போட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒளிபட கலைஞர், கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒளிபடங்களில் இணைத்து அசத்தியிருக்கிறார். ’என்னோடு இருக்கும் நான்’ எனும் கவித்துவமான தலைப்பில் இந்த திட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். சிறுவனான தன்னுடன் இப்போது வளர்ந்து பெரியவனாகிவிட்ட நிக்கர்சன் இணைந்திருக்கும் வகையிலான ஒளிப்படங்களை உருவாக்கி இருக்கிறார். இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். எல்லாம் போட்டோஷாப் மாயம் தான். ஆம் தன்னுடைய சிறுவயது படங்களை எடுத்துக்கொண்டு, அதில் தன்னுடைய இப்போதையை தோற்றத்தை போட்டோஷாப் மூலம் அழகாக ஒருங்கிணைத்து விட்டார். அதிலும் சிறு வயது போலவே உடைகளை அணிந்து கொண்டு ஒரே படத்தில் சின்ன பையனாகவும், பெரிய இளைஞனாகவும் அவர் காட்சி அளிக்கிறார். ஒளிப்பட ஆல்பங்களை வைத்துக்கொண்டு அந்த நாள் படங்களை புரட்டியை படி நிகழ்கால தோற்றத்தை ஒப்பிடுவது என்பதே சுவாரஸ்யமானது தான். அதை இன்னும் ஒரு படி உயர்த்தும் வகையில், கடந்த கால படத்திற்குள் இப்போதைய தோற்றத்தை இடம்பெற வைத்திருக்கிறார் நிக்கர்சன்.
இணைய முகவரி: https://www.conornickerson.com/en/projects/childhood
தேடியந்திரம் புதிது; பாட்காஸ்டிங் கேட்கவா!
வெப்காஸ்ட், பிராட்காஸ்ட் என்றெல்லாம் இருப்பது போல இணையத்தில் பாட்காஸ்டிங்கும் பிரபலமாக இருக்கிறது. ஒலி வடிவ நிகழ்ச்சிகளை சந்தா முறையில் பெற்று கையடக்க சாதனங்களில் கேட்டு ரசிப்பதற்கான முறையை தான் பாட்காஸ்டிங் என்கின்றனர். இந்த வகையில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுகின்றன. ஒலிப்புத்தகங்களில் துவங்கி பலவகையான ஆடியோ நிகழ்ச்சிகளை இந்த வடிவில் கேட்டு ரசிக்கலாம். இந்த வகையான சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை தேடித்தருவதற்காக என்றே லிஸின்நோட்ஸ் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேடியந்திரம் மூலம் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை எளிதாக தேடி கண்டறியலாம்.
தேடியந்திர முகவரி: https://www.listennotes.com/?s=logo
—
வீடியோ புதிது; கிளிக்பைட் வலைப்பற்றிய பாடல்
ஆசை காட்டி மோசம் செய்வது போல, இணையத்தில் ஏதாவது ஒன்றின் மூலம் ஆசை காட்டி ஆர்வத்தை ஏற்படுத்தி வில்லங்கமான இணைப்புகளை கிளிக் செய்ய வைக்கும் உத்தி கிளிக்பைட் எனப்படுகிறது. தேவையில்லாத விளம்பரங்களை கிளிக் செய்ய வைப்பது முதல் வைரஸ் இணைப்புகளை கிளிக் செய்ய வைப்பது வரை பலவிதமாக வலை விரிக்கப்பட்டு இணையவாசிகள் வீழ்த்தப்படுகின்றன. இந்த கிளிக்பைட் உத்தியின் விபரீத்தத்தை நகைச்சுவையாக உணர்த்தும் வகையில் அயர்லாந்து காமெடி குழு ஒன்று சூப்பரான பாடல் ஒன்றை படமாக்கி அதை யூடியூப் வீடிவோவாக வெளியிட்டுள்ளது.
கேட்டு ரசிக்கும் வகையில் உள்ள அந்த பாடல், இணையத்தில் உள்ள ஆபத்துகளையும் அழகாக சுட்டிக்காட்டுகிறது.
வீடியோவை காண; https://youtu.be/bVn7sLDhZBw