கூகுள் கண்ணாடியை நினைவு இருக்கிறதா? வியரபில் எனப்படும் அணி கணிணி பிரிவில் கூகுள் கிளாஸாக இது அறிமுகமானது. ஆனால், இந்த அதி நவீன மூக்கு கண்ணாடி அதிக ஆரவாரத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. பின்னர் கூகுள் இதை விலக்கி கொண்டுவிட்டது. நிறுவன பயன்பாட்டிற்கான மாதிரியாக மட்டும் இது தொடர்கிறது. இணைய பக்கங்களை வாசிக்க கூடிய திரையாக திகழும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருந்த கூகுள் கண்ணாடி எதிரே உள்ளவரை படமெடுக்கும் ஆற்றலும் கொண்டிருந்தது. இந்த தன்மைக்காகவே அது சர்ச்சைக்கும் இலக்கானது.
இப்போது கூகுள் வெள்ளோட்டம் விட்டிருக்கும் கூகுள் கிளிப்ஸ் காமிராவை பார்த்தால், கூகுள் கிளாஸ் நினைவுக்கு வராமல் இல்லை. ஸ்மார்ட் காமிரா என சொல்லப்படும் கூகுள் கிளிப்ஸ் உள்ளங்கைக்குள் அடங்கிவுடக்கூடிய சதுர வடிவ காமிராவாக இருக்கிறது. அண்மையில், பிக்சல்-2 நிகழ்ச்சியில் கூகுள் அறிமுகம் செய்த புதிய பிக்சல் போன், உள்ளிட்ட சாதனங்களுக்கு மத்தியில், விரைவில் வருகிறது எனும் அறிவிப்புடன் கிளிப்ஸ் காமிராவும் அறிமுகம் செய்யப்பட்டது.
சட்டை பாக்கெட் அல்லது பர்சில் வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு கச்சிதமான இந்த இரண்டுஅங்குல காமிராவின் பர்ஸ்ட்லுக் அனுபவத்தை தொழில்நுட்ப இணைய இதழான தி வெர்ஜ், விரிவாக விவரித்துள்ளது. முதல் பார்வைக்கு கூகுள் கிளிப்ஸ் வியக்க வைக்கிறது.
இந்த காமிராவில் சின்னஞ்சிறிய லென்ஸ் மட்டும் தான் இருக்கிறது. மற்றபடி இதில் வியூபைண்டர் எல்லாம் கிடையாது. ஏனெனில் இந்த காமிரா தானாக படம் எடுத்துக்கொள்ளும். எனவே இதை கையில் வைத்து க்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டின் எங்காவது ஒரு முளையில் தொங்கவிட்டால் போதும் அது தானாக படம் எடுத்து பதிவு செய்து கொள்ளும். இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு இரண்டும் இணைந்த கலையில் இது செயல்படுவதால், காட்சிகளை தானாக உணர்த்து கிளிக் செய்து விடுகிறது. அது மட்டும் அல்ல, தான் பார்க்கும் முகங்களை நினைவில் நிறுத்துக்கொள்ளும் ஆற்றலும் கொண்டிருக்கிறது. ஆக, நாளடைவில் இது முகங்களை நன்றாக பரீட்சயம் செய்து கொண்டு, அறிமுகம் இல்லாதவர்களை படம் எடுப்பதை தவிர்க்கவும் கற்றுக்கொண்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றபடி வீட்டில் இருக்கும் போது, சுவாரஸ்யமான தருணங்கள் என கருதப்படும் காட்சிகளை அது படமெடுத்தபடி இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ஏழு நொடி ஓடக்கூடியதாக இருக்கும். இவற்றில் இருந்து தேவையான காட்சியை தேர்வு செய்து புகைப்படமாக மாற்றிக்கொள்ள்லாம். அப்படியே தொடர் படமாகவும் பயன்படுத்தலாம். ஆனால் ஒலி வசதி கிடையாது. எனவே வீடியோ என்று சொல்ல முடியாது.
காமிராவுடன் இணைக்கப்பட்ட பிரத்யேக செயலி மூலம் ஸ்மார்ட்போனில் படங்களை பார்க்க முடியும். அதிலேயே சேமித்துக்கொள்ளலாம். தேவை எனில் கையாலும் இதில் படமெடுக்கலாம். இதற்கான ஷட்டர் வசதி இருந்தாலும், இந்த காமிராவை அதன் போக்கில் விட்டு விடுவது தான் சிறந்தது என கூகுள் நினைக்கிறது. உதாரணத்திற்கு மழலைகள் உள்ள வீட்டில் பாசமிகு பெற்றோர்கள் கிளிப்ஸ் காமிராவை ஒரு மேஜையில் பொருத்தி விட்டால், மழழலையின் குறும்புகளும், மந்தகாசமான புன்னகைகளும் அழகாக பதிவாகி இருக்கும். பெற்றோர் அருகே இல்லாவிட்டால் கூட, காமிரா கச்சிதமாக குழந்தையின் பொன்னான தருணங்களை பதிவு செய்து கொள்ளும். சும்மா இல்லை, 130 கோணத்தில் விசாலமாக பார்த்து காட்சிகளை படமெடுக்கும் ஆற்றலும் கொண்டுள்ளது.
