ஒரு மீம் அகழ்வாராய்ச்சியும், சில அதிர்ச்சிகளும்!

g5wsuspfqjtqjzvobrp3‘கவனச்சிதறலுக்கு உள்ளான காதலன்’ (distracted boyfriend meme ) மீமை நீங்கள் நிச்சயம் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த மீமின் எண்ணற்ற வடிவங்களையும் அறிந்திருக்கலாம். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை- ஏனெனில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட, எடுத்தாளப்பட்ட மீம்களில் ஒன்றாக இது இருக்குகிறது.

இளம் பெண்ணுடன் நடந்து செல்லும் இளைஞர் ஒருவர் தங்களை கடந்து செல்லும் வேறு ஒரு யுவதியை திரும்பி பார்ப்பதும், அதை பார்த்து உடன் இருக்கும் பெண் ஆவேசமாக முறைப்பது போன்ற புகைப்படம் தான் இந்த மீம் புயலின் மையம். இந்த படமே ஒரு சிறுகதை போல இருக்கிறது அல்லவா? ஆண்களுக்கே உண்டான சபல புத்தி, பெண்களுக்கே உண்டான பொறாமை ஆகியவை இந்த படத்தில் வெளிப்படுகிறது. அல்லது இவை பழகிப்போன் கிளிஷாவாக கூட இருக்கலாம். இப்படி பார்ப்பதே கூட தவறாக இருக்கலாம். படத்தின் உள்ளடக்கம் பற்றிய விவாதத்தை விட்டுவிடலாம், விஷயம் என்னவென்றால், இந்த காட்சி நெட்டிசன்களுக்கு பிடித்துப்போய் இதை மீம்களாக உலாவ விட்டனர் என்பது தான்.

ஒரு படத்தில் இரு பெண்களையும் முதலாளித்துவம் மற்றும் சோஷலிசமாக குறிப்பிட்டு, கவனம் மாறுவதை உணர்த்தியிருந்தனர். இப்படி, படத்தில் இருக்கும் மூன்று பேர் மீதும் வேறு வேறு எழுத்துகள் அல்லது அடைமொழியை குறிப்பிடுவது மூலம் புதுப்புது மீம்களை உருவாக்கி உலாவவிட்டனர். இன்றளவும் இது தொடர்கிறது.

இந்த மீமே கொஞ்சம் பழைய மீம் தான். 2015 ல் இது முதலில் அறிமுகமானதாக மீம் வரலாற்று தளமான ’நோ யுவர் மீம்’ தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு இந்த மீம் புதிய வேகம் பெற்று இணையம் முழுவதும் பரவியதும், அதன் விளைவாக, இந்த படம் உண்மையில் ஒரு ஸ்டாக் போட்டோ என்பதும், அதில் இடம்பெற்றுள்ள மூவரும் மாடல்கள் என்பதும் தெரிய வந்தது. இதுவும் பழைய கதை தான். இப்படி தான் ’கவனச்சிதறல் காதலன்’ மீம் பிரபலமானது.

இப்போது புதிய கதையாக, டிவிட்டர் பயனாளி ஒருவர் இந்த மீமை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தி, இந்த படத்தில் இருக்கும் இளம் பெண் தொடர்பான அதிர்ச்சியான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளார். அதாவது அந்த இளம் பெண்ணின் கடந்த காலம் இன்னும் ‘அதிர்ச்சி’யானது என்பதை கண்டறிந்துள்ளார். அப்படி என்ன அதிர்ச்சி என அதிர்ந்து போக வேண்டும். இந்த அதிர்ச்சி முழுக்க முழுக்க சுவாரஸ்யமானது.

இப்போது மீண்டும் கொஞ்சம் பழைய கதைக்கே போகலாம். இந்த கவனச்சிதறல் காதலன் மீம் எண்ணெற்ற வடிவங்களில் இணையத்தில் உலா வரத்துவங்கியதுமே இதன் பின்னணியை அறிவதில் பலருக்கும் ஆர்வம் உண்டானது. இதற்கான முதல் கட்ட ஆய்வில் இது ஸ்டாக் போட்டோ என்பது தெரிய வந்தது. அடுத்த கட்டமாக மேலும் துப்பறிந்து, இந்த படத்தை எடுத்த புகைப்படக்கலைஞர் யார் என கண்டறிந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ஸ்பெயினைச்சேர்ந்த ஆண்டோனியோ குயில்லம் (Antonio Guillem ) எனும் அந்த புகைப்பட கலைஞரின் பேட்டியும் வெளியானது.

ஸ்டாக் போட்டோ  எடுப்பது தனது தொழில் என்றும், குறிப்பிட்ட அந்த மூன்று மாடல்களை வைத்து பல புகைப்படங்களை எடுத்திருப்பதாகவும், குறிப்பிட்ட இந்த புகைப்படத்தை திட்டமிட்டு எடுத்ததாகவும் பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த மாடல்களில் இளைஞரின் பெயர் மரியோ எனும் பெண்ணின் பெயர் லாரா என்றும் தெரிவித்திருந்தார். மூன்றாமவர் விலகிச்சென்றுவிட்டதால் அவரது பெயரை குறிப்பிடவில்லை. இதனையடுத்து டிவிட்டர் பயனாளி ஒருவர் (@ajabernathy) அவரது ஸ்டாக்போட்டோ ஆல்பத்தை ஆய்வு செய்து, படத்தில் உள்ள இருவரும் வேறு விதமாக தோன்றும் மற்ற சில படங்களையும் தேடியெடுத்து வெளியிட்டனர். படத்தில் உள்ளவர்களின் உறவுக்கு புதிய அர்த்தம் கொடுப்பதாகவும் அமைந்திருந்தன.

DgkVs2SVAAAW5Okஇப்போது இந்த ஆய்வு படத்தில், எர்னி ஸ்மித் (@ShortFormErnie ) எனும் டிவிட்டர் பயனாளி, புதிய படங்களை கண்டறிந்து வெளியிட்டிருக்கிறார். கவனச்சிதறலுக்கு உள்ளான காதலன் படத்தில் உள்ள இளம் பெண்ணின் அதிர வைக்கும் வரலாறு எனும் பொருள்பட ஒரு குறும்பதிவை அவர் வெளியிட்டிருந்தார். ’இந்த பெண்ணை தெரிகிறதா? உங்களுக்கு காண்பிக்க என்னிடம் சில விஷயங்கள் இருக்கின்றன’ எனும் குறும்பதிவிட்டு அதன் தொடர்ச்சியாக, அந்த பெண் எதற்கெடுத்தாலும் அதிர்ச்சி அடைபவர் என்பதை உணர்த்தும் வகையில் வரிசையாக சில படங்களை பகிர்ந்து கொண்டார். ஒரு படத்தில் அவர் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஸ்மார்ட்போன் திரையை பார்த்து விழி அகல வியப்புடன் காணப்படுகிறார். ‘இந்த பெண் திரைய பார்த்தும், திகைத்துப்போகிறார்’எனும் குறும்பதிவுடன் இந்த படம் அமைந்திருந்தது. இன்னொரு படத்தில் அந்த பெண், கம்ப்யூட்டர் திரையை பார்த்து விழி அகல விழித்து நிற்கிறார். இன்னொரு படத்தில் அவரது தோழிகளும் திகைத்து நிற்கின்றனர். அவர் மூக்கு கண்ணாடி அணிந்திருந்தாலும் திகைக்கிறார், கடித்ததை பிரிக்கும் போதும் திகைக்கிறார் என மேலும் சில படங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். சும்மா இருக்கும் போது திகைக்கிறார் என்றும் ஒரு படத்தை பகிர்ந்திருந்தார். எல்லா படங்களிலுமே அந்த பெண் இணையம் இப்போது அவருக்கு உரியதாக அறிந்திருக்கும் டிரேட் மார்க் வியுப்பு அல்லது திகைப்பை வெளிப்படுத்துகிறார்.

இந்த படங்கள் எல்லாமே ஸ்டாக் படங்கள் தான். ஒரு தேர்ந்த மாடலழகி போல இந்த பெண் அவற்றில் விழிகள் அகல வியப்பாக போஸ் கொடுத்திருக்கிறார். மீம் அகழ்வாராய்ச்சியில் அவற்றை ஒரு சேர திரும்பி பார்க்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

பார்கலாம், இந்த மீம் படத்தில் அடுத்த திகைப்பு அல்லது திருப்பம் என்னவாக இருக்கிறது என்று!

