புதிதாக படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பெஸ்ட் செல்லர் பட்டியல், வல்லுனர்களின் பரிந்துரை என நீளும் இந்த வழிகளில் கொஞ்சம் சுவாரஸ்யமான புதிய வழியாக கவர்ஸ்பை தளம் அறிமுகமாகியுள்ளது.
டம்ப்ளர் வலைப்பதிவு சேவையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் வாயிலாக புதிய புத்தகங்களை அவற்றின் முகப்பு பக்கங்களாக அறிமுகம் செய்து கொள்ளலாம். இந்த புத்தகங்கள் எல்லாம் எப்படி தேர்வு செய்யப்படுகின்றன தெரியுமா? எல்லாமே புத்தக புழுக்கள் பொது இடங்களில் கையில் வைத்திருக்கும் புத்தகங்கள். ஆம், பொது போக்குவரத்து மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் புத்தக புழுக்கள் கையில் வைத்திருக்கும் புத்தகங்களை கண்டறிந்து அவற்றின் முகப்பு படம் இந்த தளத்தில் வெளியிடப்படுகிறது.
புத்தக அட்டைப்படம் மற்றும் அவை கண்டெடுக்கப்பட்ட இடம் மட்டுமே இடம்பெறுகிறது. புத்தகம் தொடர்பான விமர்சன குறிப்புகள் எல்லாம் கிடையாது.
ஆக, ஒருவிதத்தில் வாசகர்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களை தெரிந்து கொள்ளலாம். இவை இயல்பான பரிந்துரையாகவும் அமையும்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துவங்கி மற்ற நகரங்களுக்கும் விரிவாகி இருக்கிறது. இந்த வரிசையில் தில்லியும், மும்பையும், நம்ம சென்னையும் இடம்பெறும் வாய்ப்புள்ளதா என தெரியவில்லை.
இணை முகவரி: http://coverspy.tumblr.com/
செயலி புதிது; ஒலிகளை கேட்க உதவும் செயலி
இசை கேட்பது மன அமைதிக்கு உதவுவது போலவே, விரும்பமான ஒலிகளை பின்னணில் கேட்டுக்கொண்டிருப்பதும் மனநிலை மேம்பட உதவும். மழை பெய்து கொண்டிருக்கும் ஓசை, காற்று வீசும் ஒலி ஆகியவற்றை பின்னணியில் கேட்டுக்கொண்டிருந்தால் மன ஒரு நிலைப்படும். பணியில் கவனச்சிதறலை தவிர்ப்பதில் துவங்கி, இரவு தூக்கம் வரவைத்துக்கொள்வது வரை பலவற்றுக்கு இப்படி பின்னணி ஒலிகளை பயன்படுத்தலாம்.
இத்தகைய ஒலிகளை கேட்டு ரசிக்க வழி செய்யும் இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில் ஏ சாப்ட் மர்மர் செயிலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் மழை, இடியோசை, காபி ஷாப் சத்தம், பறவைகள் கீதம் என பலவித ஒலிகளை கேட்கும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். ஒலிகளை கலந்து கேட்கும் வசதியும் இருக்கிறது. ஒலிகளுக்கான நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். ஒலிகளை சமூக ஊடகம் மூலம் நட்பு வட்டத்தில் பகிரவும் செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு: http://asoftmurmur.com/
——-