2018 ம் ஆண்டில் வைரல் வீடியோ பட்டியலில் ஜோமோட்டோ டெலிவரி மனிதர் வீடியோ காட்சியும் சேர்ந்திருக்கிறது. இந்த வீடியோ வைரலாக பரவியதோடு, ஜோமேட்டோ போன்ற இணைய சேவைகள் குறித்தும் கேள்வியை எழுப்பியுள்ளது. அதை விட முக்கியமாக, நெட்டிசன்கள் எதிர்வினை குறித்து மனித நேய நோக்கிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அந்த வீடியோ காட்சியில் என்ன இருந்தது என்பதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். இல்லை எனில், உங்கள் நண்பர்கள் அல்லது அறிமுகம் இல்லாதவரால் பார்வேர்டு செய்யப்பட்டு இனி நிச்சயம் பார்க்க வாய்ப்பிருக்கிறது. இல்லை என்றாலும் கூட அந்த வீடியோ காட்சியை விவரிப்பது சங்கடமாக தான் இருக்கிறது. அதைவிட, அந்த காட்சி வைரலான பிறகு தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பெரும் சங்கடத்தை அளிக்கின்றன.
ஜமோட்டோ டெலிவரி மனிதர் ஒருவர் தனது வாகனத்தில் அமர்ந்த படி, டெலிவரி உணவு பாக்கெட்டை சாப்பிட்டுக்கொண்டிருப்பது அந்த காட்சியில் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் மதுரையில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டு வைரலானது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் ஜோமேட்டோ நிறுவனத்தையும், அந்த மனிதரையும் வறுத்தெடுக்க தவறவில்லை. கூப்பன்களை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்தால் இப்படி தான் என்று ஒருவர் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இன்னொருவர், டெலிவரி செய்தவர் சுவைத்த பிறகு தான் நாங்கள் உணவை சாப்பிட வேண்டுமா? என கேள்வி எழுப்பியிருந்தார். டெலிவரி மனிதராலும் சுவைக்க முடியாத அளவு எங்கள் உணவு சுவையானது என நிறுவனம் விளம்பரம் செய்யலாம் என சிலர் கேலியாக ஆலோசனை கூறியிருந்தனர்.
இப்படி டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் இந்த வீடியோ காட்சி பகிரப்பட்டு கேலியும், கிண்டலுமாக கருத்து தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜோமேட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை நிறுவனங்களின் தரம் பற்றிய விவாதமாகவும் இது மாறியது. நிறுவனம் உணவு முறையாக டெலிவரி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் துவங்கி, டெலிவரி மனிதர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது வரை பலவிதமான யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விவாதத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. உணவு டெலிவரி சேவையின் தரம் மேம்பட வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் நினைப்பதில் தவறில்லை. இடையே ஏதேனும் தவறு ஏற்பட்டால் நிறுவனத்தின் மீது பாய்வதிலும் தவறில்லை தான். ஆனால் இந்த விவாதத்தின் துவக்கப்புள்ளி தான் கவலை அளிக்கிறது. இந்த விவாதத்திற்கு காரணமான பிரச்சனையில் அடிப்படை மனிதநேயத்தை தவற விடுகிறோமோ என்ற கவலை வாட்டுகிறது.
இதனிடையே இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்திய ஜோமேட்டோ நிறுவனம், அந்த டெலிவரி பங்குதாரரை நீக்கிவிட்டதாகவும், இனி உணவு பார்சல்கள் பிரிக்க முடியாதபடி சீல செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சனையில் பல இழைகள் இருப்பதை புரிந்து கொள்ளலாம். முதல் பிரச்சனை டெலிவரி செய்பவர் உணவு பார்சலை பிரித்து சாப்பிட்டது. இதற்காக அவர் வறுத்தெடுக்கப்பட்டு விட்டார். இரண்டாவது பிரச்சனை, இந்த சம்பவம் தொடர்பான ஜோமேட்டோ போன்ற நிறுவனங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம். தரமான சேவைக்கான வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பும், அதை அளிக்க வேண்டியது வர்த்தக நிறுவனங்களின் கடமை என்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா, இந்த விவாதத்தை அந்த அப்பாவி மனிதரை கொண்டு தானா மேற்கொள்ள வேண்டும்?
அந்த மனிதர் செய்தது தவறு தான். ஆனால், சமூக ஊடகங்களில் இப்படி கேலியாகவும், கிண்டலாகவும் பேசி விவாதிக்க கூடிய அளவுக்கான தவறா? இந்த தவறுக்காக அவரை கண்டிக்கப்பட வேண்டும் அல்லது நிறுவனத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என கோருவதை எப்படி எடுத்துக்கொள்வது. உணவு ஆர்டர் செய்தால் உங்கள் உணவுக்கான கதி இப்படி தான் என்பது போல கருத்து தெரிவிப்பது எந்த வகையில் சரியாது?
பிரச்சனை அந்த மனிதர் தவறு செய்தது தொடர்பாக அல்ல. அந்த தவற்றை விவாதித்து சமூக ஊடகம் தீர்ப்பளிக்க முற்படும் அவசரம் தொடர்பானது. வாகனத்தை நிறுத்தி நடுவழியில் உணவு சாப்பிடும் ஒருவரை பார்த்து நம்மால் எப்படி கேலி செய்ய முடிகிறது? அவர் மீது நமக்கு பரிவு ஏற்படாமல் ஏன் கேலியும் கிண்டகும் பொங்குகிறது. பசிக்கு சாப்பிடுவது ஒரு குற்றமா? இந்த கேள்விக்கு டெலிவரி உணவை சாப்பிடலாமா என பதில் கேள்வி கேட்க முற்படுவதே சங்கடம் தருகிறது. காரணம் அது நம் சமூகத்தின் பரிதாபமான நிலையை காட்டுகிறது.
மற்றவர்கள் பசியை போக்குவதற்காக வெய்யிலிலும், மழையிலும் வாகனத்தில் வேகமாக சென்று உணவு டெலிவரி செய்பவர்களின் நிலையை நாம் எப்போதாவது நினைத்து பார்க்கிறோமா? நம் வசதிக்காக வீடு தேடி உணவு டெலிவரி செய்பவர்கள் எப்போது சாப்பிடுவார்கள்? அவர்களுக்கான வசதிகள் என்ன? என பல கேள்விகள் எழுகின்றன. இது அவர்கள் வேலை தான். அதற்காக ஊதியமும் பெறுகின்றனர் தான். ஆனால், அதற்கான பனிச்சூழலையும் இன்னும் பிற இன்னல்களையும் நாம் அறிந்திருக்கிறோமா?
டெலிவரி ஊழியர்கள், வர்த்தக பங்குதாரர்கள் என கவுரமாக குறிப்பிடப்பட்டாலும், அவர்களுக்கு ஊதியம் குறைவானது. அது செயல்திறன் அடிப்படையிலானது. அதிகம் ஓடினால் அதற்கேற்ற வருவாய் கிடைக்கும். மற்றபடி அவர்களுக்கு பணி பாதுகாப்பு கிடையாது. களத்தில் அவர்கள் பல்வேறு இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்காக அந்த மனிதர் தவறு செய்வதை தட்டிக்கேட்க கூடாதா என்று கேட்காதீர்கள். அவரை கேலி செய்யும் முன், அவரைப்போன்றவர்கள் பணிச்சூழல் மற்றும் இடர்களை யோசித்து பார்க்க வேண்டாமா என்பது தான் கேள்வி.
இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அவர் சாப்பிட்டது வாடிக்கையாளருக்கான உணவு தான் என்பது நமக்கு எப்படித்தெரியும்? வாடிக்கையாளர் வேணாம் என நிராகரித்த உணவாக அது இருக்கலாம் அல்லவா? இப்படி நிராகரிகப்படும் உணவுக்கான செலவை அவர்கள் தான் ஏற்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
ஆனால் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவெனில், இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த டெலிவரி மனிதர் நீக்கப்பட்ட செய்தி வெளியானதும் சமூக ஊடகத்தில் அவரது சார்பில் பரிவாகவும், ஆதாரவாகவும் கருத்து தெரிவித்தது தான். ப்ளும்பர்க்குவிண்ட் இணைய இதழ், இரு தரப்பு விவாதத்தையும் படம் பிடித்து காட்டியிருந்தது.
அலிபியா கான் (@alifiyakhan ) எனும் டிவிட்டர் பயனாளி,’ ஜோமேட்டோ இந்த டெலிவரி மனிதரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக நினைப்பது நான் மட்டும் தானா? என கேட்டிருந்தார். “ அவர் செய்தது தவறு தான் ஆனால். இது பசித்த ஒருவர் கொஞ்சம் உணவை சாப்பிட்டது மட்டும் தானே. இதை மன்னிக்கும் மனம் நமக்கு வேண்டும்” என்றும் அவர் கூறியிருந்தார்.
” ஜோமேட்டோ டெலிவரி மனிதருக்காக வருந்துகிறேன். இவரைப்போன்றவர்கள் இந்தியாவில் எப்படி சுரண்டப்படுகின்றனர் என நமக்குத்தெரியும். கடும் போட்டி இருப்பதால், இவரைப்போன்றவர்கள், உட்கார்ந்து சாப்பிட்டால் ஒரு டெலிவரியை இழக்க வேண்டியிருக்கும் என ஓடிக்கொண்டிருக்கின்றனர்” என்று வக்கீல் சஹேபா (@vakeel_saheba ) எனும் டிவிட்டர் பயனாளி தெரிவித்திருந்தார்.
இன்னொரு டிவிட்டர் பயனாளி (@Rajyasree) ” ஜோமேட்டோ மனிதர் ஆர்டருக்கான உணவை சாப்பிடுவது வருத்தமாக இருக்கிறது. ஒரு வேளை உணவு சாப்பிட முடியாதவர்களை, உணவு குவியலை கையாள வைத்தால் இப்படி தான் நடக்கும். எல்லா உணவு சேவை நிறுவனங்களும், டெலிவரி ஊழியர்களுக்கு 2 வேளை உணவு வழங்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த குறும்பதிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தவர்களும், பெரும்பாலும் பரிவுடனே கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த விவாதத்தில் நமக்கு தேவைப்படுவதும் அது தான்!
–
தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது