கருந்துளைகள் பற்றி தெரிந்து கொள்ளத்துவங்கும் போது, சுவாரஸ்யமான கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும். சூரியன் கருந்துளையாக மாறுமா? எனும் கேள்வியும் இந்த வரிசையில் மனதில் தோன்றும். இது சுவாரஸ்யமான கேள்வி மட்டும் அல்ல, கொஞ்சம் கிலியை ஏற்படுத்தும் கேள்வியும் தான்!.
சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் அல்லவா? நட்சத்திரங்கள் இறந்து போகும் தருவாயில் கருந்துளையாகின்றன என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
நட்சத்திரங்களை ஜொலிக்க வைத்துக்கொண்டிருக்கும் நெருப்புக்கு தீனி போடும் எரிபொருள் தீர்ந்து போய்விட்டால், அவை உள்ளுக்குள் நொறுங்கத்துவங்கிம், நிறை பன்மடங்கு அதிகரித்து அதன் பயனாக, ஈர்ப்பு விசையும் அதிகமாகிறது. இந்த ஈர்ப்பு விசைக்கான விடுபடு வேகம் ஒளியின் வேகத்தை மிஞ்சக்கூடியதாக இருந்தால் அதன் காரணமாக அவை கருந்துளையாக மாறுகின்றன.
இது தான் கருந்துளையும் சுருக்கமான தத்துவம். ஆக, நட்சத்திரங்கள் தான் கருந்துளையாக மாறுகின்றன என்றால், நம் சூரியனும் என்றாவது ஒரு நாள் கருந்துளையாக மாறிவிடும் அல்லவா? எனும் கேள்வி எழுவது இயல்பானது தானே!
கருந்துளை தொடர்பான இரண்டாவது பெருங்கவலையாக இதை சேர்த்துக்கொள்ளலாம். முதல் பெருங்கவலை நம் பூமியை என்றேனும் கருந்துளை விழுங்கிவிடுமா? என்பது. இவைத்தவிர மூன்றாவது பெருங்கவலை ஒன்றும் இருக்கிறது. நாம் கருந்துளையில் சிக்கினால் என்னாகும் என்பது? இந்த கேள்விகளுக்கான பதில் மிகவும் சுவாரஸ்யமானவை. எனினும் இப்போதைக்கு, முதல் பெருங்கவை கேள்விக்கான பதிலை மட்டும் பார்க்கலாம்.
சூரியனும் கருந்துளையாக மாறும் வாய்ப்பு அல்லது அபாயம் இருக்கிறதா? எனும் கேள்வி இயல்பாக எழக்கூடியது என்றாலும், இதற்கான பதில் பூலோகவாசிகளே கவலை வேண்டாம், ஒரு நாளும் சூரியன் கருந்துளையாகாது என்பது தான்.
ஏன்?
நட்சத்திரங்கள் ஆயுள் காலம் முடிவதால் தான் கருந்துளை உண்டாகின்றன என்பது உண்மை தான் என்றாலும், இதற்கு ஒரு முக்கிய நிபந்தனை இருக்கிறது. அந்த நட்சத்திரம் கொஞ்சம் பெரிதாக இருக்க வேண்டும் என்பது தான் அது. நம்முடைய சூரியன் அத்தனை பெரிய நட்சத்திரம் அல்ல என்பதே விஷயம்.
ஆம், நம்முடைய சூரியனின் ஆயுள் காலம் முடிந்து அது இறக்கும் போது, கருந்துளையாக மாறும் அளவுக்கு தேவையான நிறையை பெறும் அளவிற்கு அது பெரியதல்ல. எனவே அதனால் ஒளியையும் உறிஞ்ச தேவையான ஈர்ப்பு வீசையை பெறும் அளவுக்கான நிறையை பெற முடியாது.
சின்னஞ்சிறிய கருந்துளை என்று அறியப்படக்கூடியவை சூரியனை விட மூன்று மடங்கு பெரியவை என்று சொல்லப்படுவதை இங்கே நினைத்துப்பார்க்க வேண்டும். ஆனால் இத்தகையை சிறிய கருந்துளைகளும் சொற்பமானவையே. பெரும்பாலான கருந்துளைகள் சூரியனை விட குறைந்தது பத்து மடங்கு பெரியவை. ஒரு சில சூரியனை விட மில்லியன் மடங்கு ஏன் பில்லியன் மடங்கு பெரியவை என்கின்றனர். எண்ணிக்கை தலை சுற்ற வைக்கிறதா?
ஆக, சூரியன் கருந்துளையாகும் அளவுக்கு பெரியதல்ல என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். எனவே சூரியன் கருந்துளயாக மாறும் அபாயம் எல்லாம் இல்லை. ஆனால் சூரியனுக்கும் ஒரு நாள் எரிபொருள் தீரும் நிலை வரும் என்கின்றனர். நல்ல வேளையாக இதற்கு இன்னும் நான்கு பில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என்கின்றனர். அப்படி ஆகும் போது, சூரியன் அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நித்திரையில் ஆழ்ந்துவிடும்.
சூரியனைப்போன்ற நட்சத்திரங்கள் உண்மையில் ஒயிட் டுவார்ப்பாக மாறும். ( பார்க்க முந்தைய பிளாக் ஹோல் குறிப்பு).
—
https://history.amazingspace.org/resources/explorations/blackholes/teacher/sciencebackground.html
https://sciencing.com/black-hole-myths-4897.html