வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் புட்ஸ்கீ.நெட் இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம். இந்த தளம் உணவு தொடர்பான வீடியோக்களை வழங்குகிறது. உணவுகளின் பின்னே உள்ள விஞ்ஞானம் உள்ளிட்ட தகவல்களை கொண்டவையாக இந்த வீடியோக்கள் அமைந்துள்ளன. நூற்றுக்கணக்கிலான எண்ணிக்கையில் இல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய வீடியோக்களே இருந்ந்தாலும் அவை சுவையானதாகவும், பலன் மிக்கதாகவும் இருக்கின்றன. தக்காளி, ஸ்டிராபெரி, மாம்பழம், ஐஸ்கீரிம் தொடர்பான வீடியோக்களை காணலான். நாட்டிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் என்பதால் ஆய்வு தகவல்களும் இடம்பெற்றுள்ளன. உணவு தொடர்பான அறிவியல் பூர்வமான தகவகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமான பொழுதுபோக்கு வீடியோக்களில் இருந்து மாறுபட்டிருப்பதையும் உணரலாம்.
இணையதள முகவரி: http://www.foodskey.net/index.html
( தகவல் புதிது)
பாஸ்வேர்டுக்கு ஒரு சட்டம்!
பாஸ்வேர்டு தொடர்பான இரண்டு தகவல்கள். அமெரிக்காவின் கல்போரினியா மாகாணத்தில் கொண்டு வரப்பட உள்ள புதிய சட்டம் மோசமான பாஸ்வேர்டுக்கு தடை போடுவதாக அமைந்துள்ளது. தகவல் தனியுரிமை தொடர்பான இந்த சட்டப்படி, ஐ.ஓ.டி எனப்படும் இணைக்கப்பட்ட இணைய சாதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இனி, தங்கள் சாதனங்களில் மோசமான பாஸ்வேர்டுகளை அமைக்க கூடாது. அதாவது ஹேக்கர்கள் எளிதில் ஊகித்துவிடக்கூடிய பலவீனமான பாஸ்வேர்டுகளை அமைக்காமல், வலுவான பாஸ்வேர்டுகளை உருவாக்க வேண்டும்.
ரவுட்டர் போன்ற சாதனங்கள் டிபால்ட்டாக பாஸ்வேர்டு அமைக்கப்படுகின்றன. பொதுவாக நிறுவனங்கள் அட்மின் அல்லது பாஸ்வேர்டு போன்ற வார்த்தைகளை இப்படி பாஸ்வேர்டாக அமைத்து தருகின்றன. பயனாளிகள் சாதனத்தை வாங்கியதும் இத்தகைய நன்கறியப்பட்ட படு பலவீனமான பாஸ்வேர்டுகளை மாற்றிவிட்டு, புதிய பாஸ்வேர்டுகளை உருவாக்க கொள்ள வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் பெரும்பாலும், பயனாளிகள் இவ்வாறு செய்யாமல் பழைய பாஸ்வேர்டையே தொடர்கின்றனர். விளைவு, ஹேக்கர்கள் எளிதாக இந்த சாதனங்களில் ஊடுருவி விடுகின்றனர்.
இந்த பாதிப்பை தடுப்பதற்காக தான், கலிபோர்னியாவில் இனி இணைய சாதனங்களில் வலுவான பாஸ்வேர்டு கட்டாயம் அல்லது பயனாளிகள் வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான வழிமுறை அவசியம் என சட்டம் கொண்டு வந்துள்ளனர். பாஸ்வேர்டு தொடர்பான இரண்டாவது தகவல், அதிக எழுத்துக்களை கொண்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பாலபாடடங்களை பின்பற்றி வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி பயன்படுத்தும் போது மோசடி நடப்பதற்கான வாய்ப்பு குறைவதாக, இண்டியான பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
( செயலி புதிது)
ரெயில் சேவை தகவல்களுக்கான செயலி
ரெயில்களின பயண நேரம், பயணச்சீட்டுகளின் நிலை உள்ளிட்ட தகவல்களை அறிய வழி செய்யும் செயலிகள் பல இருக்கின்றன. ஆனால் இவற்றின் மூலம் தகவல்கள் அதிகாரபூர்வமானை அல்ல. இந்நிலையில் தென்னக ரெயில்வே சார்பில் ரெயில் பயணிகளுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் பாட்னர் எனும் பெயரிலான இந்த செயலி, ரெயில்வேத்துறை வழங்கும் பல்வேறு சேவைகள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான செயலியாக அமைந்துள்ளது.
