இன்னொரு மாகாத்மா. இன்னொரு நெல்சன் மாண்டேலா.
மியான்மாரின் சான் சூ கீயை எப்படி அழைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மியான்மரில் ஜனநாயகம் திரும்ப குரல் கொடுத்த அவர் அதற்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாக சிறயில் இருக்கிறார்.
சட்ட விரோதமாகவே அவரை ராணுவ அரசு வீட்டுச்சிறையில் வைத்திருக்கிறது. அவரது சிறைவாசம் முடிவதாக சொன்ன காலம் வந்த பிறகும் மியான்மர் அரசு விடுதலை செய்ய முன்வராததால் உலக நாடுகள் அவரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இணையத்திலும் அவரது விடுதலைக்காக குரல் எழுந்துள்ளது. சான் சூ கீயை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு இணைய தளம் அமிக்கப்பட்டுள்ளது. சான் சூ கீயின் வயதை குறிக்கும் வகையில் www.64forsuu.ஒர்க்/என உருவாக்கப்பட்டுள்ள அந்த தளம் அவரது விடுதலைக்காக இணையவாசிகளின் ஆதரவை கோருகிறது.
அது மட்டும் அல்ல பிரபலங்களும் இந்த தளத்தின் மூலம் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த தளத்தின் வேண்டுகோளுக்கு எற்ப ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் உள்ளிட்டோர் சான் சூ கீ விடுதலைக்காக த்ங்களது கருத்தை டிவிட்டர் மூலமும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
நீங்களும் உங்கள் 64 வார்த்தைகளை சான் சூ கிக்காக பதிவு செய்யலாம்
—-
link;
http://www.64forsuu.org/

0 Comments on “சான் சூ கீக்காக 64 வார்த்தைகள்”
கிரி
//இன்னொரு மாகாத்மா. இன்னொரு நெல்சன் மாண்டேலா.
மியான்மாரின் சான் சூ கீயை எப்படி அழைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.//
உண்மையாகவா!
எனக்கு இவரை பற்றி அதிகம் தெரியாததால் நீங்கள் கூறுவது மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது
cybersimman
சான் சூ கீ பற்றி நிறையவே எழுதலாம்.அறிமுகத்திற்காக ஒரே ஒரு குறிப்பு;சான் சூ கீ பர்மா விடுதலை ராணுவத்தை நிறுவியவரும் அந்நாடு விடுதலை பெற வழி வகுத்தவருமான ஆங் சானுக்கு மகளாக பிறந்தவர்.மேல் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றுவிட்ட அவ்ர் 1988 ல் பர்மா திரும்பினார். அதே ஆன்டு தான் அங்கு ஜனநாயகத்திற்கான போராட்டம் வெடித்தது.அந்த போராட்டம் ஒடுக்கப்பட்ட போது தனது தந்தை உருவாக்கிய தேசத்தில் மக்கள் குரல்வலை நெறிக்கபடக்கூடாது என நினைத்த அவர் அங்கேயே தங்கி போராட்டத்திற்கு தலைமை வகித்தார். பின்னார் நடைபெற்ற் தேர்தலில் அவரது கட்சி வெற்றிபெற்றாலும் ராணுவ அரசு அதை ரத்து செய்து அவரை சிறையில் அடைத்தது. சிறையிலிருந்தே அவர் ஜனநாயகத்திறகாக போராடி வருகிறார்.
selvam
மியான்மார் ராணுவம் கண்டிப்பாக ஒரு நாள் சுகி யிடம் மண்டியிட்டே தீரும்.