இன்று இணைய வடிவமைப்பு தொடர்பான புத்தகங்களை தேடினால், நூற்றுக்கணக்கான புத்தகங்களை கூகுள் அடையாளம் காட்டுகிறது. புத்தக கடைகளில் தேடினாலும், இந்த தலைப்பிலான புத்தகங்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஆனால், இணையத்தை அணுகுவதற்கான புதிய வசதியாக ‘வலை’ எனப்படும் வெப் அறிமுகமான போது, இணையதளங்கள் என்பதே புதிய கருத்தாக்கமாக இருந்தது. எனவே, இணையதள வடிவமைப்பு குறித்து எந்த வழிகாட்டி புத்தகமும் இருக்கவில்லை.
இந்த குறையை லிண்டா வெயின்மேன் (Lynda Weinman ) நன்கு உணர்ந்திருந்தார். அதுவே அவரது வாழ்க்கையை மாற்றுவதாகவும் அமைந்தது. அவரை வலையின் ஆசிரியராகவும் உருவாக்கி, அவரது பெயரில் மாபெரும் இணைய கல்வி சாம்ப்ராஜ்யம் உருவாகவும் காரணமாக அமைந்தது.
ஆனால், லிண்டா ஆசிரியராக தனது வாழ்க்கையை துவக்கவில்லை. சில்லறை வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றிவர் அதன் பிறகு, ஹாலிவுட் படங்கள் சிலவற்றில் அனிமேஷன் மற்றும் சிறப்பு விளைவுகள் நுப்டத்தில் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் தான் 1980 ல் அவர் முதன் முதலில் சொந்தமாக கம்ப்யூட்டரை பயன்படுத்த துவங்கினார்.
அப்போது கம்ப்யூட்டர்கள் புதுமையான சாதனமாக கருதப்பட்டன. கம்பயூட்டர்களை பரீட்சியம் செய்து கொள்ளவும், பயன்படுத்தவும் பயிற்சி தேவைப்பட்டது. ஆனால், லிண்டாவுக்கோ, அனிமேஷன் அனுபவம் காரணமாக கம்ப்யூட்டர்கள் பிடித்தமானதாக இருந்ததோடு, அவரால் சொந்தமாக கம்ப்யூட்டர் பயன்பாட்டை கற்றுக்கொள்ள முடிந்தது. கம்ப்யூட்டர் மற்றும் அனிமேஷன் இடையே நிறைய பொதுத்தன்மைகளையும் அவர் உணர்ந்திருந்தார்.
அவரது கம்ப்யூட்டர் ஆர்வம் மற்றவர்களையும் தொற்றிக்கொண்டது. பலரும் அவரிடம், கம்ப்யூட்டர் தொடர்பான விஷயங்களை கற்றுக்கொடுக்குமாறு கேட்டனர். அவரும் மகிழ்ச்சியாக சொல்லிக்கொடுத்தார். கற்றுத்தருவது மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பதை அவர் உணரவே, அனிமேஷனை விட்டுவிட்டு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நுட்பங்களில் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தினார். கல்லூரிகளில் இருந்தும் அழைப்பு வந்தது.
இந்த காலகட்டத்தில் தான், அவர் அப்போது புதிதாக உதயமாகியிருந்த வலையை தெரிந்து கொண்டார். வருங்காலத்தில் வலை பெரிய விஷயமாக இருக்கப்போகிறது என்ற எண்ணமும் அவருக்கு உண்டானது. எனவே வலை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு என்று ஏதேனும் புத்தகம் இருக்கிறதா என தேடத்துவங்கினார். உள்ளூர் புத்தக கடையில் விடாமல் தேடிய போது, இது தொடர்பான புத்தகங்கள் இல்லை என்றும், இருந்த ஒன்றிரண்டு புத்தகங்களும் தொழில்நுட்பவாதிகளை மனதில் வைத்து எழுதப்பட்டிருந்ததை புரிந்து கொண்டார்.
இணையதள வடிவமைப்பு பற்றி எதிர்பார்த்த வகையில் எந்த வழிகாட்டி புத்தகமும் இல்லை என்பதால், சரி நாமே இத்தகைய புத்தகத்தை எழுதுவோம் என தீர்மானித்தார். இப்படி உருவானது தான், டிசைனிங் வெப் கிராபிக்ஸ் (Designing Web Graphics ) எனும் புத்தகம். 1996 ஜனவரியில் புத்தகம் வெளியானது. இணையதள வடிவமைப்பு தொடர்பான வெளியான முதல் புத்தகம் இது. ஏறக்குறைய இதே காலகட்டத்தில், ஜெனிபர் ராபின்சன் என்பவர், டிசைனிங் பார் தி வெப் எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார்.
இரண்டு புத்தகங்களுமே, வலைக்கான வழிகாட்டி குறிப்புகள் மற்றும் வலை தொடர்பான அறிமுகத்தை கொண்டிருந்தன. அதிலும் வெய்ப்மேன், பேசுவது போன்ற பாணியில் புத்தகத்தை எழுதியிருந்தார். இணையதளங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த புத்தகத்தை விரும்பி வாங்கினர்.
இதனிடையே அவருக்கு debbie@debbie.com எனும் முகவரியில் இருந்து இமெயில் ஒன்று வந்தது. இப்படி பெயரில் கூட, இமெயில் வைத்துக்கொள்ள முடியுமா? என வியந்தவர் உடனே தனது பெயரில் லிண்டா.காம் தளத்தை, 35 டாலரில் பதிவு செய்து கொண்டார். இந்த தளம் தான், பின்னர் 1.5 பில்லியன் டாலர் சாம்ப்ராஜ்யமாக உருவானது.
ஆனால், ஆச்சர்யம் என்னவெனில், இதை வர்த்தகமாக்கி டாலர்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அவருக்கு இல்லை. இணையதள வடிவமைப்பு தொடர்பான புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், எழுத்தை முழுநேரமாக மேற்கொள்ளலாம் எனும் ஊக்கம் பெற்று கல்லூரி பணிகளில் இருந்து விலகி கொண்டார். ஒரு சிறிய நகருக்கு குடி பெயர்ந்து, பயிற்சி, பயணம் என வாழ்க்கையை கழிக்க தீர்மானித்தார். இந்த திட்டத்தை கணவரும் ஊக்குவித்து அவருடன் பங்குதாரராக சேர்ந்து கொண்டார்.
அவரது கணவர் புரூஸ் ஹெவின் தான், வெயின்மேனிடம் சொந்தமாக பயிற்சி வகுப்பெடுக்க யோசனை கூறினார். இதனையடுத்து உள்ளூர் கம்ப்யூட்டர் லேப் ஒன்றை பிடித்து, கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகளை துவக்கினார். முதல் ஆண்டிலேயே மாணவர்கள் குவிந்தனர். இன்னொரு பக்கம் லிண்டா.காம் தளத்தின் மூலமாக பயனுள்ள தகவல்களை வெளியிட்டு வந்தனர். இணையதள வடிவமைப்பு புத்தகத்தை படித்து விட்டு வருபவர்களுக்கு பயன் அளிக்கும் கட்டுரைகள் அதில் இடம்பெற்றன. இணையதளத்தை பார்த்துவிட்டும், வகுப்பில் மாணவர்கள் சேர்ந்தனர்.
ஒரு கட்டத்தில் அவர் மாணவர்கள் எண்ணிக்கையை சமாளிக்க, தனக்கு கீழ் ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள வேண்டியிருந்தது. பயிற்சி வகுப்புகளுக்கு ஆதரவு பெருகியது. இந்த கட்டத்தில், அமெரிக்காவில் நிகழ்ந்த செப்டம்பர் 11 தாக்குதலால் வர்த்தக உலகில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் டாட்காம் குமிழ் வெடித்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இவர்கள் பயிற்சி வகுப்புகளும் பாதிக்கப்பட்டன. பல ஊழியர்களை நீக்கும் நிலை ஏற்பட்டது.
நிலைமைய சமாளிக்க, நேரடி பயிற்சி வகுப்புகளை குறைத்துக்கொண்டு, இணையம் மூலமான பயிற்சியில் கவனம் செலுத்தினர். இணையதளத்தில் வழிகாட்டி பாடங்கள், பயிற்சி கையேடுகளை வெளியிட்டு அவற்றை அணுக சந்தாவாக 25 டாலர்களை நிர்ணயித்தனர். ஆரம்பத்தில் உறுப்பினர்கள் அதிகம் சேரவில்லை என்றாலும், பொறுமையை கடைப்பிடித்தனர். இதனிடையே பயிற்சி வீடியோக்களை சேர்த்துக்கொண்டே இருந்தனர்.
இந்த விடாமுயற்சியின் பலனாக உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடியது. ஒரு கட்டத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை பத்து லட்சத்தை தொட்ட போது, வெயின்மேன் தனது நிறுவன ஊழியர்களோடு டிஸ்னி பூங்காவிற்கு சென்று கொண்டாடினார்.
கற்றுக்கொள்வதற்கு யூடியூப்போ, கருத்துக்களை பகிர சமூக ஊடக சேவைகளோ இல்லாத அந்த காலகட்டத்தில் கற்றலுக்கான இணையதளமாக லிண்டா.காம் நிலைப்பெற்றது. இணையம் மூலமாக கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கான பாடங்களும், வீடியோ வழிகாட்டிகளும் அதில் இருந்தன. இப்படி தான் லிண்டா.காம் வளர்ந்தது.
தன்னளவில் லாபகரமாக இயங்கி வந்த இந்த சேவையை, லின்க்டுஇன் இணையதளம் 2015 ம் ஆண்டில், 1.5 பில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கியது. அப்போது தான் பலருக்கும் லிண்டா.காம் பற்றியே தெரிய வந்தது. ஆனால், கற்றலில் ஆர்வம் கொண்டவர்கள் விரும்பி நாடிய தளமாக இருந்தது. அதன் காரணமாக தான் லிங்க்டு.இன் இந்த தளத்திற்கு டாலர்களை கொட்டியது.
இன்று இணைய கல்வி வழங்குவதற்கு என்றே, கோர்சரா, உடேமி போன்ற இணைய தளங்கள் இருக்கின்றன. இணையம் வழி கற்றல் என்பது பரவலாக அறியப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பிரிவின் முன்னோடி தளங்களில் ஒன்றாக் லிண்டா.காம் ஒளிர்விடுகிறது.
–
வலை 3.0 தொடரின் ஒரு பகுதி