தளம் புதிது; விசா தகவல்களுக்கான வரைபடம்

உலக நாடுகளில் பின்பற்றப்படும் விசா நடைமுறைகள் மற்றும் குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் எந்த எந்த நாடுகளில் விசா இல்லாமல் பயணிக்கலாம் போன்ற தகவல்களை வரைபட வடிவில் அளிக்கிறது டிராவல்ஸ்கோப் (https://www.markuslerner.com/travelscope/).

இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள உலக வரைபடம் மீது எந்த நாட்டின் மீன் மவுஸ் சுட்டியை கொண்டு சென்றாலும் அந்நாட்டிற்கான விசா தகவல்களை அளிக்கிறது. இந்தியா மீது சுட்டியை கொண்டு சென்றால், 50 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது அங்கு சென்றவுடன் விசா பெறலாம் எனும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது தவிர நாடுகளின் பட்டியலும் தனியே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஏதேனும் நாட்டை கிளிக் செய்தால் வரைபடத்தில் அதற்கான விவரம் சித்திரமாக தோன்றுகிறது. அந்நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்லும் கோட்டின் மீது மவுசை கொண்டு சென்றால், அங்குள்ள விசா நடைமுறை சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட நாடு சுட்டிக்காட்டப்பட்டு, மற்ற நாடுகளில் அதற்கான விசா நடைமுறை,சிறப்பு அனுமதி, விலக்கு, தடை உள்ளிட்ட விவரங்கள் தனியே வண்ணத்தில் அடையாளம் காட்டப்படுகிறது. இவைத்தவிர குறிப்பிட்ட நாட்டின் பெயரை தேடல் கட்டத்தில் குறிப்பிட்டு, செல்ல விரும்பும் நாட்டையும் குறிப்பிட்டு விசா நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.

தகவல் புதிது; தளிர்களுக்கான தேடியந்திரம்

kids-learnகூகுள் முன்னணி தேடியந்திரமான விளங்கினாலும், சிறுவர் சிறுமியர்கள் இணையத்தில் உலாவும் போது பயன்படுத்த பாதுகாப்பான தேடியந்திரம் தேவை. அந்த வகையில் இளந்தளர்களுக்கான தேடியந்திரங்களும் இருக்கின்றன. இந்த வரிசையில் கிட்டி தேடியந்திரம் புதிதாக இணைந்துள்ளது. சிறார்களுக்கான புத்திசாலித்தனமான மற்றும் பாதுகாப்பான தேடியந்திரம் என கிட்டி தன்னை வர்ணித்துக்கொள்கிறது. சிறார்களுக்கான தேடியந்திரங்கள் செய்வது போல், சிறார்களுக்கு பொருத்தமில்லாத உள்ளடக்கம் இதில் குறிச்சொற்கள் மூலம் முடக்கப்படுகின்றன. மேலும் பல வகையான பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. கூகுள் தேடியந்திரம் அளிக்கும் தேடல் நுட்பத்தை அடிபப்டையாக கொண்டே இந்த தேடியந்திரம் செயல்படுகிறது.

இணைய முகவரி: https://kidy.co/

வீடியோ புதிது; விண்டோஸ் 95 போன் எப்படி இருக்கும்?

கம்ப்யூட்டர் பயன்படுத்தியவர்களுக்கு விண்டோஸ் 95 இயங்குதள பிளேஷ் பேக் நன்றாக நினைவில் இருக்கும். பிளாப்பி டிஸ்க் காலத்தில் அறிமுகமான இந்த இயங்குதள வெர்ஷனில் இருந்து இணைய உலகம் வெகு தொலைவு முன்னேறி வந்துவிட்டது. இன்று ஸ்மார்ட்போனிலேயே இணையத்தை அணுக முடிகிறது. ஆண்ட்ராய்டு போன்களும், ஐபோன்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த போட்டியில் விண்டோஸ் போன் பின் தங்கிவிட்டது. எல்லாம் சரி, விண்டோஸ் 95 போன் அறிமுகமாகியுருந்தால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், 4096 யூடியூப் சேனல், விண்டோஸ் 95 போன் எப்படி காட்சி அளித்திருக்கும் என உணர்த்தும் சுவாரஸ்யமான வீடியோவை உருவாக்கியுள்ளது.

வீடியோவை காண: https://youtu.be/D0DDQumaaCg

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *