டிஜிட்டல் குறிப்புகள்- உலகின் முதல் டிஜிட்டல் நாடோடி

1419760453856உலகின் முதல் வலைப்பதிவாளர் யார் எனத்தெரியுமா? இந்த கேள்விக்கு ’ஜஸ்டின் ஹால்’ தான் பரவலாக சுட்டிக்காட்டப்படும் பதில். ஆனால், ரயான் ராபின்சன் என்பவரின் வலைப்பதிவில், ராப் பால்மர் தான் உலகின் முதல் வலைப்பதிவாளர் எனும் குறிப்பை பார்த்த போது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.

உடனே யார் இந்த பால்மர் என அறியும் ஆர்வம் உண்டானது. அதற்கு முன் யார் இந்த ராபின்சன் எனும் கேள்வி எழுந்தது. ராப் பால்மர் மட்டும் அல்ல ராபின்சன் பெயரும் கேள்விபடாதாகவே இருக்கிறது.

இணைய வரலாறு பற்றி எழுதி வரும் வல்லுனர்களில் ஒருவர் எனில் ராபின்சன் சொல்வதை அப்படியே நம்பி, முதல் வலைப்பதிவாளர் என சொல்லப்படும் பால்மர் பற்றி வியப்படையலாம். ஆனால், ராபின்சன் புதியவராக இருப்பதால் முதலில் அவரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ராபின்சன் ஒரு தொழில்முறை வலைப்பதிவாளர் என அறிய முடிகிறது. வலைப்பதிவு துவக்கி நடத்துவது எப்படி என இணையம் வழி பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். இணைய வரலாற்று வல்லுனரா என்று தெரியவில்லை. ஆனால், வலைப்பதிவு வரலாறு தொடர்பாக தேடிக்கொண்டிருந்த போது தான், ராபின்சன் எழுதிய இதே தலைப்பிலான பதிவு கண்ணில் பட்டது. வலைப்பதிவுகளின் பரிணாம வளர்ச்சியை விவரிக்கும் இந்த பதிவில் தான், 1993 ல் ராப் பால்மர் பற்றிய குறிப்பு வருகிறது.

பால்மரை பற்றி குறிப்பிடும் போது, ராபின்சன் மிகவும் கவனமாக, உலகின் முதல் வலைப்பதிவாளர் என சுயமாக அறிவித்துக்கொள்ளும் பால்மர் என்றே குறிப்பிடுகிறார். எனவே, இது குறித்து ராபின்சன்னுடன் மல்லுக்கு நிற்க வேண்டியதில்லை. அதோடு, முதல் வலைப்பதிவாளர் எனும் பெருமைக்கு பல்வேறு கோரிக்கைகள் இருப்பதால் இது சர்ச்சைக்குறியது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த பத்தியிலேயே ஜஸ்டின் ஹால் பற்றியும் குறிப்பிடுகிறார்.

பால்மர் முதல் வலைப்பதிவாளரா என்று நிச்சயமாகத்தெரியவில்லை. ஆனால், அவர் முதல் டிஜிட்டல் நாடோடி என்று அறிய முடிகிறது. இப்படி உறுதியாக சொல்வது சிக்கலானது என்பதால், முதல் டிஜிட்டல் நாடோடிகளில் ஒருவர் என சொல்வது பொருத்தமாக இருக்கும்.

ஆம், பால்மர் டிஜிட்டல் நாடோடியாக உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது இணையதளத்தில் இந்த பயணத்தை சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார். தன்னை, ஒரு எழுத்தாளர், வலைப்பதிவாளர், ஆன்லைன் மார்க்கெட்டிங் வல்லுனர் என வர்ணித்துக்கொள்ளும் பால்மர், 1980 களின் இறுதியில் தனது முழுநேர வேலையை விட்டுவிட்டு, பிரிலான்சராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

இணைய வர்த்தகம் அவருக்கு கைகொடுத்ததால், ஒரே இடத்தில் கட்டிப்போடப்பட்டிருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்தவர் குடும்பத்துடன் லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு குடிபெயர்ந்துவிட்டார். பிள்ளைகள் ஆஸ்திரேலிய கடற்கரை சூழலை ரசித்து வளர்ந்த நிலையில் அவர்கள் பெரியவர்கள் ஆனதும், டிஜிட்டல் நாடோடியாக இன்னும் அதிகமாக சுற்றத்துவங்கியிருக்கிறார்.

2014 ம் ஆண்டில் எல்லா சொத்துகளையும் விற்று இரண்டு சூட்கேஸ்களில் தன் வாழ்க்கை பொக்கிஷங்களை அடைத்துக்கொண்டு, லேப்டாப்புடன் உலகை இன்னும் தீவிரமாக வலம் வரத்துவங்கிவிட்டார். இப்படி குறிப்பிட்ட ஒரு வசிப்பிடம் இல்லாமல், இணையத்தை நம்பி விரும்பிய இடங்களுக்கு எல்லால் சென்று வாழ்வதால் தான் அவர் டிஜிட்டல் நாடோடியாக இருக்கிறார்.

இது ராபின்சன் பதிவு:  https://www.ryrob.com/history-of-blogging/

இது பால்மரின் நாடோடி வரலாறு: https://robpalmer.com/about/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *