டிஜிட்டல் டைரி- கூகுள் வரைபட சேவையில் புதிய வசதி

Google-Maps-India-hed-796x419கூகுள் மேப்ஸ் எனும் பெயரில் கூகுள் வழங்கி வரும் வரைபட சேவையை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்கலாம். கால்டாக்சியில் போகும் போது, அநேகமாக அதன் டிரைவர் டாஷ்போர்டில் கூகுள் வரைபடத்தை பார்த்தபடி வழியை தெரிந்து கொள்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். உங்களுக்கே கூட இருப்பிடம் தொடர்பான சந்தேகம் வரும் போது, கையில் உள்ள ஸ்மார்ட்போனில், கூகுள் வரைபட சேவையை நாடியிருக்கலாம்.

நீங்களாக நாடாவிட்டாலும் கூட, கூகுளில் இருப்பிடம் சார்ந்த தகவல் தேடும் போது, வரைபடத்தின் மேல், கூகுள், அந்த தகவலை இடம்பெறச்செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். விஷயம் என்னவென்றால், கூகுள் வரைபட சேவை சார்ந்த மூன்று புதிய வசதிகளை கூகுள் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது என்பது தான்.

இந்த வசதிகள் மூலம், நீங்கள் உள்ளூர் பஸ் பயண நேரத்தை தெரிந்து கொள்ளலாம், ரெயிலின் தற்போதைய இருப்பத்தை அறிந்து கொள்ளலாம் மற்றும் போக்குவரத்திற்கான மாற்று வழிகளையும் நாடலாம்.

கூகுள் வரைபட சேவையை அடிக்கடி பயன்படுத்துவர் எனில், அதில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான தகவல்கள் இடம்பெறுவதையும் கவனித்திருக்கலாம். லைவ் பீட் எனப்படும் இந்த போக்குவரத்து நெரிசல் விவரங்களை கொண்டு, கூகுள் வரைபடம் இப்போது, குறிப்பிட்ட இடத்தில் உள்ளூர் பேரூந்தில் பயணிக்க எவ்வளவு நேரம் ஆகும் என கணித்துச்சொல்கிறது.

கூகுள் வரைபடத்தில், உங்கள் இருப்பிடம் மற்றும் செல்லுமிடத்தை சமர்பித்து, போக்குவரத்து ( டிரான்சிட்) எனும் பட்டனை கிளிக் செய்தால், அப்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப, செல்லுமிடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கூகுள் தெரிவிக்கும். சரியான நேரத்தில் செல்லும் என்றால் பச்சை நிறைத்திலும், தாமதமாகும் என்றால் சிவப்பு நிறத்திலும் இந்த தகவல் சுட்டிக்காட்டப்படும்.

இந்த சேவை முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. சென்னை, மைசூரு, கோவை, பெங்களூரு, மும்பை, தில்லி உள்ளிட்ட பத்து இந்திய நகரங்களில் முதல் கட்டமாக இந்த சேவை அறிமுகம் ஆகிறது.

இதே போலவே, கூகுள் வரைபடத்தில் தொலைதூர ரெயில்களின் நிலையையும் தெரிந்து கொள்ளலாம். வரைபடத்தில், குறிப்பிட்ட ரெயில் நிலையம் அல்லது இருப்பிடத்தின் பெயரை தெரிவித்ததுமே, அந்த மார்கத்திலான ரெயில்கள் குறித்த தகவல்கள் திரையில் தோன்றும். ஒவ்வொரு ரெயிலுக்குமான தற்போதைய நிலையையும் அதில் பார்க்கலாம்.

குறிப்பிட்ட அந்த ரெயில் இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும், அது தாமதமாகுமா? என்பது போன்ற விவரங்களை ஸ்மார்ட்போன் திரையிலேயே தெரிந்து கொள்ளலாம். கூகுள் கடந்த ஆண்டு கையகப்படுத்திய வேர் ஈஸ் மை டிரைன் செயலியின் உதவியோடு இந்த வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.

மூன்றாவது சேவை, உங்கள் இருப்பிடத்திற்கு செல்வதற்கான மாற்று போக்குவரத்து வழிகள் தொடர்பான பரிந்துரையாகும். எந்த ஒரு மார்கத்தில் செல்வதாக இருந்தாலும், குறிப்பிட்ட இடத்தை சென்றடைய, ஆட்டோ அல்லது பொது போக்குவரத்தில் எவ்வளவு நேரம் ஆகும் என்பது போன்ற விவரங்களை கூகுள் வழங்குகிறது. முதல் கட்டமாக தில்லி மற்றும் பெங்களூருவில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் வரைபடத்தின் இந்த புதிய வசதிகள் குறித்து மேலும் அறிய விரும்பினால் கூகுள் வலைப்பதிவிற்கு செல்லவும்: https://india.googleblog.com/2019/06/stay-informed-about-local-bus-and-long.html

தலைவலியை குணமாக்கும் செயலி

மைக்ரேன் எனப்பதும் ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இனிப்பான செய்தியாக, ஒரு செயலி அறிமுகமாகி இருக்கிறது. ’ரிலாக்ஸ் ஏ ஹெட்’ (RELAXaHEAD ) எனும் இந்த செயலி, தலைவலியை குறைப்பதற்கான வழிகளை பரிந்துரைக்கிறது.

தலைவலிக்கு பலவிதமான சிகிச்சைகள் இருக்கின்றன. மருந்து மாத்திரைகள் தவிர, பழக்க வழக்கம் சார்ந்த சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், குறிப்பிட்ட வகையான தசைகளை மாற்றி மாற்றி அழுதத்திற்கு உள்ளாக்கி, ரிலாக்ஸ் செய்யும் பயிற்சி தலைவலி ஏற்படுவதை குறைப்பதாக கருதப்படுகிறது.

இந்த எளியை சிகிச்சை முறையை ஸ்மார்ட்போன் வாயிலாக பரிந்துரைக்கும் வகையில்  ’ரிலாக்ஸ் ஏ ஹெட்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் பயன்பாடு தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டு அது தொடர்பான விவரங்கள், நேச்சர் டிஜிட்டல் மேகசைன் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒற்றை தலைவலி சிகிச்சைக்கு, பழக்க வழக்கம் சார்ந்த பயிற்சிகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், பெரும்பாலான நோயாளிகள் அவற்றை தொடர்வதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த செயலி இத்தகைய பயிற்சியை மேற்கொள்வதற்கு எளிதாக வழிகாட்டும் என கருதப்படுகிறது.

இந்த செயலிக்கான பரிசோதனையில், இது தலைவலி தோன்றுவதை வெகுவாக குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் இந்த செயலியை டவுண்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.irody.relaxahead&hl=en_IN

கையடக்க வாஷிங்மிஷின்

இணையம் மூலம் நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்ட தளத்தில், புதுமையான திட்டங்கள் மற்றும் கேட்ஜெட்கள் அறிமுகத்திற்கான கோரிக்கைகளை பார்க்கலாம். அந்த வகையில், இப்போது கையடக்க வாஷிங்மெஷின் ஒன்றை அறிமுகம் செய்ய வாஷ்வாவ் (WASHWOW ) எனும் குழு முயற்சித்து வருகிறது.

சோப் தேவையில்லாமல், துணிகளை கசக்காமல், அடுத்து துவைக்காமல், இந்த சாதனம் அழகாக துணி துவைத்து தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்? பக்கெட் ஒன்றில் தண்ணீரை நிரப்பி, அதில் துவைக்க வேண்டிய துணி மற்றும் இந்த சாதனத்தை முக்கினால், இந்த சாதனம் எலக்ட்ரோலைசிஸ் எனும் முறைப்படி, துணியில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்கிவிடுவதாக சாதனத்திற்கான கிஸ்டார்ட்டர் பக்கம் தெரிவிக்கிறது.

கைடக்க சாதனம் என்பதால் எங்கு வேண்டுமாலும் எடுத்துச்செல்லலாம். எனவே பயணங்களின் போது பயன்படுத்த ஏற்றது. துணிகள் என்றில்லை, பொம்மை, சமயலறை பொருட்கள்  போன்றவற்றையும் இதன் மூலம் சுத்தம் செய்யலாம்.

இந்த புதுமையான சாதனத்தை அறிமுகம் செய்ய கிக்ஸ்டார்ட்டரில் கேட்டதை விட அதிக நிதி கிடைத்திருக்கிறது.

அடுத்த தலைமுறை வாஷிங்மெஷின் என குறிப்பிடப்படும் இந்த சாதனம் குறித்து மேலும் விவரங்களுக்கு: https://www.kickstarter.com/projects/washwow/washwow-30-mini-wash-and-disinfect-gadget-without?utm_campaign=b9c406f9&utm_content=link&utm_medium=kickbooster&utm_source=mentalfloss.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *