இண்டெர்நெட்டை பயன்படுத்துபவராக இருந்தால் நிச்சயம் கூகுலை பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.கூகுலை பயன்படுத்தினால் நிச்சயம் சுவையான கதைகள் இருக்கலாம்.இத்தகைய கதைகளை சமர்பிக்குமாறு கூகுல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதாவது கூகுலை பயன்படுத்தும்போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூகுல் வலைப்பதிவில் வெளியாகியுள்ள அறிவிப்பில் கூகுல் தொடர்பான உங்கள் கதையை அறீய ஆர்வத்தோடு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கூகுல் சேவை மூலம் நீங்கள் தேடிக்க்ண்டுபிடித்த தொலைந்து போன உறவினர் பற்றியோ அல்லது கூகுல் வரைபடம் மூலம் சுற்றுலா பயணத்தை திட்டமிட்டது குறித்தோ அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
கூகுல் சேவை எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கதைகளை கேட்பதாக கூகுல் தெரிவிக்கிறது.கூகுல் சேவையை மேலும் பட்டை தீட்டுவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை சொல்லமலே புரிந்து கொள்ளலாம்.
கூகுல் தொடர்ந்து முன்னிலை வகிக்க இது போன்ற ஈடுபாடே முக்கிய காரணம்.நம்பர் ஒன் மயக்கத்தில் கூகுல் ஒருபோதும் தூங்கியதில்லை.இந்த விழிப்பே கூகுலை உச்சத்தில் வைத்துள்ளது.
நிற்க கூகுல் கதை கோரும் பகுதியில் உதாரணத்திற்காக சுவையான கதை ஒன்று கொடுக்கப்படட்டுள்ளது.
அந்த கதை கனடாவை சேர்ந்த ஒருவர் தனத் தந்தையை கூகுல் மூலம் தேடி கண்டுபிடித்தது.
யானிக் கஸன் என்னும் அந்த மனிதரின் நெகிழ்ச்சியான கதை வருமாறு;
”எங்கள் வீட்டுக்கு இண்டெர்நெட் வந்த தினத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்து தந்தையை 17 ஆண்டிகளாக பார்த்ததில்லை.அவர் எங்கே இருக்கிறார் என்றும் தெரியாது.இண்டெர்நெட் வந்ததும் முதலில் கூகுலுக்கு சென்று அவரது பெயரை டைப் செய்து தேடிப்பார்த்தேன்.என்ன ஆச்சர்யம் முதல் முடிவே அவருக்கு கிடைத்த அரசு பதவி உயர்வு தொடர்பானது.மேலும் ஆச்சர்யம் என்ன்வென்றால் அந்த அறிவிப்பை வெளியிட்டவர் என் தந்தையும் வசிக்கும் இடத்திலேயே வசிப்பவர். அவர் மூலம் என் தந்தையை சுலபமாக கண்டுபிடித்து விட்டேன்”
இது எப்படியிருக்கு? இது தான் கூகுல்.
உங்கள் கூகுல் கதையை கூற….
link;
http://services.google.com/feedback/share_success

0 Comments on “உங்களிடம் கூகுல் கதை இருக்கிறதா?”
KRICONS
மீண்டும் வாழ்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது