வாயில்லா ஜீவனுக்காக வாய்ஸ்

“”சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என்று பாரதி குமுறியது போல, ஏதாவது ஒரு கொடுஞ் செயலை கண்டு  உங்களுக்கும் நெஞ்சம் பதறுகிறதா?  இந்த உணர்வோடு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறீர்களா?

ஒரு இணையதளம் அமைத்து உங்கள் நோக்கம் நிறைவேற போராடினால் தான் என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த அலக்ஸ் அலிக்கான்சான்யன் என்பவர் நாய்களை காப்பதற்காக இப்படி ஒரு இணையதளத்தை அமைத்து செயல்பட்டு வருகிறார். 

ஒரு நோக்கம் நிறைவேறுவதற்காக  அமைக்கப் படும் இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்ப தற்கான உதாரணமாக, இதனை சொல்லலாம். ‘dogsindanger.com’ இதுதான் அந்த தளத்தின் முகவரி. உலகிலேயே செல்லப்பிராணிகள் அதிகம் வளர்க்கப்படும் தேசமாக அமெரிக்கா விளங்குகிறது. 

செல்லப் பிராணிகளாக வளர்க்கப் படும் நாய்கள் அதிகம் கொல்லப் படுவதும் அந்நாட்டில் தான்! ஆம், ஆண்டுதோறும் அமெரிக்காவில் 40 லட்சம் நாய்கள் கொல்லப் படுகின்றன.

இது பரிதாபமான நிலைதான். பல்வேறு காரணங்களினால் பராமரிப்பின்றி விடப்படும் நாய்கள் வேறு வழியின்றி கொல்லப் படுகின்றன. இத்தனைக்கும், தெரு நாய்கள் மற்றும் பராமரிப்பில்லாத நாய்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்காக அமெரிக்கா முழுவதும் புகலிடங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஆனால் இந்த மையங்களால் பராமரிக்கப்படக் கூடிய எண்ணிக்கையை விட அதிகமாக கைவிடப்பட்ட நாய்கள் வந்து சேரும்போது அவை கொல்லப்பட்டு விடுகின்றன.

மனிதாபிமானம் மிக்கவர்களை இந்த தகவல் வாட்டி வதைத்து விடும். அதிலும், செல்லப்பிராணிகள் மீது பாசம் வைத்திருப்பவர்கள், ரொம்பவே துடித்துப்போய் விடுவார்கள்.

அலக்ஸ் அலிக்கான்சும் இப்படித்தான் துடித்தார். ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்றுஅவர் விலகிச் சென்று விடவில்லை. தன்னால் முடிந்த வரை நாய்கள் கொல்லப்படுவதை தடுக்க விரும்பினார். 

அதாவது நாய்களை காப்பாற்ற விரும்பு கிறவர்களை  தொடர்பு கொண்டு அவற்றை தத்து எடுத்துக்கொள்ள செய்ய முயற்சிப்பது என முடிவு செய்து கொண்டார். நாய்கள் ஆபத்தில் இருக்கின்றன. அவற்றை காக்க வாருங்கள் என அழைப்பு விடுக்கும் வகையில் “டாக்ஸ் இன் டேஞ்சர்’ இணையதளத்தை ஏற்படுத்தினார்.

தளத்தின் முகப்பு பக்கத்தில் கொல்லப்பட இருக்கும் நாய்களின் புகைப்படமும், அவை பலியாக எஞ்சியிருக்கும் நாட்களும் குறிப்பிடப் பட்டிருக்கும்.

நாட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது, ஒரு வித அவசரத்தை ஏற்படுத்தும். இந்த படத்தை பார்த்து பரிதாபப் படுபவர்கள் சம்பந்தப் பட்ட புகலிட மையத்தை தொடர்பு கொண்டு அந்த நாய்களை தத்து எடுத்துக்கொண்டு அவை கொல்லப்படாமல் தடுக்கலாம்.

இப்படியாக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள புகலிட மையங்களில் கொல்லப்பட உள்ள  நாய்கள் பற்றிய விவரங்கள் திரட்டப்பட்டு பக்கத்தில் இடம் பெறுகிறது. 

காக்கப்படும் நாய்கள், வெற்றிக்கதை என்னும் அறிவிப் போடு அதற்குரிய பகுதியில் யார் அதனை தத்து எடுத்துக் கொண்டுள்ளனர் என்ற தகவலோடு குறிப்பிடப்படுகிறது. தத்து எடுக்கப்படாத அதிர்ஷ்டம்  இல்லாத நாய்களின் சோகத்தை நினைவிடம் என்னும் பகுதியில் உறைந்து போகின்றன.

வெற்றிக் கதைகள் நிம்மதி பெருமூச்சு விட வைக்கின்றன என்றால், சோக கதைகள், நாய்களின் நிலையை எண்ணி வருந்த வைக்கின்றன. மொத்தத்தில் நாய்களை காக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. 

அத்தகைய எண்ணத்தை பெறுபவர்கள் பலிபீடத்தில் உள்ள நாய்களில் ஏதாவது ஒன்றை தத்து எடுக்க முன் வரலாம். அல்லது நேரடியாக புகலிட மையங்களை தொடர்பு கொண்டு அங்கு கொல்லப்படுவதற்காக காத் திருக்கும் நாய்களில் ஒன்றுக்கு அடைக்கலம் அளிக்கலாம்.

தத்து எடுக்க பணமிருந்தும் இயலாதவர்கள் அதற்கு பதிலாக நன்கொடை அளிக்கலாம்.
இன்னும் ஒரு படி மேலே போய் புதிதாக செல்லப் பிராணிகள் வாங்க உள்ள நண்பர்களிடம் இந்த தளத்தை சுட்டிக்காட்டி அதற்கு பதிலாக இங்கு ஒரு நாயை தேர்வு செய்து வளர்க்குமாறு கேட்டுக்கொள்ளலாம்.

அதோடு வீட்டில் உள்ள பிள்ளை களுக்கு விலங்குகளை பாசத்தோடு பராமரிப்பதன் முக்கியத்து வத்தையும் எடுத்துக்கூற வேண்டும் என்று இந்த தளம் ஊக்குவிக்கிறது.
இதுவரை ஆயிரத்து ஆறு நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் இந்த தளத்தின் மூலம் காப்பாற்றப் பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அலெக்ஸ், இந்த தளத்தை நடத்துவதற்காக என்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இதனை நடத்தி வருகிறார். கைவிடப்பட்ட நாய்கள் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக என்று தனியே ஊழியர்களையும் நியமித்துள்ளார்.

“”ஒரு நேரம் தனது விலங்குகளை நடத்தும் விதத்தை கொண்டே அதன் தார்மீக பலத்தை அளவிட முடியும்” என மகாத்மா காந்தி சொன்ன வாசகமே தனது உந்து சக்தி என்கிறார் அலெக்ஸ்.
அமெரிக்காவை நாய் ஆர்வலர்களின்  தேசம் என்று பெருமையோடு குறிப்பிடும் அவர், அதன் விளைவாகவே கைவிடப் பட்ட நாய்களுக்கு புகலிட மையங்கள் அமைத்து பராமரிப் பதையும் சுட்டிக்காட்டி இதனையும் மீறி பலியாகும் நாய்களுக்கு மறு வாழ்வு அளிக்கவே இந்த இணையதளம் என்று சொல்கிறார்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *