இன்றைய குளிர்ச்சியான இணையதளம் என்பது அத்தனை ஈர்ப்புடைய வாசகமாக இல்லை. ஆனால், இணையம் பிரபலமாகத்துவங்கிய காலத்தில், இந்த பொருள்பட அமைக்கப்பட்ட இணையதளம் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போது நினைத்துப்பார்ப்பது கடினம் தான்.
’கூல் சைட் ஆப் த டே’ தான் அந்த இணையதளம். 1994 ம் ஆண்டு அறிமுகமான போது, இந்த தளம், உடனடியாக வரவேற்பை பெற்று செல்வாக்கு மிக்க தளமாக மாறியது. இந்த தளத்தை இணையவாசிகளும் ஆர்வத்தோடு அணுகின்றர். அதே நேரத்தில் இணையதள உருவாக்குனர்களும், ( வெப் மாஸ்டர் – அந்த காலத்தில் எத்தனை பெருமைமிகு அடையாளம் இது), நம் தளத்திற்கும் இந்த அங்கீகாரம் கிடைக்காதா என இந்த தளத்தை ஏக்கத்துடன் நோக்கினர்.
கூல் சைட் ஆப் த டே, பெயருக்கேற்ப தினம் ஒரு கூலான இணையதளத்தை அறிமுகம் செய்தது. இணையதளம், அதற்கான இணைப்பு, அவ்வளவு தான், வேறு எதுவும் தளத்தில் இருக்காது. ஆனால், இந்த அறிமுகம் எத்தனை சுவாரஸ்யமாக இருந்தது என்பது 90 களின் இணைய பரவசங்களில் ஒன்று.
இணையத்தில் அப்போது தான், புதிது புதிதால பல்வேறு துறைகளில் வலைமனை எனப்படும் இணையதளங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இப்படி புதிதாக உருவாகும் இணையதளங்களை அடையாளம் காண்பது பெரும் சவாலாக இருந்தது. இந்த காலகட்டத்தில், யாஹு, இணையதளங்களை பட்டியலிட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தும் இணைய கையேடு சேவையை துவக்கியது என்றால், கூல் சைட் ஆப் த டே, (Cool Site of the Day – CSotD ) தினம் ஒரு இணையதளத்தை அடையாளம் காட்டியது.
இந்த தளத்தில் அறிமுகமான ஒவ்வொரு தளமும் ஒரு விதமாக இருக்கும். இணைப்பை கிளிக் செய்து பார்த்தால், முற்றிலும் புதுவிதமான ஒரு இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். அந்த தளம் பயனுள்ளதாக இருக்கிறதோ, இல்லையோ என்பது கூட முக்கியம் இல்லை. ஒரு புதிய இணையதளத்தை கண்டறிந்த சுவாரஸ்யம் மகிழ்ச்சிக்குறியதாக இருந்தது.
இப்படி கண்டறியும் தளங்களை நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து மகிழலாம். நாமும் குறித்து வைத்துக்கொள்ளலாம். இணையத்தில் சுவாரஸ்யமான சங்கதி தேவைப்பட்டால், கூல் சைட் ஆப் த டே தளத்திற்கு சென்று பார்க்கலாம். தினந்தோறும் இந்த தளத்தை ஆர்வத்துடன் பின் தொடர்ந்தவர்களும் இருந்தனர். அது மட்டும் அல்ல, இந்த கருத்தாக்கம் மிகவும் பிரபலமாக, இதே போல் புதிய தளங்களை அறிமுகம் செய்யும் பல தளங்களும் முளைத்தன.
இன்பைனெட் எனும் இணைய சேவை நிறுவனத்தில் பணியாற்றிய, கிலென் டேவிஸ் என்பவர், இந்த சேவையை துவக்கினார். இணையவாசிகள் மத்தியில் இந்த தளம் பெற்றிருந்த செல்வாக்கு காரணமாக, இணையதள உருவாக்குனர்கள், நம் தளமும் இன்றைய குளிர்ந்த தளமாக இடம்பெறாதா என ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். பலரும் தங்கள் தளத்தை சமர்பித்துவிட்டு காத்திருந்ததும் உண்டு.
இவ்வளவு ஏன், இணைய முன்னோடிகளில் ஒருவரான டேவ் வைனர், தனது தளமான ஸ்கிரிப்டிங்.காம், இந்த தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டதை, மிகப்பெரிய அங்கீகாரமாக கருது தனது தளத்தின் முகப்பு பக்கத்தில், பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். http://scripting.com/davenet/1995/03/29/flash.html
1995 ல், நியூஸ்வீக் இதழ், இணையத்தின் 50 சிறந்த தளங்களில் ஒன்றாக இந்த தளத்தை அறிமுகம் செய்தது. இணைய இதழான சக்.காம் தளமும், இந்த தளத்தை பாராட்டுதலோடு அடையாளம் காட்டியது. ஆனால் இணையத்தை பொருத்தவரை நியூஸ்வீக்கை விட கூல் சைட் தளம் செல்வாக்கு மிக்கது என வர்ணிக்கப்பட்டது. இதன் காரணமாக, இணைய செல்வாக்காளர் எனும் அங்கீகாரம் அதன் உருவாக்கினர் கிலென் டேவிசுக்கு கிடைத்தது. இணையதளத்தை அறிமுகம் செய்ய, பணமோ, சிபாரிசோ ஏற்க மாட்டார் என்று டேவிஸ் பற்றி பாராட்டாக கூறப்பட்டது.
1995 ல், டேவிஸ் இந்த தளத்தில் இருந்து விலகிச்சென்று விட்டார். அதன் பிறகு அவர், பிராஜெக்ட் கூல் உள்ளிட்ட வேறு திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
ஒரு கட்டத்தில் வலையில் இருந்த சுவாரஸ்யம் முடிந்து போய்விட்டது என டேவிஸ் அலுத்துக்கொண்டாலும், அவர் உருவாக்கிய இணையதளம் மைல்கல்லாக இருக்கிறது.
கூல் சைட் அப் த டே தளம் இன்னமும் செயல்பாட்டில் இருக்கிறது. அதில் புதிய தளங்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்பதோடு கடந்த கால அறிமுகங்களையும் பார்க்கலாம். இணையத்தை திரும்பி பார்க்க நினைத்தால், கூல் ஸைட் கடந்த கால பக்கங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இணையதள முகவரி: http://www.coolsiteoftheday.com/cgi-bin/stillcool.pl
குறிப்பு: தமிழ் இந்துவில் எழுதி வரும் வலை 3.0 இணைய வரலாற்று தொடரில், விடுபட்டு போன தளங்களின் வரிசையில் வரும் சிறப்பு இணையதளம்.