மேலாளர்களை நமக்கெல்லாம் கட்டளையிடுபவர்களாகவும், நம்மை கசக்கிப்பிழிந்து அல்லது தட்டிக்கொடுத்து வேலை வாங்குபவர்களாகவும் தான் தெரியும். மாறாக, மேலாளர்களே நமக்கான விசுவாசமான ஊழியர்களாகவும் இருந்தால் எப்படி இருக்கும். நிஜ உலகில் இது சாத்தியமில்லை. இது சாத்தியமாகும் கனவுலகமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் டிஜிட்டல் உலகில் இதை சாத்தியமாக்கும் அற்புதமான மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மென்பொருள்கள் தான் பாஸ்வேர்டு மேனேஜர் என குறிப்பிடப்படுகின்றன. அதாவது பாஸ்வேர்டு மேலாளர். நம்முடைய அனைத்து பாஸ்வேர்டுகளையும் நிர்வகிக்கும் வகையில் செயல்படுவதால் இவை பாஸ்வேர்டு மேலாளர் என குறிப்பிடப்பட்டாலும், உண்மையில் இவை நம் சார்பாக பாஸ்வேர்டுகளை இயக்கும் ஊழிய மென்பொருளாக தான் செயல்படுகின்றன. அந்த வகையில் இவை நமக்கான டிஜிட்டல் சேவகர்கள் என கொள்ளலாம்.
சரி, பாஸ்வேர்டு மேலாளர் மென்பொருள்கள் எப்படி செயல்படுகின்றன என சுருக்கமாக பார்க்கலாம்.
பாஸ்வேர்டு மேலாளர் என்பது, உங்கள் அனைத்து பாஸ்வேர்டுகளையும் சேமித்து வைத்து, பல்வேறு இணைய கணக்குகளில் நுழைய அவற்றை நிர்வகிப்பவை மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை அளிப்பவை என, டெக்னோபீடியா விளக்கம் சொல்கிறது. பாஸ்வேர்டு நிர்வாகி என்றும் வைத்துக்கொள்ளலாம்.
பாஸ்வேர்டு மேலாளர் மென்பொருளை பயன்படுத்தும் போதும், நீங்கள் எந்த பாஸ்வேர்டையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டாம். பாஸ்வேர்டு மேலாளருக்கான மூல அல்லது மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் போதும். எந்த இணைய சேவையை பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி, அந்த சேவைக்கான பயனர் பெயர் அல்லது பாஸ்வேர்டு தேவைப்படாது. மாறாக பாஸ்வேர்டு மேலாளர் வாயிலாக நமது எந்த இணைய கணக்கிலும், உள்ளே நுழைந்து வெளியே வந்துவிடாலம். பாதுகாப்பாக என்பதை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எப்படி இது சாத்தியமாகிறது? தொழில்நுட்ப சங்கதிகளை எல்லாம் விலக்கி விட்டு எளிதாக சொல்வது என்றால், நமக்கான பாஸ்வேர்டுகளை எல்லாம் இந்த மென்பொருள் நினைவில் வைத்துக்கொள்வதால், எந்த தளத்திலும் எளிதாக நுழைந்து வெளியே வரலாம் என சொல்லலாம். பாஸ்வேர்டு மேலாளர் ,நமக்கான பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருப்பதால், நாம் இணைய சேவைகளுக்குள் நுழையும் போது, மூல பாஸ்வேர்டை மட்டும் அடித்தால் போதும், குறிப்பிட்ட அந்த தளத்திற்கான பாஸ்வேர்டை நம் சார்பில், மென்பொருள் சமர்பித்துவிடும். இமெயில் முகவரி அல்லது பயனர் பெயரையும் அதுவே பார்த்துக்கொள்ளும்.
அதோடு, பாஸ்வேர்டை சமர்பிக்கும் போது, அதன் உள்ளடக்கம் தெரியாத வகையில் சங்கேத குறியீடுகளால் மூடி மறைத்தே சமர்பிக்கிறது. எனவே ஹேக்கர்களின் கழுகுப்பார்வையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆக, நாம் பாஸ்வேர்டு மேலாளரில் ஒரு கணக்கு துவங்கி, அதில் நாம் பயன்படுத்தின் இணைய சேவைகளுக்கான பாஸ்வேர்டுகளை எல்லாம் சேமித்து கொண்டால் போதும் அதன் பிறகு பாஸ்வேர்டு தலைவலி இல்லாமல் இருக்கலாம். அதோடு, பாஸ்வேர்டு தாக்குதல் தொடர்பான அச்சமும் இல்லாமல் இருக்கலாம்.
அது மட்டும் அல்ல, புதிதாக ஏதேனும் இணைய சேவையில் உறுப்பினராக வேண்டும் எனில், பாஸ்வேர்டு மேலாளர் மூலம் அதை செய்தால், நம் சார்பாக அதுவே வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி சமர்பித்து அதை பராமரிக்கவும் செய்யும்.
இப்போது சொல்லுங்கள், இந்த பாஸ்வேர்டு மேலாளர் நல்ல சேவகனும் தானே.
இணைய உலகில் பாஸ்வேர்டு திருட்டுகளும், கொள்ளைகளும் நடைபெற்று வரும் நிலையில், பாஸ்வேர்டு மேலாளர் மென்பொருளை பயன்படுத்துவது அவசியம் என வலியுறுத்துகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைய சேவைகளை பயன்படுத்தும் நிலையில், எல்லா பாஸ்வேர்டுகளையும் நிர்வகிக்க மற்றும் அதைவிட முக்கியமாக ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளில் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவதை தவிர்க்க பாஸ்வேர்டு மேலாளர் மென்பொருள் அவசியமாகும்.
பலவிதமான பாஸ்வேர்டு மேலாளர் சேவைகள் உள்ளன. லாஸ்ட்பாஸ் , டேஷ்லேன், 1பாஸ்வேர்டு என இந்த பட்டியல் நீள்கிறது.
என்ன பாஸ்வேர்டு மேலாளரின் சேவகம் பெற நீங்கள் தயாரா?
–
டெக் டிக்ஷனரி- 9 ; ஜிப் (GIF) – கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம்