பேஸ்புக் முதலீட்டை ஈர்த்துள்ள மீஷுவின் வெற்றிக்கதை!

maxresdefaultஇந்திய ஸ்டார்ட் அப் துறையை கவனித்து வருபவர்களுக்கு, மீஷூ (Meesho ) என்பது தெரிந்த பெயராகவே இருக்கும். மற்றவர்களுக்கு, மீஹூவா? என்றே கேட்கத்தோன்றும். ஆனால், மீஷூவை அறிந்திராதவர்கள் கூட, மீஷூ என்ன செய்கிறது, எப்படி செயல்படுகிறது? என அறிந்து கொள்ளும் ஆர்வம் இப்போது உண்டாகி இருக்கும். முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக், மூஷூவில் முதலீடு செய்திருக்கும் செய்தியே, இந்த ஆர்வத்திற்கு காரணம்.

பேஸ்புக் கூடை கூடையாக பணம் வைத்திருக்கிறது, ’வாட்ஸ் அப்’ உள்பட அது வாங்க விரும்பும் நிறுவனங்களை எல்லாம் வாங்கி போடுகிறது என்றாலும் கூட, மீஹூ முதலீடு கவனிக்க கூடியது. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் பேஸ்புக் செய்திருக்கும் முதல் முதலீடு இது. சில ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை முழுமையாக வாங்கியது என்றாலும், முதல் முதலீடாக மீஷூ அமைகிறது.

பேஸ்புக் முதலீடு, மீஷூ மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, இந்திய சந்தையில், மீஷு வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நிறுவனமாகவே இருக்கிறது. அதனால் தான், பேஸ்புக் முதலீடு செய்துள்ளது என்பது வேறு விஷயம்.

ஒரு விதத்தில் மீஷு இந்தியாவுக்கு ஏற்ற இணைய நிறுவனம் எனலாம். ஏனெனில் இது சமூக வர்த்தகத்திற்கு வழி செய்து, சாமானியர்கள் தொழில்முனைவோராக செயல்பட உதவி வருகிறது.

அதென்ன சமூக வர்த்தகம் என கேட்கலாம். இ-காமர்ஸ் எனப்படும் மின் வணிகம் பிரபலமாக இருக்கிறது அல்லவா? இணையம் மூலமான விற்பனையாக இது அமைகிறது. இதே போல, சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விற்பனை ஆங்கிலத்தில் சோஷியல் காமர்ஸ் என கூறப்படுகிறது. அதாவது சமூக வர்த்தகம் அல்லது வணிகம்.

இந்த பிரிவில் தான், மீஷு செயல்பட்டு வருகிறது. அடிப்படையில், மீஷூ என்ன செய்கிறது என்றால், மக்கள் தங்கள் சமூக ஊடக வட்டத்தில், பொருட்களை விற்க வழி செய்கிறது. இவர்கள் மறுவிற்பனையாளர்கள் ( ரீசெல்லர்கள்) என குறிப்பிடப்படுகின்றனர். மீஷூ செயலியில் பட்டியலிடப்பட்டுள்ள எண்ணற்ற பிராண்ட்களில் இருந்து, தேர்வு செய்து அவை வழங்கும் பொருட்களை விற்பனை செய்யலாம்.

இந்த ஏற்பாட்டில் என்ன சிறப்பு என்றால், மறுவிற்பனையாளர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் பொருட்களை விற்பனை செய்வதை தவிர வேறு எதையுமே செய்ய வேண்டும். பொருட்களை டெலிவரி செய்வது, பணம் வசூலிப்பது போன்றவற்றை எல்லாம் மீஷு பார்த்துக்கொள்ளும். விற்பனை முடிந்தவுடன், அதற்குறிய கமிஷன் அல்லது லாப தொகையை மறு விற்பனையாளர் கணக்கிற்கு அனுப்பி வைத்துவிடும்.

ஆக, மறுவிற்பனையாளர்கள் என்பவர்கள் அடிப்படையில் தங்கள் சமூக ஊடக நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு பொருட்களை பரிந்துரைத்து வாங்க செய்தால் போதும். சமூக ஊடகம் என்பது இங்கே பிரதானமாக, வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்காக கொள்ளப்படுகிறது.

மீஷு பட்டியலிட்டுள்ள பொருட்களை சமூக ஊடக நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்வதும் எளிதானதே. மீஷு பக்கத்திலேயே, பொருட்கள் அருகே அதற்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து வாட்ஸ் அப் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் பொருட்களை வாங்கினால், அதற்கேற்ற லாபம் கிடைக்கும்.

மீஷு முன்வைக்கும் சமூக வர்த்தகத்தை, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மறுவிற்பனையாளர்கள் இருதரப்பினருக்குமே பலன் தரக்கூடியது. வர்த்தக நிறுவனங்களை பொருத்தவரை, வாடிக்கையாளர்களை எப்படி சென்றடைவது என அதிகம் கவலைப்பட வேண்டாம். மீஷுவில் கடை விரித்தால், மறுவிற்பனையாளர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் வலைவீசி வாடிக்கையாளர்களை தேடித்தருவார்கள். மறு விற்பனையாளர்களை பொருத்தவரை, தங்கள் வாட்ஸ் அப் செயல்பாட்டையும், நட்பு வட்டத்தையும் வருவாயாக மாற்றிக்கொள்ளலாம்.

இந்த இரு தரப்பினருக்குமான பாலமாக மீஷூ விளங்குகிறது. இணைய வர்த்தகத்தில் ஈடுபட முடியாத சிறிய வர்த்தக நிறுவனங்களையே மீஷூ இலக்காக கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் இணைய கடை விரிக்க வழி செய்கிறது. அதே நேரத்தில், பொருட்கள் டெலிவரி மற்றும் பணம் செலுத்தலுக்கும் எளிதாக வழி செய்துள்ளது. இந்த காரணங்களினால், சிறிய வர்த்தகங்களும், பொதுமக்களும் மீஷுவை பெருமளவில் நாடி வருகின்றனர்.

இல்லத்தலைவிகள், கல்லூரி மாணவர்கள், பகுதி நேர பணியை நாடுபவர்களுக்கு மீஷு வரப்பிரசாதம் எனலாம்.

மீஷு துவங்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகிறது. ஐஐடி முன்னாள் மாணவர்களான, விதித் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பர்ன்வால் ஆகியோர் மீஷுவை துவக்கினர். உண்மையில், இருவரும் வேறு ஒரு ஐடியாவை செயல்படுத்த முற்பட்டு கையை சுட்டுக்கொண்டனர். அவர்கள் துவங்கிய பேஷன் ஸ்டார்ட் அப்பை இழுத்து மூட வேண்டியிருந்தது.

ஆனால், இந்த தோல்வி அனுபவத்தின் போது முக்கிய கண் திறப்பு ஒன்று சாத்தியமானது. அதாவது இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் பலரும் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் விற்பனை செய்வதை கவனித்தனர். இந்த நிறுவனங்கள் தங்களுக்கான் சொந்த இணையதளம் இல்லாமல் சமூக ஊடகங்களை நம்பி செயல்பட்டன.

இந்த வர்த்தக முறை நல்ல பலனை தந்தாலும் இது, பணம் செலுத்தும் வசதி உள்ளிட்டவற்றில் நிறைய சிக்கல்கள் இருப்பதை கவனித்தனர். விளைவு, இந்த குறைகளை சரி செய்து, வர்த்தகர்களுக்கும் மேலும் அதிக விற்பனை பரப்பை அளிக்கும் வகையில், மீஷூவை துவக்கினர். சிறிய வர்த்தகர்களுக்கான இணைய கடை அமைத்தலை எளிதாக்கியதோடு, மறு பக்கத்தில் பொதுமக்களும் இணைய தொழில்முனைவோராகி வருவாய் ஈட்ட வழி செய்வதாக மீஷு வர்த்தக மாதிரி அமைந்துள்ளது.

வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் குழுக்கள் மூலமாக ஏற்கனவே பலரும் வர்த்தக முயற்சியில் ஈடுபட்டிருப்பதை பார்க்கலாம். அதற்கான மேம்பட்ட இணைய மேடையாக மீஷு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிக்கு ஏற்ற இணைய வர்த்தக மாதிரியால் வரவேற்பும், வெற்றியும் பெற்றுள்ள மீஷு, ஏற்கனவே ஒரு சில சுற்று நிதி திரட்டியுள்ள நிலையில், இப்போது பேஸ்புக்கின் நிதியை பெற்றுள்ளது. சிறு வர்த்தகர்களுக்கு உதவி செய்வதிலும் இணைய தொழில்முனைவோரை உருவாக்குவதிலும், மீஷூவுக்கும் பேஸ்புக்கிற்கும் பொது இலக்கு இருப்பதாக மீஷு தரப்பில் சொல்லப்பட்டாலும், பேஸ்புக், வாட்ஸ் அப் என இரண்டு சேவைகளுக்குமே முக்கிய சந்தையாக இருக்கும் இந்தியாவில் இது பேஸ்புக்கிற்கு அதிக பலன் தரக்கூடிய முதலீடாக பார்க்கப்படுகிறது.

பேஸ்புக் முதலீட்டால், மீஷு இன்னும் பிரலபமாகி, மேலும் பல சாமானியர்களுக்கு பலன் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *