ai.jpegந்த பொருளை வாங்குவதற்கு முன்பாக, இந்த பொருள் இப்போது தேவைதானா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை கேட்டுக்கொள்வது நல்லது என்பது தனிநபர் நிதி ஆலோசனையில் தவறாமல் கூறப்படும் ஒரு விஷயம்.
தேவையில்லாத பொருட்களில் வீண் செலவு செய்வதை தவிர்க்க இந்த ஆலோசனை உதவும் என கருதப்படுகிறது. இந்த ஆலோசனையை நினைவூட்டும் வகையில் அழகான இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
திங்க்டுவைஸ்.மீ எனும் இந்த இணையதளம், கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில், ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கவும் ஆலோசனையை நினைவூட்டுகிறது.
இந்த தளத்தில் நுழைந்ததுமே, இன்று என்ன பொருள் வாங்கி பணத்தை வீணடிக்கப்போகிறீர்கள் என கேட்கப்படுகிறது. நீங்கள் வாங்க விரும்பும் பொருளையும் அதற்கான விலையையும் டாலரில் குறிப்பிட்டால், அந்த விலையில் நீங்கள் வேறு என்ன பயனுள்ள விஷயங்களை எல்லாம் செய்யலாம் என பரிந்துரைக்கிறது.
உதாரணமாக, புதிய ஐபோன் வாங்க இருப்பதாக கூறினால், அதற்கு பதிலாக சேதமடைந்த பள்ளிகளில் 4 சதவீத பள்ளிகளை சீரமைக்க உதவலாம், ஆண்டுதோறும் 8 ஏழை மாணவிகளை கல்வி கற்க வைக்கலாம், போர் பாதித்த பகுதிகளில் 1,000 மாணவர்களுக்கு உணவளிக்கலாம் என்பது போன்ற மாற்று யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
டெஸ்லா 3 காரை வாங்கலாம், 500 ஆப்பிள்கள் வாங்கலாம் போன்ற யோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. சமூக நலன் சார்ந்த யோசனைகள் முன்வைக்கப்படும் போது, அவற்றுக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.
ஏழை மாணவர்களுக்கு உணவு அளிக்க பாடுபடும் ஷேர்திமீல் போன்ற செயலிகள் பற்றியும் இந்த பரிந்துரைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
விளையாட்டாக யோசிக்க வைக்கிறது இந்த தளம்: http://thinktwice.me/index.html