சென்னை புறநகர ரெயில் தகவல்கள், பயணச்சீட்டு முன் பதிவு தகவல்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செயலி மூலம் அறியலாம். இந்த செயலியை பயன்படுத்த முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, சிறப்பு தகவல்களை பெறும் வசதி இருக்கிறது. ஹெல்ப்லைன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட சேவைகளை இந்த செயலி மூலம் நேரடியாக பெறலாம்.
பி.என்.ஆர் நிலை, ரெயிலின் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு: http://railpartner.railnet.org.in/
———-
(தொழில்நுட்பம் புதிது)
சோர்வை கண்டறியும் நுட்பம்
மனச்சோர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் உண்மையிலேயே சோர்வு அளிக்க கூடியவை. உலக சுகாதார அமைப்புன் தகவல் படி ஆண்டுதோறும் 300 மில்லியன் மக்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் மனச்சோர்வினால் தற்கொலை செய்து கொள்கின்றனர். மனச்சோர்வுக்கான அறிகுறிகள் மாறுபட்டவையாக அமைகின்றன. இதனால் மனச்சோர்வை கண்டறிவதும் சிக்கலாக அமைகிறது.
இந்த பின்னணியில் தான், அமெரிக்காவின் எம்.ஐ.டி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு நுட்பம் கொண்டு மனச்சோர்வை கண்டறிவதற்கான வழியை உருவாக்கியுள்ளனர். நரம்பு மண்டல் வலைப்பின்னல் மாதிரியை அடிப்படையாக கொண்டு இதன் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்பு, மனித பேச்சில் உள்ள அம்சங்களை அலசி ஆராய்வதன் மூலம் மனச்சோர்வின் அறிகுறிகளை கண்டறியும் திறன் கொண்டதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ கோப்பு மற்றும் நேர்காணல் உரையாடல் ஆகிய தொகுப்புகளை அலசி ஆராய்ந்து இந்த நுட்பம் செயல்படுகிறது என்கின்றனர். இது தொடர்பாக விரிவான பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
நோக்கியாவின் மறு அறிமுகம்
நோக்கியாவின் ஸ்லைடர் வசதி கொண்ட மேட்ரிக்ஸ் போனை நினைவில் இருக்கிறதா? ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆவதற்கு முன் பிரபலமாக இருந்த இந்த போன் இப்போது புதிய வடிவில் மறு அறிமுகமாகியுள்ளது. நோக்கியா பிராண்ட் உரிமையை பெற்றுள்ள எச்.எம்.டி குளோபல் நிறுவனம், நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருவதோடு அதன் மறக்க முடியாத பழைய போன்களையும் மீண்டும் அறிமுகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு 3310 போன் அறிமுகமானது. இந்த ஆண்டு துவக்கத்தில், 8110 ரக போனும் இதே போல மறு அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டது.
இப்போது இந்த போன் இந்திய சந்தையிலும் அறிமுகமாகியுள்ளது. இம்மாதம் 24 ம் தேதி முதல் ரூ.5,999 விலையில் இந்த போனை வாங்கலாம். பழைய போனில் இருந்த ஸ்லைடர் வசதி அப்படியே தக்க வைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்லைடரை விடுவித்து விட்டு டயல் செய்யலாம், பேசலாம். ஸ்லைடர் நீண்டிருக்கும் போது வளைவாக காட்சி அளிப்பதால் இந்த போன் வாழைப்பழ போன் என்றும் குறிப்பிடப்பட்டது. ஹாலிவுட் படத்தில் தோன்றியதால் மேட்ரிக்ஸ் போன் என்றும் அழைக்கப்பட்டது. தற்போது ஸ்னேப்ட்ராகன் சிப், 4ஜி வசதி, காமிரா உள்ளிட்ட வசதிகளும் வருகிறது. கெய் இயங்குதளம் பயன்படுத்தப்படுவதால் வாட்ஸ் அப் போன்ற சேவைகளையும் பயன்படுத்தலாம்.
—
தமிழ் இந்துவில் எழுதியது