இணையவாசிகள் மத்தியில், பப்ஜி (PUBG) விளையாட்டு செல்வாக்கு மிக்கதாக இருப்பதோடு சர்ச்சைக்குரியதாகவும் இருக்கிறது. கேம் சூழலில் எதிராளிகளை சுட்டுத்தள்ளி ஒற்றை ஆளாக எஞ்சி நிற்கும் இந்த சாகச விளையாட்டு அதன் பயனாளிகளி பெரிதாக கவர்ந்திருக்கும் நிலையில், இந்த விளையாட்டின் தாக்கம் குறித்து பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலை இருக்கிறது. பப்ஜி மீதான ஆர்வம் மோகமாக மாறி பல விபரீந்தங்களுக்கு காரணமாக இருப்பது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் சூழலில், பல கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒரு சில நகரங்களில் இந்த விளையாட்டிற்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளன. அண்மையில், அகமதாபாத்தைச்சேர்ந்த இளம் பெண் ஒருவர், பப்ஜி விளையாட்டு மோகத்தால், தனது கணவர், மற்றும் கைகுழந்தையை பிரிய முயன்று விவாகரத்து கோரிய நிகழ்வு தொடர்பாகவும் செய்தி வெளியானது. ஆனால் சர்ச்சைகளை மீறி, பப்ஜி விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கதாக தொடர்கிறது.
பப்ஜி விளையாட்டை அறியாதவர்களுக்கு, இந்த விளையாட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது என கேட்கத்தோன்றலாம். பப்ஜி விளையாட்டு ஏன் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது என்பது தனியே ஆய்வுக்குறியது என்றாலும், உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கும், இந்த விளையாட்டு குறித்து பரவலாக பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்:
பப்ஜியின் பிரம்மா!
இதுவரை வெளியான வீடியோகேம்களில் முன்னணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு பப்ஜி நன்கறியப்பட்டதாக இருக்கிறது. எல்லாம் சரி, பிரெண்டன் கிரீனை (Brendan Greene ) உங்களுக்குத்தெரியுமா? இவர் தான் பிளேயர் அன்நோன்ஸ் பேட்டில்கிரவுண்ட் என்பதன் சுருக்கமான பப்ஜி விளையாட்டை உருவாக்கிய பிரம்மா!
அயர்லாந்துகாரரான கிரீன், அடிப்படையில் ஒரு கிராம்பிக் டிசைனர். வீடியோ கேமில் பெரும் ஆர்வம் கொண்டவர். பணி நிமித்தமாக பிரேசிலில் இருந்த காலத்தில் அவரே பல வீடியோ கேம்களை விளையாடி இருக்கிறார். அவர் விளையாடிய பெரும்பாலான விளையாட்டுகள் ஒரே மாதிரி இருப்பதாகவும், அவற்றை விளையாடும் விதம் அப்படியே மனப்பாடம் செய்துவிடும் அளவுக்கு இருப்பதாகவும் அவர் நினைத்து அலுத்துப்போனதாக விக்கிபீடியா தகவல் மூலம் அறிய முடிகிறது.
இந்நிலையில் ஜப்பானிய சண்டை படமான, பேட்டில் ரயால் படத்தின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட டேஇசட் எனும் வீடியோ கேமால் ஊக்கம் பெற்று அதே பாணியில் அர்மா2 எனும் வீடியோ கேமை உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாக, ஹங்கர் கேம்ஸ் எனும் நாவலின் தாக்கத்தால் அவர் உருவாக்கிய கேம் தான் பப்ஜி விளையாட்டாக, 2017 ல் அறிமுகமானது. முதலில் கம்ப்யூட்டர்களில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்ற பிறகு, கடந்த ஆண்டு மொபைல் போன்களிலும் அறிமுகமாகி வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.
அடுத்து என்ன?
பப்ஜி விளையாட்டு அதன் பயனாளிகளுக்கு அலுக்காவிட்டாலும் அதன் பிரம்மாவுக்கு அலுத்துவிட்டது. ஆம், கிரீன் பப்ஜி விளையாட்டில் இருந்து விலகி கொள்வதாக அண்மையில் அறிவித்துள்ளார். பப்ஜி கேமுக்கான இயக்குனர் பதவியில் இருந்து விலகி கொண்டு, பப்ஜி கார்ப்பரேஷனில், புதிய பிரிவு ஒன்றுக்கு அவர் சென்றுள்ளார். சிறப்பு விளையாட்டுகளில் இந்த பிரிவு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரிவுக்காக புதிய குழுவை அமைப்பதில் கவனம் செலுத்துவதற்காக ஆம்ஸ்டர்டம் நகருக்கு குடி பெயர்ந்துள்ளார். அது மட்டும் அல்ல தனக்கு பேட்டில் ரயால் விளையாட்டுகளில் போரடித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். எனவே பப்ஜி 2 வெளியாக வாய்ப்பில்லை. ஆனால் கிரீன் அடுத்து என்ன உருவாக்கப்போகிறார் என்பது சுவாரஸ்யமான கேள்வி.
பெயர் காரணம்
மற்ற வீடியோ கேம்களோடு ஒப்பிட்டால், பப்ஜி விளையாட்டின் பெயர் கொஞ்சம் விநோதமாக இருக்கும். அதென்ன, பிளேயர் அன்நோன்ஸ் பேட்டில் கிரவுண்ட், அர்த்தமில்லததாக இருக்கிறதே என நினைக்கலாம். இந்த பெயர், கிரீன் வீடியோ கேம் விளையாட்டில் ஈட்பட்டிருந்த போது தனக்காக வைத்துக்கொண்ட பெயர். வீடியோ கேமை உருவாக்கிய போது அந்த பெயரையே கேமுக்கும் வைத்துவிட்டார். பெயரும் பெரிய அளவில் ஹிட்டாகி விட்டது.
பப்ஜி வரைபடம்
பப்ஜி விளையாட்டில் அதன் வழிகாட்டி வரைபடம் தான் அடிப்படை. இராங்கல் (Erangel ) என்பதே பப்ஜியின் முதன்மை வரைபடமாக இருக்கிறது. கிரீனின் செல்ல மகளின் இரன் மற்றும் தேவதையை குறிக்கும் ஏஞ்சல் எனும் வார்த்தையை கலந்து இதற்கு பெயர் சூட்டப்பட்டதாம்.
விளம்பரம் இல்லை
பப்ஜி விளையாட்டு ஆரம்பம் முதல் விளம்பரம் இல்லாமல் வளர்ந்திருக்கிறது. அறிமுகமான போது இதற்காக விளம்பரம் செய்யப்படவில்லை. பெரும்பாலும் பயனாளிகளின் வாய்மொழி விளம்பரத்தால் பிரபலமானது. பயனாளிகளில் பலர் பித்து பிடித்தது போல தொடர்ந்து விளையாடும் பழக்கம் கொண்டிருந்ததால் மேலும் பிரபலமானது. ஆனால் இந்த டிவிகளில் முதல் முறையாக மொபைல் வீடியோ கேம்களுக்கான விளம்பரமாக பப்ஜி விளம்பரம் வெளியானது.
சாதனை கேம்
பப்ஜி விளையாடு பலரும் ஒன்றாக சேர்ந்து விளையாடக்கூடிய கேம். ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆன்லைனில் விளையாடலாம். ஒரே நேரத்தில் அதிகம் பேர் சேர்ந்து விளையாடிய கேம் எனும் சாதனையையும் படைத்திருக்கிறது. 2017 டிசம்பர் மாதம் 3,106,358 பேர் பப்ஜியை ஒரே நேரத்தில் விளையாடியுள்ளனர்.
வெற்றி வாசகம்
பப்ஜி விளையாடும் பலரும் காணத்துடிக்கும் வாசகம், வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் என்பதாகும். இந்த வாசகம் திரையில் தோன்றினால், கேமில் வென்றுவிட்டதாக அர்த்தம். இது அத்தனை எளிதில் சாத்தியம் இல்லை என்பது வேறு விஷயம். இந்த வாசகம், 1930 களில் அமெரிக்காவில் பெரும் பொருளாதார தேக்க நிலை சூழலில் சூதாடிகள் மத்தியில் பிரபலமாக இருந்த வாசகமாகும். அதாவது காசு வைத்து சூதாடி ஜெயித்தால் அன்று இரவு, சிக்கன் விருந்து சாப்பிடலாம் என அர்த்தம்.
பப்ஜி எந்திரன்கள்
பப்ஜி விளையாட்டில் பிளேயர்கள் தவிர, பலவித எந்திரன்கள் உண்டு. இவை எல்லாம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பாட்கள். இவை சுடுவது திறன் இல்லாதவையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. புதியவர்கள் உள்ளே வரும் போது அவர்கள் உடனடியாக தோற்றுபோய் வெளியேறிவிடக்கூடாது எனும் நோக்கத்துடன் இந்த பாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு விதத்தில் பப்ஜி வெற்றிக்கு இதுவும் காரணம் போலும்.
பப்ஜியில் தடை
பப்ஜி விளையாட்டு ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக பலரும் இதை தடை செய்ய வேண்டும் என பேசுவதை கேட்டிருக்கலாம். ஆனால் பப்ஜி கேம் ஆடுபவர்கள் தடை செய்யப்படலாம் என்பது உங்களுக்குத்தெரியுமா? ஆம், பப்ஜி விளையாடும் விதத்தில் முறையற்று நடந்து கொள்வது கண்டறியப்பட்டால் 100 ஆண்டு வரை கேம் ஆட தடை விதிக்கப்படலாம். எனவே பப்ஜியில் ஜெயிப்பதற்காக, ஹைடெக் குறுக்கு வழிகளை கையாண்டால் வெளியேற்றப்படுவது நிச்சயம்.
ஏன் மோகம்?
பப்ஜி விளையாட்டு ஏன் இந்த அளவுக்கு மோகத்தை உருவாக்க கூடியதாக இருக்கிறது எனும் கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள விரும்பினால், கேள்வி பதில் தளமான குவோராவில் இது தொடர்பாக நடைபெற்ற விவாத சர்ட்டை படித்துப்பார்க்கலாம்: https://www.quora.com/Is-PUBG-an-addictive-game
—