இணைய உலகில் புதிதாக சமூக வலைப்பின்னல் சேவை ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. இந்த செய்தி நம்மவர்களை நிச்சயம் உற்சாகத்தில் ஆழ்த்தும். ஏனெனில் ஹலோ எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கும் இந்த சேவையை துவக்கியிருப்பவர் வேறு யாருமல்ல, இந்தியர்கள் நன்கறிந்த ஆர்குட் சேவையின் நிறுவனர் தான்.
ஆர்குட் என்ற பெயரைக்கேட்டதுமே நம்மவர்களில் பலர் பிளேஷ்பேக் நினைவுகளில் மூழ்கிவிடலாம். சமூக வலைப்பின்னல் சேவையான ஆர்குட் பேஸ்புக்கிற்கு முன்னதாக அறிமுகமானதோடு, இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகவும் இருந்தது. முன்னாள் கூகுள் ஊழியரான ஆர்குட் புயுக்கோக்டென் (Orkut Buyukkokten ) எனும் மென்பொருளாலர் தான் ஆர்குட் சேவையை துவக்கியிருந்தார். பேஸ்புக் அலை அடிப்பதற்கு முன் ஆர்குட் மிகவும் பிரபலமாக இருந்தது. குறிப்பாக பிரேசில் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதற்கு அதிக பயனாளிகள் இருந்தனர்.
கூகுள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட இந்த சேவை 2014 ம் ஆண்டு மூடப்பட்டுவிட்டது. ஆர்குட் முடுவிழா அறிவிப்பு வெளியாக போது இந்திய நெட்டிசன்கள் சோகமயமாகி ஆர்குட் நினைவுகளில் மூழ்கி திளைத்தனர். அதன் பிறகு பலரும் பேஸ்புக்கில் ஐக்கியமாகி ஆர்குட்டை மறந்துவிட்டனர்.
இந்நிலையில், ஆர்குட் நிறுவனர் ’ஹலோ’ எனும் பெயரில் புதிய சமூக வலைப்பின்னல் சேவையுடன் திரும்பி வந்திருக்கிறார். மொபைல் போன்களில் செயலி வடிவில் பயன்படுத்தக்கூடிய ஹலோ சேவை பல மாத முன்னோட்ட சேவைக்குப்பிறகு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிமுகமாகியிருக்கிறது.
சமூக வலைப்பின்னல் சேவைகளில் முன்னணியில் திகழும் பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனலிடிகா பிரச்சனையில் சிக்கியிருப்பதோடு, பயனாளிகள் தகவல்களை கையாளும் விதம் தொடர்பாக கேள்விகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு வரும் நேரத்தில் ஹலோ சேவை இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கிறது.
ஹலோ மூலம் இந்தியாவுக்கு ஹலோ சொல்வதில் மகிழ்ச்சி அடைவதாக அதன் நிறுவனர் ஆர்குட் உற்சாகமாக கூறியிருக்கிறார். முன்னோட்ட வடிவிலேயே இந்தியாவில் இருந்து அதிக பயனாளிகள் இந்த சேவையை பயன்படுத்தி வருவதால் அவர் உற்சாகம் கொள்வதில் அர்த்தமும் இருக்கிறது.
எல்லாம் சரி, ஹலோ சேவை எப்படி? பலரும் சமூக வலைப்பின்னல் சேவை என்றால் கேள்விக்குறியுடன் பார்க்கத்துவங்கியிருக்கும் சூழலில், ஹலோ வரவு பொருத்தமானது தானா? இது போன்ற பல கேள்விகள் எழலாம். முழுக்க முழுக்க மொபைல் போனைச்சார்ந்து இயங்கும் ஹலோவை வழக்கமான சமூக வலைப்பின்னல் சேவைகளில் இருந்து வேறுபடுத்தும் தனித்தன்மையான அம்சங்கள் பல இருக்கின்றன. முதல் விஷயம் ஹலோ பயனாளிகள் ஆர்வத்தின் அடிப்படையில் இணைய சமூகங்களை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. இது பேஸ்புக் போல விருப்பங்கள் ( லைக்ஸ்) அடிப்படையில் செயல்படவில்லை, மாறாக நேசிக்கும் விஷயங்கள் ( லவ்ஸ்) அடிப்படையில் செயல்படுவதாக ஆர்குட் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
ஆர்குட்டின் ஆதார பலமே அதன் சமூகங்கள் தான். மக்களை அவர்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்கள் மற்றும் பொருட்கள் அடிப்படையில் ஒன்றாக இணைத்தது ஆர்குட் சேவை என்று கூறியுள்ளவர், ஆர்குட்டின் இரண்டாவது அவதாரமாக ஹலோவை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். சமூக வலைப்பின்னல் சேவைகளின் நோக்கமே தொடர்புகளை ஏற்படுத்துவது தான் எனும் நிலையில், சமூக வலைப்பின்னல் சேவை பயன்பாடு என்பது பகிர்வு என்பதில் இருந்து ஒளிபரப்பாக மாறிவிட்ட சூழலில் ஹலோ மறு அவதாரம் எடுத்திருக்கிறது.