இந்த காமிரா, ஆக்ஷன் காமிராவாக வர்ணிக்கப்படும் கோ புரோ காமிரா மற்றும் ஸ்னேப்சேட் நிறுவனத்தின் ஸ்பெக்டகல் கண்ணாடிக்கு போட்டியாக சொல்லப்பட்டாலும் உண்மையில் கூகுள் இதை பெற்றோர்களை இலக்காக கொண்டு களமிறக்க உள்ளது. குழந்தைகள் மட்டும் அல்லாமல் செல்லப்பிராணிகள் மீது பாசம் கொண்டவர்களும் இந்த காமிராவை பயன்படுத்தலாம்.
சுற்றுப்புறத்தை புரிந்து கொண்டு, அதில் தென்படும் முகங்களை உணர்ந்து கொண்டு தானாக படமெடுக்கும் காமிரா, தானாக படமெடுக்கப்படும் போது சிக்க கூடிய அற்புதமான தருணங்களை நினைத்துப்பார்த்து வியக்க வைத்தாலும், இன்னொரு பக்கம் இது அந்தரங்கத்தின் மீதான ஊடுருவலாக அமைந்துவிடாதா எனும் கேள்வியும், அச்சமும் எழாமல் இல்லை.
கூகுள் இதை உணராமல் இல்லை. அதானால் தான் காமிரா என்று எல்லோரும் உணர்ந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளியாகும் சிவப்பு ஒளியும் காமிரா படமெடுத்துக்கொண்டிருப்பதை உணர்த்தும் என்பதால் எதிரே இருப்பவர்கள் அறியாமல் படமெடுக்கப்படும் அபாயம் இல்லை, தவிர இதன் பயன்பாடு பெரும்பாலும் வீட்டு சூழலில் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பும் மாறுபட்டதாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும், இதில் பதிவாகும் காட்சிகள் வேறு எங்கும் தானாக சேமிக்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே கிளவுட் வசதியில் ஒருங்கிணைக்கப்படும். எனவே புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பும் குறைவு என கருதலாம். இந்த காமிரா அதன் உரிமையாளருக்கே விசுவாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் தெரிந்த முகங்களுக்கு பழகி அவர்களை படமெடுக்கவே முற்படும் என்பதால் பூங்காவில் சென்று அமர்ந்திருக்கும் போது கூட, மற்ற குழந்தைகளை விட்டு, உரிமையாளர் குழந்தையின் விளையாட்டையே இது பதிவு செய்ய முற்படும். எல்லாம் செயற்கை நுண்ணறிவு செய்யும் மாயம்.
தினசரி வாழ்க்கை காட்சிகளை இடைவிடாமல் பதிவு செய்யும் வசதி தொழில்நுட்ப உலகில் லைப்லாகிங் என சொல்லப்படுகிறது. புதுமையான கருத்தாக்கம் என்பதை கடந்து இது நடைமுறை வாழ்க்கையில் இன்னும் பயன்பாட்டிற்கு வந்துவிடவில்லை. ஒருவிதத்தில் கூகுள் காமிராவும் இந்த பிரிவின் கீழ் தான் வருகிறது. இந்த காமிரா எந்த வகையான வரவேற்பை பெறுகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் இதை தனித்து பார்ப்பதற்கு இல்லை. ஸ்மார்ட்போன் தவிர வீடுகளில் தானியங்கி சாதனங்கள் நுழையத்துவங்கிவிட்டன. அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இந்த வகை சாதனங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. கூகுளும் தன்பங்கிற்கு கூகுள் ஹோம் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறது. வீடுகளை இல்லங்களை ஸ்மார்ட் இல்லமாக்கும் போட்டியில் கூகுளும் தன்னை தீவிரமாக இணைத்துக்கொண்டுள்ளது. இதனால் சராசரி வாழ்க்கை மேம்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான் அல்லவா!
வீடியோ புதிது: அழுகையின் பின்னே உள்ள அறிவியல்
ஆனந்தத்திலும் கண்ணீர் பெருகலாம், சோகத்திலும் கண்ணில் நீர் வரலாம். இன்னும் பல காரணங்களினால் கண்ணீர் பெருகலாம். எல்லாம் சரி, கண்ணீர் ஏன் வருகிறது என்பது தெரியுமா? இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள விரும்பினால், ஆசாப் சயின்ஸ் யூடியூப் சானலின் நாம் ஏன் கண்ணீர் விடுகிறோம் எனும் வீடியோவை பார்க்கலாம். அழுகையின் பின்னே உள்ள விஞ்ஞானத்தை மிக எளிதாக இந்த வீடியோ விளக்குகிறது. சராசரி கண்ணீர், அன்னிச்சை உணர்வாக வரும் கண்ணீர், உணர்ச்சி பெருக்கால் வரும் கண்ணீர் என அழுகையில் அடிப்படையில் மூன்று வகை இருப்பதை தெரிந்து கொள்வதோடு, ஆனந்தக்கண்ணீர் மற்றும் உணரச்சி பெருக்கிலான கண்ணீர் உள்ளிட்டவை, பரிணாம நோக்கில் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கான சமிக்ஞ்சை என்பது உள்ளிட்ட விளக்கத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
வீடியோவை காண: https://www.youtube.com/watch?v=QGdHJSIr1Z0
—
செய்தி புதிது; 360 கோணத்தில் காணும் வசதி
விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் 360 கோணத்திலான வீடியோக்கள் தான் அடுத்த பெரிய சங்கதி என பேசப்படுகிறது. இந்த வசதியை அளிக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனங்களும் வரிசையாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த வகை உள்ளடக்கத்தை காண்பதில் சிக்கல் இல்லாமல் இல்லை. இந்த வீடியோக்களை டவுண்லோடு செய்த பிறகு அவற்றை காண தனியே பிளேயரை பயன்படுத்த வேண்டும். இந்த குறையை போக்கும் வகையில், முன்னணி பிரவுசர்களில் ஒன்றான ஓபரா விர்ச்சுவுவல் ரியாலிட்டி காட்சிகளுக்கான பிளேயர் வசதியையும் தனது பிரவுசரில் இணைத்துள்ளது. இதன் மூலம், பயனாளிகள் வி.ஆர் சாதங்களை மாட்டிக்கொண்டு எந்த சிக்கலும் இல்லாமல் மெய்நிகர் உலகில் பயணிக்கலாம். இதற்கென தனியே பிளேயரை டவுண்லோடு செய்யவேண்டிய அவசியமில்லை.
—
தகவல் புதிது: நோபல் பரிசு தகவல்களை அறிய …
நோபல் பரிசு தொடர்பான அறிவிப்புகளையும், செய்திகளையும் ஒரே இடத்தில் அறிய விருப்பம் எனில், நோபல் விருது குழுவின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தை பின் தொடரலாம். (@NobelPrize) நோபல் குழுவின் அறிவிப்புகள் அனைத்தும் இந்த பக்கத்தில் குறும்பதிவுகளாக சுடச்சுட பகிரப்படுகின்றன. அறிவிப்புகள் தவிர நோபல் பரிசு தொடர்பான முக்கிய செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகளையும் ரிடிவீட் வடிவில் அறியலாம். டிவிட்டரில் இருப்பவர்கள் தாங்கள் பின் தொடரும் டிவிட்டர் முகவரிகளில் இந்த முகவரியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
—
தளம் புதிது: நேரம் என்ன நேரம்!
நவீன உலகில் இரவு பகல் பார்க்காமல் தான் உழைக்க வேண்டியிருக்கிறது. அதோடு, நம்முடைய பணி தொடர்புகள் உலக அளவில் விரிந்திருப்பதால், நாம் பகலில் பணியாற்றும் போது, மறுமுனைவில் இருப்பவர்களுக்கு அது இரவா, பகலா என அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. இதற்கு உதவும் வகையில், உலக நேரங்களை உள்ளூர் நேரத்திற்கு ஏற்ப மாற்றிக்காட்டுகிறது ’மைடைம்சோன்’ இணையதளம். குரோம் பிரவுசருக்காக இது வழங்கும் நீட்டிப்பு சேவை மூலம், இந்த வசதியை மிக எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்திற்கு இமெயில் மூலம் வெளிநாட்டில் உள்ள ஒருவருடன் சந்திப்புக்கான திட்டமிடலில் ஈடுபடும் போது, இங்குள்ள நேரத்தை குறிப்பிட்டு சம்மதமா என கேட்கும் போது, வலப்பக்கமாக கிளிக் செய்தால், மெயிலை பெறுபவர் ஊரில் என்ன நேரம் என மாற்றிக்காட்டுகிறது.
இணைய முகவரி: https://mytimezone.io/
–