அலுப்பூட்டும் தகவல்களையும், தரவுகளையும் சுவாரஸ்யமான அசையும் படங்களாக மாற்றும் வகையிலான இணையதளத்தை தேடியந்திர நிறுவனமான கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
டேட்டாஜிப்மேக்கர் வித் கூகுள் எனும் இந்த இணையதளம் மூலம் பலவகையான புள்ளிவிவரங்கள் சார்ந்த தகவல்களை ஜிவ் வடிவிலான அசையும் சித்திரங்களாக மாற்றித்தருகிறது. வாக்கெடுப்பு விவரங்கள், திரைப்பட ரேட்டிங் பட்டியல், விற்பனை விவரங்கள் போன்ற தகவல்களை இதன் மூலம் ஜிப் வடிவில் உருவகப்படுத்தலாம்.
பயனாளிகள் தங்கள் வசம் உள்ள தகவல்களை சமர்பித்து, அவற்றை ஒப்பிட வேண்டிய முறையையும் குறிப்பிட்டால் ஜிப் வடிவில் மாற்றித்தருகிறது இந்த தளம். ஜிப்பில் இடம்பெறும் வண்ணங்களையும் தேர்வு செய்யலாம். அறிமுகம் வாசகங்களை இதனுடன் இணைக்கலாம்.
செய்தியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பினருக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
இணைய முகவரி: https://datagifmaker.withgoogle.com/edit
செயலி புதிது: ஒளிபட கலைக்கு ஒரு வழிகாட்டி
ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் ஒளிப்படங்களை இஷ்டம் போல எடுத்து தள்ளலாம் என்றாலும், ஓளிப்படக்கலை தொடர்பான அடிப்படைகளை தெரிந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்களுக்கும் இப்படி ஒளிப்படக்கலையின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால் லேர்ன் போட்டோகிராபி செயலி உதவியாக இருக்கும்.
ஒளிப்படம் எடுக்கும் கலை தொடர்பான பாலபாடத்தில் துவங்கி, காமிரா வகை, லென்ஸ் செயல்முறை என பல விஷயங்களை கற்றுக்கொள்ள இந்த செயலி உதவுகிறது. ஒளிப்படக்கலையின் அடிப்படை அம்சங்களை கற்றுக்கொள்வதோடு ஒளிப்படக்கலை நுட்பங்களையும் கற்றுக்கொள்ளலாம்.
அடிப்படை பாடங்கள், மேம்பட்ட நுணுக்கங்கள் என பல பகுதிகளை இந்த செயலி கொண்டுள்ளது. நுணுக்கங்கள் மற்றும் ஒளிப்பட வகைகளுக்கான தனிப்பகுதியும் இருக்கிறது. காமிராக்களை தேர்வு செய்யவும் கற்றுக்கொள்ளலாம். அதே போல ஒளி அமைப்புகள் பற்றியும் நுணுக்கங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு: http://bit.ly/2rUs7nm