி அமைப்பது தான். அதாவது நாமே ஒரு தேடியந்திரத்தை உருவாக்கி கொள்ளலாம். இந்த தேடியந்திரத்தையும் நீங்கள் உருவாக்க வேண்டியதில்லை, இதோ நாங்கள் உருவாக்கி வைத்திருக்கிறோம் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்கிறது பிலிம் சோர்சிங் தளம்.
இப்படி அந்த தளம் உருவாக்கிய பொய்யான
தேடியந்திரம் தான் குவைரோ ( ) . இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தி தேடல் காட்சியை படமாக்கி கொள்ளலாம். தேடியந்திரத்தை பயன்படுத்தியது போலவும் இருக்கும், ஆனால் காப்புரிமை சிக்கல் எதுவும் வராது.
பிலிம்சோர்சிங் தளம் திரைப்பட உருவாக்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் சேவைகளை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்படி பொய்யான தேடியந்திரத்தை பயன்படுத்தும் சேவையை அளிக்கிறது.
இணைப்பு: https://www.filmsourcing.com/fake-search-engine-for-film-and-tv
=-