மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், ’டக்டக்கோ’ கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டக்டக்கோ இணைவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவது தான். ஆம், இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை கண்காணிப்பதில் ஈடுபடாமல் இருப்பதும், அவர்களைப்பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதும் டக்டக்கோவின் தனிச்சிறப்பாக அமைகிறது. இணையத்தில் தகவல்களை தேடுவதற்காக டக்டக்கோவை பயன்படுத்தும் போது, நீங்கள் யார் என்பதை அது கவனிக்காமல் இருக்கிறது. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.
எனவே உங்கள் இணைய தேடல் அனாமதேயமாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களும் டக்டக்கோவை பயன்படுத்திப்பார்க்கலாம். பிரைவசி பாதுகாப்பு பிரதான அம்சம் என்றாலும், டக்டக்கோவுக்கு மாறலாம் என நினைப்பதற்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ பல தனித்தன்மையான சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் பல பிரத்யேகமானவை என்பது குறிப்பிடத்தக்கது:
ஸ்டாப்வாட்ச்
நீங்கள் விரும்பினால் டக்டக்கோவை ஸ்டாப்வாட்சாக பயன்படுத்தலாம். இதன் கட்டத்தில் ஸ்டாப்வாட்ச் என டைப் செய்தால் போதும், அதற்கான கடிகாரம் தோன்றும். அதில் உங்களுக்கு தேவையான நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். அது மட்டும் அல்ல, அடுத்தடுத்து வேலைகள் இருப்பின், லேப் வசதி மூலம் தொடச்சியாக பயன்படுத்தலாம். இதே முறையில் டைமர் சேவையையும் பயன்படுத்தலாம். டைமரில் நேரம் முடிந்ததும் அலாரமும் ஒலிக்கும்.
பெரிய எழுத்துக்கள்
ஆங்கில வாசகங்களில் தேவையான இடங்களில் கேபிடல் எழுத்துக்களை அமைக்க விரும்பினால் அதற்கான வசதியையும் இந்த தேடியந்திரம் வழங்குகிறது. வாசகத்தை டைப் செய்து அதற்கு முன் டைடில் கேஸ் என குறிப்பிட்டு இடைவெளி விடுவதன் மூலம் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துக்களை லோவர் கேஸ் அல்லது அப்பர் கேசாக மாற்றவும் இதை பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
செய்திகளை தேட
கூகுளில் தகவல்களை தேடும் போது, தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கும். ஆனால் டக்டக்கோ தேடல் முடிவுகளை மட்டுமே அளிக்கிறது. இருப்பினும் செய்திகளும் இடம்பெற விரும்பினால், தேடலுக்கான கீவேர்டு முன் அல்லது முடிவில் நியூஸ் என சேர்த்துக்கொண்டால் போதும், தொடர்புடைய செய்திகளையும் காணலாம். 100 க்கும் மேற்பட்ட தளங்களில் இருந்து செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.
பிடிஎப் கோப்புகள்
டக்டக்கோவில் எச்.டி.எம்.எல் கோப்புகளையும் எளிதாக தேடலாம். எச்.டி.எம்.எல்: என குறிப்பிட்டால் பொருத்தமான முடிவுகளை காணலாம். புரோகிராமிங் சிறப்பு குறியீடுகளையும் தேடலாம். இதே போல பிடிஎப் கோப்புகள் அல்லது மின் புத்தகங்களை எதிர்பார்க்கும் போது, கீவேர்டுடன் பிடிஎப் எனும் வார்த்தையை சேர்த்துக்கொண்டால் போது, இத்தகைய கோப்புகளை மட்டும் தேடலாம்.
நெத்தியடி தேடல்
சில நேரங்களில் ஒட்டுமொத்த இணைய கடலிலும் தேட விரும்பாமல் குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட விரும்பலாம். இதற்கும் டக்டக்கோவில் வழி இருக்கிறது. இந்த வசதி ஐபேங்க் என சொல்லப்படுகிறது. தேடல் பதத்திற்கு முன் ஆச்சர்யக்குறியை சேர்த்து, குறிப்பிட்ட தளத்திற்கான முதல் எழுத்தை குறிப்பிட்டால் போதும், அந்த ஒரு தளத்தில் மட்டும் தேடலாம். உதாரணத்திற்கு !a என்றால் அமேசான் தளத்தில் தேடலாம். இப்படி நூற்றுக்கணக்கான தளங்களில் நேரடியாக தேடும் வசதியை அளிக்கிறது. இதற்கான நீண்ட பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது: https://duckduckgo.com/bang
ஆய்வுப்பிரிவிலும் தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வளவு ஏன், இந்த வசதியை பயன்படுத்தி கூகுளிலும் தேடலாம் தெரியுமா? https://duckduckgo.com/bang?q=google
உடனடி பதில்கள்
இன்ஸ்டண்ட் ஆன்சர்ஸ் எனும் பெயரில் உடனடி பதில்களையும் டக்டக்கோ வழங்கி வருகிறது. குறிப்பிட்ட பல கேள்விகள் அல்லது பதங்களுக்கு தேடல் வார்த்தையை டைப் செய்ததுமே பொருத்தமான பதிலை காணலாம். கிளிக் செய்யாமலே தேடும் வசதி எனும் வர்ணனையோடு டக்டக்கோ இதை அறிமுகம் செய்தது. கூகுள் நாலட்ச் கிராப் எனும் பெயரில் இது போன்ற வசதியை வழங்கினாலும், முதலில் டக்டக்கோ தான் இதை அறிமுகம் செய்தது.
வீடியோ தேடல்
வீடியோ கோப்புகள் மட்டும் தான் தேவை எனில் தேடல் பதத்திற்கு முன் வீடியோ என சேர்த்துக்கொண்டால் 28 வீடியோக்கள் வந்து நிற்கின்றன. மேலும் வீடியோக்கள் தேவையில் எனில் அதற்கான வசதியை கிளிக் செய்யலாம். சமையல் குறிப்பு வீடியோக்கள் என்று குறிப்பிட்டும் தேடலாம். இந்த முடிவுகள் யூடியூப் மட்டுமே சார்ந்திருப்பது தான் ஒரே குறை.
குறுக்கு வழிகள்
இணையசேவைகளுக்கான கீபோர்டு சார்ந்த குறுக்கு வழிகள் தேவை எனில், சீட்ஷீட் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்திற்கு போட்டோஷாப் சீட்ஷீட் என தேடினால் போட்டோஷாப் தொடர்பான குறுக்கு வழிகளை பெறலாம். புரோகிராமிங் தொடர்பான தகவல்களையும் எளிதாக தேடலாம்.
டக்டக்கோவில் இன்னும் கூட பல அம்சங்கள் இருக்கின்றன. எல்லாம் சரி, கூகுள் போல வருமா? என கேட்பவர்களுக்காக கூகுல் தொடர்புடைய சுவாரஸ்யமான தகவல் ஒன்று. கூகுளில் ஏதேனும் பிரச்சனையா? எனும் பொருள்பட, ஈஸ் கூகுள் டவுன் என கூகுளில் கேட்டால், இல்லை (நோ) என பதில் பளிச் என தோன்றுகிறது.
–
நன்றி; தமிழ் இந்து இளமை புதுமையில் எழுதியது.
டக்டக்கோ தொடர்பான முந்தைய பதிவுகள்: http://cybersimman.com/?s=%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B