சகப்பதிவரான தமிழ்நெஞ்சம் ஒரு பின்னூட்டத்தில் வாக்குகளுக்கு பதில் வாக்களிப்பதில்லை என்றும் நாகரீகம் கருதிகூட தனது தளத்தின் பக்கம் வந்து பின்னூட்டம் இடுவதில்லை என குறைகூறியிருந்தார். நணபரின் பதிவில் இருந்த வேகம் அவரது உணர்வுகளை தெளிவாக புலப்படுத்துகிறது.
முதலில் தமிழ்நெஞ்சத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் என தரப்பு விளக்கத்தையும் அளிக்க கடமைபட்டுள்ளேன்.
வாக்களிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரிதான். ஆனால் எனக்கு வாக்களித்தாலேயே ஒருவருக்கு பதில் வாக்கு அளிப்பது முறையாக இருக்காது என்றே பதில் வாக்களிப்பதை தவிர்த்து வருகிறேன். தவிர வாக்களிப்பார்கள் என்னும் எதிர்பார்ப்பில் வாக்களிப்பதையும் தவறாக கருதுகிறேன்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்லது என கருதும் பதிவுகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கொள்கை.
இது ஒரு புறம் இருக்க ,வாக்களிப்பதில்லை. பின்னுட்டம் இடுவது இல்லையே தவிர என் பதிவை தொடர்ந்து வாசிக்கும் சக பதிவர்களின் பதிவுகளை நானும் வாசித்தே வருகிறேன். மற்ற நல்ல பதிவுகளையும் வாசிக்கிறேன்.அந்த வகையில் நண்பர் தமிழ்நெஞ்சத்தின் பதிவுகளையும் அவப்போது படித்து வருகிறேன்.
இப்படிப்பட்ட நல்ல பதிவுகள் குறித்து தனியே எழுதவும் திட்டமிட்டுள்ளேன்.
எனவே நண்பர் தமிழ்நெஞ்சம் தொடர்ந்து என் பதிவுக்ளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
வேர்ட்பிரஸ்காரர்கள் தனித்தீவா என்பது எனக்கு தெரியாது.என்னைபொருத்தவரை ஒதுங்கியிருக்க விரும்பவில்லை. மற்றபடி அறிவிஜிவீ அடைமொழிக்கு நன்றி. நான் அறிவுஜீவீ இல்லாவிட்டாலும் கூட.

0 Comments on “தமிழ்நெஞ்சத்திற்கு நன்றி”
tamilennjam
கண்டிப்பாக உங்கள் பதிவுகளைப் படிப்பேன். டிவிட்டர் பற்றிய உங்கள் பதிவுகளின் விசிறி நான்.
உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
மீண்டும் சந்திப்போம். என் ஓட்டு உங்களுக்கு எப்போதும் உண்டு.
அது சும்மா படம் காட்டுதல், ஃபில்ம் காட்டுதல் என்கிற வகையில் இடப்பட்ட பின்னூட்டம். நன்றி