இணையத்தில் நட்சத்திரங்களுக்கும், பிரபலங்களுக்கும் தான் ரசிகர்கள் இருப்பதாக நினைத்துவிட வேண்டாம், விஞ்ஞானிகளுக்கும் அபிமானிகள் இருக்கின்றனர். ஸ்டீபன் ஹாக்கிங் ஆய்வுக்கட்டுரையை வாசிக்கு ஆர்வத்தால் அவரது அதி தீவிர ரசிகர்கள் முற்றுகையால், அதை வெளியிட்ட இணையதளம் முடங்கியதாக வெளியான செய்தியே இதற்கு சான்று.
வாழும் விஞ்ஞானிகளில் மகத்தானவர்களில் ஒருவராக போற்றப்படும் ஸ்டீபன் ஹாகிங், அறிவியலும் அற்புதமானது, அதைவிட வாழ்க்கை அதி அற்புதமானது. மோட்டார் நியூரான் கோளாறால் பாதிக்கப்பட்டதன் விளைவாக சக்கர நாற்காலியில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டாலும் அவரது அறிவியல் செயல்பாடுகள் தளர்வில்லாமல் துடிப்பாகவே தொடர்கிறது. நோயின் தாக்கம் காரணமாக அவரால் பேச முடியாவிட்டாலும், தனக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பேச்சு மாற்று மென்பொருள் மூலம் உலகுடன் தொடர்பு கொண்டு தனது அறிவியல் சிந்தனைகள் மற்றும் ஆய்வு கருத்துகளை அவர் தொடர்ந்து உற்சாகமாக பகிர்ந்து கொண்டு வருகிறார்.
பிரபஞ்சத்தின் தோற்றம், கருந்துளைகளின் ரகசியம் பற்றி எல்லாம் தீவிரமாக ஆய்வு செய்து வரும் ஹாக்கிங் செயற்கை நுண்ணறிவு பற்றி எல்லாமும் தொடர்ந்து பேசி வருகிறார். அவரைப்போலவே அவரது ஆய்வுகளும், பேச்சுகளும் ஊக்கம் அளிக்க கூடியது. அறிவியல் வழியே, பிரபஞ்ச ரகசியத்தை அறிந்து கொள்ள துடிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஹாக்கிங்கின் கருத்துக்கள் கலங்கரை விளக்கம் போன்றவை.
காலத்தின் சுருக்கமான வரலாறு போன்ற பெஸ்ட் செல்லர் புத்தகங்கள் மூலம் வெகுமக்கள் மத்தியிலும் பிரபலமாக விளங்கும் ஹாக்கிங், பேசினாலோ அல்லது மாநாட்டில் உரையாற்றினாலோ அவை தப்பாமல் தலைப்புச்செய்தியாகிவிடும். அப்படி இருக்க அவரது பிஎச்டி ஆய்வை கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரது அபிமானிகள் சும்மா இருந்துவிடுவார்களா என்ன? அதை பயன்படுத்திக்கொள்ள படையெடுத்துவிட மாட்டார்களா என்ன?
அது தான் இப்போது நடந்திருக்கிறது.
இங்கிலாந்தின் கேம்பிர்ட்ஜில் பிறந்து வளர்ந்த ஹாக்கிங், ஆக்ஸ்போர்ட் பல்கலையில் படித்து முடித்த பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலையில் பிஎச்டி பட்டம் பெற்றார். பிஎச்டிக்காக அவர் விரிவடையும் பிரபஞ்சத்தின் கூறுகள் எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார். இது பழைய கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதன் பிறகு அவர் டாக்டர் பட்டம் பெற்று ஒரு பக்கம் தன்னை வறுத்தி முடக்கிக்கொண்டிருக்கும் நோயுடன் விடாமல் போராடியபடி, பிரபஞ்சத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு தன்னை மகத்தான விஞ்ஞானியாக உயர்த்திக்கொண்டு விட்டார்.
இந்நிலையில், அந்த மகத்தான விஞ்ஞானியின் பிஎச்டி ஆய்வுக்கட்டுரையை படித்துப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் சும்மாவா? அதிலும் சும்மாவே கிடைக்கிறது என்றால் எப்படி!
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் அந்த ஆய்வுக்கட்டுரையை அண்மையில் பல்கலைகழக இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. 134 பக்கங்கள் கொண்ட அந்த கட்டுரையை வாசிக்க வேண்டும் எனில் இதற்கு முன்னர் 65 பவுண்ட் கட்டணம் செலுத்தினால் மட்டுமே சாத்தியம். அதையும் மீறி பலரும் அந்த கட்டுரையை ஆர்வத்துடன் வாசித்து வந்த நிலையில், ஆய்வுக்கட்டுரைகளை அனைவரும் எளிதாக அணுகும் வசதியை உறுதி செய்யும் கருத்தாக்கத்தை கொண்டாடும் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழகம் கடந்த 24 ம் தேதி இந்த கட்டுரையை அனைவரும் தரவிறக்கம் செய்து வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் 60,000 பேருக்கு மேல் இந்த கட்டுரையை தரவிறக்கம் செய்யும் ஆர்வத்துடன் இணையதளத்திற்கு வருகை தந்தனர். இந்த எதிர்பாராத படையெடுப்பால் இணையதளம் தாக்குபிடிக்க முடியாமல் தற்காலிகமாக முடங்கிப்போனது. ஹாக்கிங் ஆய்வுக்கட்டுரைக்கு பெருமளவு ஆதரவு குவிந்ததால் இணையதளம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக பல்கலைக்கழக செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
நிச்சயம் இந்த வரவேற்பு பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். அது மட்டும் அல்ல, ஹாக்கிங்கும் மகிழ்ந்திருப்பார். ஏனெனில் ஆய்வுக்கட்டுரையை இலவசமாக அணுக வழி செய்ய அனுமதி கேட்கப்பட்ட போது ஹாக்கிங் அதற்கு உற்சாகமாக ஒப்புக்கொண்டதோடு, அறிவியல் ஆர்வலர்களுக்கான செய்தியையும் அறிக்கையாக வெளியிட்டார். என்னுடைய கட்டுரையை எல்லோரும் அணுகி படிக்க வழி செய்திருப்பதன் மூலம் உலகம் முழுவதும் உள்ளவர்கள் குணிந்து கீழே பார்க்காமல், வானத்தை நோக்கி நட்சத்திரங்களை பார்ப்பதற்கான ஊக்கத்தை பெறுவார்கள் என நம்புகிறேன் என துவங்கும் அந்த அறிக்கையில், பிரபஞ்சத்தில் நம்முடைய இடம் பற்றி யோசித்து, பேரண்டம் பற்றியும் யோசிக்க இது தூண்டுதலாக அமையும் என குறிப்பிடுகிறார். உலகில் எந்த மூளையில் இருப்பவரும் என்னுடைய ஆய்வை மட்டும் எல்லா அனைத்து ஆய்வுகளையும் எளிதாக அணுகி படித்துப்பார்க்கும் வாய்ப்பை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹாக்கிங்கின் இந்த அறைகூவலை அறிவியல் ஆர்வலர்கள் தட்டாமல் ஏற்றுக்கொண்டுள்ளனர். நீங்களும் கூட அறிவியல் கடலில் நீந்த விரும்பினால் ஹாக்கிங் ஆய்வுக்கட்டுரையை தரவிறக்கம் செய்து படித்துப்பார்க்கலாம்.
எல்லாம் சரி இந்த ஆய்வுக்கட்டுரையில் ஹாக்கிங் என்ன எல்லாம் எழுதியிருக்கிறார்? பிரபஞ்ச உருவாக்கத்தில் ஈர்ப்பு விசையின் பங்கு, ஆதியில் நிகழ்ந்ததாக கருதப்படும் சிங்குலாரிட்டி, கருந்துளைகள், ஈர்ப்புவிசை கதிர்கள் பற்றி எல்லாம் விவரித்திருக்கிறார். இது அவரது ஆரம்ப கால ஆய்வு. ஹாக்கிங்கே இதை கடந்து வெகுதூரம் வந்துவிட்டார் என்றாலும், ஒரு மேதையின் தீர்க தரிசனத்தின் கீற்றுகளை கொண்ட இந்த ஆய்வுக்கட்டுரையை வாசித்து பார்க்கும் வாய்ப்பு அறிவியல் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
வால்; ஸ்டீபன் ஹாக்கிங் ஆய்வுக்கட்டுரைக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு பரபரபுக்கு மத்தியில் இந்த கட்டுரையை வாசித்த வாசகர் ஒருவர் அதன் முதல் பக்கத்திலேயே எழுத்துப்பிழை இருப்பதை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய தன் பங்கிற்கு கவனத்தை ஈர்க்க முற்பட்டார்.
–
ஹாக்கிங் ஆய்வுக்கட்டுரையை அணுக: http://schema.lib.cam.ac.uk/PR-PHD-05437_CUDL2017-reduced.pdf
–
நன்றி; மின்னம்பலம் இதழில் எழுதியது