நண்பர்கள் அல்லது வாசகர்கள், உரிமையாக என் காலரை பிடித்து அல்லது, நட்பின் எதிர்பார்ப்பில் சில கேள்விகளை கேட்டு விடுவார்களோ என அவ்வப்போது அஞ்சுவதுண்டு? நான் எழுதாமல் இருக்கும் விஷயங்கள் தொடர்பாகவே இத்தகைய கேள்விகள் வரும் என நினைப்பேன்.
அந்த வகையில், ’நம் காலத்து நாயகர்கள்’ புத்தகத்தை வாசிப்பவர்கள் ஷட்டர்ஸ்டாக் நிறுவனர் பற்றி எழுதாது ஏன் என்றோ அல்லது ஸ்லேக் நிறுவனர் ஸ்டூர்வர் பட்டர்பீல்ட் பற்றியோ ஏன் எழுதவில்லை என கேட்டுவிடுவார்களோ என உள்ளுக்குள் பதைபதைக்கும்.
இதையே வேறு விதமாக சொல்வதானால், இவர்களை எல்லாம் எழுதாமல் விட்டுவிட்டோமே என்ற எண்ணம் எனக்குள் உண்டாகிறது.
நம் காலத்து நாயகர்கள்’ புத்தகம் இணையத்தின் புதுயுக சேவைகளை உருவாக்கிய நிறுவனர்களை அவர்களின் நிறுவங்களை முன்வைத்து அறிமுகம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. பேஸ்புக் நிறுவனர் மார்க், இண்ஸ்டாகிராம் நிறுவனர் கெவின் சிஸ்ட்ரோம், ஸ்கைப் நிறுவனர் ஜென்ஸ்ட்ராம் என பலரை பற்றிய அறிமுகம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள ஆளுமைகளில் என்னுடைய அபிமானத்திற்கு உரியவர்களாக, கேபிரியல் வைன்பர்க் (கூகுளுக்கு மாற்றாக விளங்கும் டக்டக்கோ தேடியந்திரத்தை உருவாக்கியவர்), லைப்ரரிதிங் (புத்தக பிரியர்களுக்கான பேஸ்புக்) நிறுவனர் ஸ்பால்டிங் ஆகியோரை குறிப்பிடுவேன்.
வேர்டுபிரஸ் நிறுவனர் முல்லன்வெக் மற்றும் பயர்பாக்ஸ் பின்னே உள்ள பிளாக் ரோஸ் ஆகியோரும் என்னை அதிகம் கவர்ந்தவர்கள்.
இந்த புத்தகத்தில் இடம்பெற்றவர்களை தேர்வு செய்ய எனக்கென கறாராண அளவுகோளை வைத்திருந்தேன் என்றாலும் இதில் நிச்சயம் விடுபடல்கள் உண்டு. ஸ்லேக் நிறுவனரை பட்டியலில் சேர்க்க வேண்டும் என நினைத்திருந்தேன் என்றாலும் முடியாமல் போயிற்று. ஆனால் ஷட்டர்ஸ்டாக் நிறுவனரை தாமதமாகவே அறிந்து கொண்டேன். ஷட்டர்ஸ்டாக் சேவையை அறிந்திருந்தேன் என்றாலும், அது புதுயுக சேவையாக கருதக்கூடியது என்பதை இப்போது தான் அறிகிறேன்.
இணையத்தில் ஸ்டாக் புகைப்பட தேவையை உணர்ந்த நிலையிலேயே ஜான் ஆரிங்கர் இந்த சேவையை துவக்கியது பற்றி சுவாரஸ்யமான கட்டுரைகளை வாசிக்க நேர்ந்ததால் இவரைப்பற்றி எழுத வேண்டும் என தோன்றியது. இது போல விடுபட்ட இணைய நாயகர்கள் பற்றியே இன்னொரு புத்தகம் எழுதலாம். நீங்களும் கூட, பொருத்தமானவர்களை பரிந்துரைக்கலாம்.
–
நம் காலத்து நாயகர்கள் புத்தகம்