பேஸ்புக் போல லைக்கள் மற்றும் நண்பர்கள் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல் பயனாளிகள் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டி அதன் மூலம் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள ஹலோ வழி செய்கிறது.
ஆனால் ஒன்று ஹலோ சேவை மாறுபட்டது மட்டும் அல்ல, முதல் பார்வைக்கு கொஞ்சம் சிக்கலானதாகவும் இருக்கிறது. ஹலோ சேவையின் பல்வேறு அம்சங்களை புரிந்து கொள்ள கொஞ்சம் மெனக்கெட வேண்டும். முதல் முறை பயன்படுத்த முற்படும் போது இந்த அம்சங்கள் குழப்பத்தை ஏற்படுத்தலாம். உங்களுக்கான ஆளுமைகளை (பர்சனா) உருவாக்குவது, கர்மா புள்ளிகள் பெறுவது, குறிப்புகளை (ஜாட்) எழுதுவது என்றெல்லாம் குறிப்பிடப்படுவது சிக்கலாக தோன்றலாம். ஆனால், இந்த சேவையின் அம்சங்கள் ஒவ்வொன்றாக புரிந்து கொண்டு முன்னேறினால் புதிய அனுபவமாக அமைவதை உணரலாம்.
ஹலோ சேவையை பயன்படுத்த முதலில் இதற்கான செயலியை டவுண்லோடு செய்து நிறுவ வேண்டும். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான செயலி வடிவம் இருக்கிறது. அடுத்த கட்டமாக செயலிக்குள் நுழைந்ததும், முதலில் உங்களுக்கு பிடித்தமான ஐந்து விஷயங்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக வரிசையாக பல தலைப்புகள் திரையில் முன்வைக்கப்படுகின்றன. இந்த பட்டியலில் இருந்து நீங்கள் தேர்வு செய்யும் விஷயங்கள் தான் உங்களுக்கான ஆளுமைகள். இவற்றின் அடிப்படையில் தான் ஹலோவில் நீங்கள் குறிப்புகளை பகிர்ந்து கொண்டு, உங்களுக்கான சமூகத்தை உருவாக்கி கொள்ளலாம்.
இதன் பிறகு பயனாளிகள் தங்களுக்கான உறுப்பினர் பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம். அப்படியே சக பயனாளிகளின் பக்கங்களில் உலாவலாம். ஒவ்வொரு பகிர்விலும் வலப்பக்கத்தில் பார்த்தால் அந்த பக்கம் தொடர்பான ஆளுமை குறிப்புகளை பார்க்கலாம். பயனாளிகள் புதிய பகிர்வுகளை வெளியிடும் போதும் அதற்கு பொருத்தமான ஆளுமை அடையாளங்களை டேக் செய்ய வேண்டும். இஷ்டம் போல டேக் செய்யாமல் பொருத்தமான அடையாளங்களை டேக் செய்வது முக்கியம். மற்றபடி விருப்பம் தெரிவிக்கும் வசதி (ஹார்ட்) பின்னூட்டம் மூலம் உரையாடும் வசதிகளும் இருக்கின்றன.
சக உறுப்பினர்கள் பக்கங்களை பார்வையிடுவது போலவே, நமக்கான சமூகத்தையும் உருவாக்கி கொள்ளலாம். சமூகம் என்பது குறிப்பிட்ட ஆர்வங்கள் சார்ந்த விவாத குழுக்கள் போன்றது என புரிந்து கொள்ளலாம். ஆனால் நினைத்தவுடன் ஒரு சமூக குழுவை உருவாக்கி கொண்டு விட முடியாது. அதற்கு முன் ஏதாவது சாதித்திருக்க வேண்டும். ஆம் ஒருவர் துவக்க விரும்பும் சமூகம் சார்ந்த தலைப்புகளில் குறிப்புகளை வெளியிட்டு இதற்கான சாதனை அடையாளத்தை பெற வேண்டும். அதன் பிறகு புதிய குழுவை உருவாக்கி உறுப்பினர்களை சேர்க்கலாம். மற்றவர்கள் உருவாக்கிய குழுக்களிலும் சேரலாம். இந்த குழுக்கள் எல்லாமே குறிப்பிட்ட ஆர்வங்கள் சார்ந்தவை என்பதால் இவற்றில் மேற்கொள்ளும் உரையாடல்களும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த சேவையின் முழு அம்சங்களையும் புரிந்து கொள்ள இதற்கான வழிகாட்டுதல் குறிப்புகளை பொறுமையாக படித்துப்பார்ப்பதும் நல்லது.
பயனாளிகளின் தகவல்களை விற்பதில்லை மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு அளிக்க மாட்டோம் என்றும் ஹலோ சேவை உறுதி அளிக்கிறது. வெளிப்படைத்தன்மைக்காக ஹலோ தொடர்பான விளம்பர நிறுவனங்கள் இதில் தங்களுக்காக பக்கங்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கப்படுகின்றன.
மாறுபட்ட சமூக வலைப்பின்னல் சேவையாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ஹலோவுக்கு ஹலோ சொல்லாலாமா என்று முயற்சித்துப்பாருங்கள்.: https://hello.com/en/index.html