பேஸ்புக் அனலிடிகா சர்ச்சை தகவல் திருட்டு பற்றிய கவலையையும், விழிப்புணர்வைவும் ஏற்படுத்தியிருப்பது நல்ல விஷயம் தான். பேஸ்புக் பயனாளிகள் மத்தியில் இது தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துமா எனத்தெரியவில்லை. ஆனால் நிலைத்தகவல் வெளியிடும் போது பலரும் கொஞ்சம் யோசிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், பிரச்சனை பேஸ்புக்குடன் நின்று விடவில்லை. தகவல் அறுவடை என்பது கூகுள் உள்ளிட்ட பெரும்பாலான இணைய நிறுவனங்கள் செய்து வருவது தான். இது தொடர்பான முக்கிய கட்டுரைகளும், குறிப்புகளும் இணையத்தில் வாசிக்க கொட்டிக்கிடக்கின்றன.
முக்கியமான இரண்டு இணைப்புகளை மட்டும் இங்கே குறிப்பிட விருப்பம்:
- அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்னர், ஐ.எஸ்.பி எனப்படும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் நெட்டிசன்கள் தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு விற்க அனுமதி தொடர்பான சட்டம் தொடர்பான விவாதமும், சர்ச்சையும் வெடித்தது. இந்த பின்னணியில் தரவுகள் பாதுகாப்பு மற்றும் பயனாளிகள் உரிமை பற்றி பலவிஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இவற்றுக்கு நடுவே, மிஷா காலின்ஸ் என்பவர், அமெரிக்க செனட் உறுப்பினர்களின் இணைய தகவல்களை வாங்குவதற்கான கோரிக்கையை முன்வைத்து அதற்கான இணைய நிதி திரட்டும் முயற்சியையும் துவக்கினார். எங்கள் தகவல்கள் விற்க நீங்கள் அனுமதி கொடுத்தால், உங்கள் தகவல்களை நாங்கள் வாங்க முற்படுவோம் என அவர் இந்த செயல் மூலம் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
தகவல் திருட்டு அல்லது திரட்டு பிரச்சனையின் தீவிரத்தை இதன் மூலம் அவர் புரிய வைக்க முயன்றார். இது தொடர்பான செய்தி இணைப்பு: http://thehill.com/policy/technology/326462-internet-users-raise-more-than-200000-to-buy-lawmakers-browsing-histories
- எல்லா நிறுவனங்களும் இணையத்தில் நமது தகவல்களை திரட்டி நம்மைப்பற்றிய சித்திரத்தை உருவாக்கி விளம்பரம் செய்ய முற்படுகின்றன. இவற்றில் இருந்து தப்பிப்பது எப்படி? பல வழிகள் இருக்கின்றன. அவற்றின் ஒன்று நாய்ஸ்லி எனும் புதுமையான சேவை. குரோம் நீட்டிப்பாக செயல்படும் இந்த சேவை, நம் சார்பில் பல்வேறு இணையதளங்களை விஜயம் செய்தது போன்ற தகவல்களை அளித்து, நம்மைப்பற்றி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களை குழப்புகிறது.
இந்தச்செய்திக்கான இணைப்பு: https://www.reddit.com/r/technology/comments/62ld8k/noiszy_a_browser_plugin_which_generates/
–