பாஸ்வேர்டு என்பது இணைய கணக்குகள் மற்றும் சேவைகளுக்கான நுழைவுச்சீட்டாகும். யூசர் ஐடி எனப்படும் பயணர் பெயருடன் சேர்த்து பயன்படுத்தும் போது, பாஸ்வேர்டு, இணைய சேவைகளுக்கான சாவியாகின்றன. தமிழில் இது கடவுச்சொல் என குறிப்பிடப்படுகிறது.
பாஸ்வேர்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. தாக்காளர்கள் எனும் ஹேக்கர்களால் திருடப்படலாம் என்பது அவற்றில் ஒன்று. எனவே தான் பாஸ்வேர்டு திருடப்பட முடியாத அளவுக்கு வலுவானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
பாஸ்வேர்டை வலுவானதாக மாற்றும் போது அதை நினைவில் கொள்வது சிக்கலாகிறது. நாம் பயன்படுத்தும் இணைய சேவைகள் அதிகரிக்கும் போது, இது இன்னும் சிக்கலாகிறது.
அதனால் தான் பாஸ்வேர்டுக்கு பதில் பாஸ்பிரேஸ் பயன்படுத்தலாம் என்கின்றனர்.
அதென்ன பாஸ்பிரேஸ் ?
பாஸ்வேர்டாக ஒற்றை வார்த்தையை பயன்படுத்துவதற்கு பதில், ஒரு நீளமான வாசகம் அல்லது பல வார்த்தைகளின் தொகுப்பை பயன்படுத்துவதை பாஸ்பிரேஸ் என்கின்றனர். தமிழில் கடவுத்தொடர் என வைத்துக்கொள்ளலாம்.
உதாரணத்திற்கும், எனக்கு படம் பார்க்க பிடிக்கும் எனும் வாசகத்தை ஆங்கிலத்தில் எழுதி அதை அப்படியே பாஸ்பிரேசாக பயன்படுத்தலாம். பாஸ்வேர்டை உருவாக்க பயன்படுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் உத்திகளும், வழிகளும், தாக்காளர்களுக்கு அத்துபடியாக இருப்பதால் அவற்றை யூகிப்பதும் எளிதாகவே இருக்கிறது. அதோடு, எத்தனை முறை எச்சரிக்கப்பட்டாலும் சராசரி பயனாளிகள் பழக்கமான பாஸ்வேர்டு முறைகளில் இருந்து விடுபட முடியாமல் இருக்கின்றனர்.
உதாரணமாக, பாஸ்வேர்டாக சொந்த பெயர் அல்லது பிறந்த தேதி போன்றவற்றை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. ஆக, ஒருவரது தனிப்பட்ட தகவல்கள் கிடைத்தால் அவரது பாஸ்வேர்டை யூகிப்பது அப்படி ஒன்றும் கடினமல்ல.
ஆனால், ஒருவர் சொற்களின் வரிசை அல்லது சொற்றொடரை பயன்படுத்தும் போது, அது அவருக்கான தனிப்பட்ட விஷயமாக அமையும் என்பதால் அதை கண்டுபிடிப்பது எளிதல்ல. மேலும், இதில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்பதால் வழக்கமான தாக்காளர் உத்திகளை கையாள்வது கடினம்.
எனவே, தான் ஒரு வாசகம் அல்லது சொற்றொடரை பாஸ்வேர்டாக பயன்படுத்துவது ஏற்றதாக இருக்கும் என்கின்றனர். இத்தகைய வாசகத்தை தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நன்கறியப்பட்ட வாசகம், பொன்மொழிகள் போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும். உங்களுக்கு தனித்தன்மையானதை தேர்வு செய்யலாம்.
இப்படி தேர்வு செய்யும் சொற்றொடரை இன்னும் வலுவாக்க நிறைய வழிகள் சொல்லப்படுகின்றன. சொற்களின் முதல் எழுத்துக்களை கொட்டை எழுத்தாக மாற்றிக்கொள்ளலாம். சிறப்பு எழுதுகள் பொருந்தக்கூடிய இடத்தில் அவற்றை மாற்றிக்கொள்ளலாம். முடிவில் அல்லது இடையே அடைப்புக்குறி சேர்த்துக்கொள்ளலாம். எண்களை சேர்க்கலாம். இவை பாஸ்வேர்டை வலுவாக்கும். அதே நேரத்தில் இந்த மாற்றங்களை நம்மாலும் எளிதாக நினைவில் கொள்ள முடியும்.
இன்னொரு உத்தியாக, ஒரு சொற்றொடரை தேர்வு செய்து, அவற்றில் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் சேர்த்து, அவற்றுடன் சிறப்பு எழுத்துகள் மற்றும் எண்களை இடம்பெற வைத்து சிக்கலான ஆனால் எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய புதிய பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம் என்கின்றனர்.
நீங்களும் முயன்று பார்க்கலாம்.
தொழில்நுட்ப காமிக்காரரான ராண்டால் முன்ரோ , பாஸ்வேர்டு மற்றும் பாஸ்பிரேஸ் பற்றி அட்டகாசமான காமிக் ஒன்றை வரைந்திருக்கிறார். 20 ஆண்டு பழக்கத்தில் நாம் நினைவில் கொள்ள கடினமான ஆனால் கம்ப்யூட்டர்கள் எளிதாக கண்டுபிடித்துவிடக்கூடிய பாஸ்வேர்டை உருவாக்க நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என அவர் கேலியாக குறிப்பிடுகிறார்.:https://securityboulevard.com/2019/03/lets-settle-the-password-vs-passphrase-debate-once-and-for-all/
–
டெக் டிக்ஷனரி- 23 லாண்டிங் பேஜஸ் (landing pages ) – குதிக்கும் பக்கம் அல்லது அறிமுக தளங்கள்