நீங்கள் வரையில் கோடுகளை ஓவியமாக்கித்தருவதற்காக கூகுள் நிறுவனம் சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோடிரா எனும் அந்த தளம், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கிறுக்கல்களை கூட அழகான சித்திரங்களாக மாற்றிக்காட்டுகிறது.
இணையத்தில் ஆட்டோகரெட்க் எனும் வசதியை நீங்கள் அறிந்திருக்கலாம். குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்யத்துவங்கும் போதே அது இந்த வார்த்தையாக இருக்கலாம் எனும் அனுமானத்தில் தொடர்புடைய வார்த்தை முன்வைக்கப்படும். பொருத்தமான வார்த்தை எனில் அதையே தேர்வு செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனிலும் இந்த வசதியை காணலாம்.
ஏறக்குறைய இதே வசதியை கூகுள் இப்போது சித்திரங்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான உருவாக்கப்பட்டுள்ள ஆட்டோடிரா தளத்தில் இள்ள டிஜிட்டல் பலகைகயில் தூரிகையை தேர்வு செய்து வரையத்துவதுவங்க வேண்டும். உருவத்தை வரையும் போது, தளம் அதன் போக்கை ஊகித்து, தொடர்புடைய சித்திரங்களை பரிந்துரைக்கும். பொருத்தமானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
உதாரணத்திற்கு, பறவைக்கான மூக்கை வரைந்தால் அழகான பறவை சித்திரத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
நாம் வரையும் கோடுகளுக்கு ஏற்ப முழுச்சித்திரங்களுக்கான பரிந்துரை, மேலே தோன்றிக்கொண்டே இருக்கின்றன. மிகவும் சுவாரஸ்யமான சேவை. அவசரமாக ஏதேனும் வரைய வேண்டும் எனில் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இணைய முகவரி: https://www.autodraw.com/
செயலி புதிது; பண்டமாற்று செயலி
பயன்படுத்திய பொருட்களை வேறு நல்ல பொருட்களுக்கு மாற்றிக்கொள்ளும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஸ்வாப்ட் செயலி அறிமுகமாகியுள்ளது.
இந்த செயலியை தரவிறக்கம் செய்ததும், பயனாளிகள் தாங்கள் மற்றவர்களுடம் பரிமாறிக்கொள்ள விரும்பும் பொருட்கள் பற்றிய தகவலை பதிவேற்றலாம். மற்ற பயனாளிகள் இப்படி பதிவேற்றியுள்ள பொருட்களையும் பார்வையிடலாம். அவற்றில் ஏதேனும் பிடித்திருந்தால் தங்கள் வசம் உள்ள பொருளுடன் மாற்றிக்கொள்ளலாம். பொருட்தமான பொருளை தேர்வு செய்வதற்காக பயனாளிகளுடன் இணைய அரட்டையில் ஈடுபடும் வசதியும் இருக்கிறது. பொருட்களின் ஒளிப்படத்துடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
இப்படி புத்தகம், செயற்கை நகைகள், பழைய சோபா என எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என ஸ்வேப்டு செயலி தெரிவிக்கிறது. பேஸ்புக் பயனர் பெயர் கொண்டு உள்ளே நுழையலாம். தரவுகளை பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு அனுமதியை பெற்று உள்ளே அனுமதிக்கிறது.
அதன் பின் பயனாளிகள் தங்களுக்கான அறிமுக பக்கத்தை உருவாக்கி கொண்டு இந்த சேவையை பயன்படுத்தலாம்.
பண்டாமாற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த செயலி சுவாரஸ்யத்தை அளிக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் செயல்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு: http://swapd.in/