ஐபால்ஸ் என்றால் ஆங்கிலத்தில் பொதுவாக கருவிழிகள் என பொருள் கொள்ளப்படுகிறது, ஆனால் இணையத்தில் ஐபால்ஸ் என்பது எப்போதும் இணைய பயனாளிகள் அதாவது நெட்டிசன்களை குறிகிறது.
இணைய மார்க்கெட்டிங் மொழியில், வலைதளங்களின் வருகையாளர்களை இந்த சொல் குறிப்பதாக இணைய அகராதியான நெட்லிங்கோ பொருள் தருகிறது. ஒரு ஜோடி கருவிழிகள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் இணைய மார்க்கெட்டிங் நபர்கள், பார்வையாளர்கள் விளம்பரங்களை பார்க்கின்றனரா இல்லையா என்பது தவிர வேறு எது பற்றியும் கவலைப்படுவதில்லை என்றும் பொருள் சொல்லப்பட்டுள்ளது. ; https://www.netlingo.com/word/eyeballs.php
ஆம், இணையத்தில் போக்குவர்த்து முக்கியம். அதாவது இணையதளங்களுக்கு வந்து போலும் பயனாளிகள் எண்ணிக்கை முக்கியம். இந்த எண்ணிக்கை தான் ஒரு தளத்திற்கான வரவேற்பை தீர்மானிக்கிறது. அதைவிட முக்கியமாக அதன் வருவாயை தீர்மானிக்கிறது.
ஒரு காலத்தில், அதாவது டாட்காம் யுகத்த்தில் ஐபால்ஸ் எனும் வார்த்தை இணையத்தில் மிக பிரபலமாக இருந்தது. ஐபால்சை ஈர்க்க முடிந்தால் போதும் இணையத்தில் கல்லா கட்டலாம் என்றும் கருதப்பட்டது. இதற்காக என்றே இலவசமாக உள்ளடக்கம் வாரி வாரி வழங்கப்ப்பட்டது. இவ்வளவு ஏன், ஆரம்ப காலத்தில் இணைய இணைப்பு கூட பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த இலவசத்தின் தாக்கம் இன்னமும் இணையத்தில் தொடர்கிறது என்றாலும், ஐபால்ஸ் கணக்கில் இருந்து வெகு தொலைவு வந்தாகிவிட்டது.
இந்த விளக்கத்தை படிக்கும் போது நம்மை போய், ஐபால்ஸ் என்று குறிப்பிடுகின்றனரே, நாம் என்ன இணைய ஜடங்களா? எனகேட்கத்தோன்றலாம். உண்மையில் கேள்வி பதில் தளமான குவோராவில் இதை ஒரு கேள்வியாக கேட்டிருக்கின்றனர்.
இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இணைய பயனாளிகளை குறிக்க ஐபால்ஸ் எனும் சொல்லை பயன்படுத்துவதை மக்கள் தரக்குறைவானதாக கருதுகின்றனரா? என்பது கேள்வி. இல்லை என்பது இதற்கான விரிவான பதிலின் சுருக்கம்.
நுகர்வோர் என்பதை கூட தான் சிலர் தரக்குறைவானதாக கருதுகின்றனர் என இன்னொருவர் பதில் அளித்துள்ளார். இந்த விவாதத்தை குவாராவில் தொடாலாம்: https://www.quora.com/Do-people-regard-the-term-eyeballs-often-used-by-internet-service-providers-for-net-users-as-derogatory-Is-it-a-true-description-of-the-net-we-see-today
இப்போது முன்போல ஐபால்ஸ் எனும் பதம் இணையத்தில் அந்த அளவு பயன்படுத்தப்படுவதில்லை.
உங்களை இணைய ஜடமாக கருதுவதில் உடன்பாடில்லை என்றால் கொதித்துப்போக வேண்டாம், இப்போது பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட இணைய நிறுவனங்கள் இலவச சேவை அளித்து அதற்கு பதிலாக பயனாளிகளை ஒரு பண்டமாக கருதப்படுவதாக சொல்லப்படுவதை நினைத்து ஆறுதல் கொள்ளவும். அல்லது இன்னும் ஆவேசம் கொள்ளவும்.
–
டெக் டிக்ஷனரி- 9 ; ஜிப் (GIF) – கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம்