இணையத்தில் உலாவும் போது எவ்வளவு செலவு செய்கிறோம் என எப்போதாவது யோசித்ததுண்டா? இந்த பதிவில் யோசிக்கலாம் வாருங்கள்.
செலவு என்றவுடன் இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்குவதை நினைத்துக்கொள்ள வேண்டாம். அதற்காக இணையத்தில் செலவிடும் நேரத்தை தான் சொல்கிறோம் என்று நினைக்க வேண்டாம். கவலை வேண்டாம், இணையத்தில் நீங்கள் எதற்காக நேரத்தை செலவு செய்கிறீர்கள், அது பயனுள்ளதாக இருக்கிறதா என கேட்பது எல்லாம் இந்த பதிவின் நோக்கம் அல்ல.
உங்கள் விருப்பபடி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இணையத்தில் நேரத்தை செலவிடலாம், அது பற்றி அல்ல இந்த பதிவு. இங்கே நாம் பார்க்க இருப்பது, வடிவமைப்பு நோக்கிலான செலவு. இதை வடிவமைப்பு மொழியில் இடைமுக விளைவு செலவு என்கின்றனர். ஆங்கிலத்தில், இண்ட்ரியாக்டிவ் காஸ்ட்.
இணையத்தில் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ அதை கண்டடைய தேவைப்படும் உள்ளம் மற்றும் செயல் அளவிலான முயற்சியை தான் இவ்வாறு இடைமுக விளைவு செலவு என்கின்றனர். இதற்கு எளிய உதாரணமாக தேடலை எடுத்துக்கொள்வோம். தகவல் தேவை எனில் பிரவுசரில் கூகுளை தட்டுகிறீர்கள். கூகுள் முகப்பு பக்கம் வந்ததும், அதன் மையத்தில் உள்ள தேடல் கட்டத்தில் நீங்கள் தேட விரும்பும் குறிச்சொல்லை டைப் செய்கிறீர்கள். தேடல் பக்கம் வருகிறது. நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு இருக்கிறதா? என பார்க்கிறீர்கள். ஆம், எனில் அதில் மவுஸ் கர்சரை நகர்த்தி கிளிக் செய்கிறீர்கள்.
இவை எல்லாமே, உங்கள் இலக்கை அடைய நீங்கள் மேற்கொண்ட உழைப்பு ஆகும். ஒவ்வொரு இடமாக மவுசை கொண்டு செல்ல வேண்டியிருப்பதோடு, எந்த இடத்தில் என்ன செய்வது என்று யோசிக்கவும் வேண்டியிருக்கிறது அல்லவா? எனவே தான், இணையத்தில் தகவல்களை அடைய பயனாளிகள் மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை இடைமுக விளைவு செலவு என குறிப்பிடுகின்றனர்.
இப்படி சொல்வதன் நோக்கம், பயனாளிகளை செலவிட வைப்பது அல்ல, மாறாக அவர்கள் செலவை குறைக்க வைப்பது.
வடிவமைப்பாளர்களின் லட்சியம் என்று பார்த்தால், இந்த செலவை பூஜ்ஜியமாக வைத்திருப்பது தான். அதாவது, ஒரு கிளிக் கூட செய்யாமல் அல்லது அதிகபட்சம் ஒரே கிளிக்கில் பயனாளிகள் நாடி வரும் தகவலை அளிப்பது. ஆனால் இது நடைமுறை சாத்தியம் இல்லை. ஏனெனில் ஒரு இணையதளத்தில் பலவிதமான தகவல்கள் இருக்கும். அவற்றை பயனாளிகள் தேட வேண்டும். படிக்க வேண்டும். அதற்கு ஸ்கிரால் செய்ய வேண்டும். இணைப்புகளை பின் தொடர்ந்து செல்ல வேண்டும். ஒரு பக்கத்தில் பார்த்ததை வேறொரு பக்கத்தில் நினைவில் வைத்திருக்க வேண்டும். இவை எல்லாமே பயனாளிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்கள்- எனவே செலவுகள்.
இந்த செலவுகளை முடிந்தவரை குறைக்கும் வகையில் வடிவமைப்பை மேற்கொள்ள வடிவமைப்பாளர்கள் முயற்சிக்கின்றனர்.
இணையதளத்தில் வாசிப்பது, ஸ்கிரால் செய்வது, தகவல்களை தேடுவது, கிளிக் செய்வது, டைப் செய்வது, பழைய தகவல்களை நினைவில் கொள்வது என எல்லாவற்றையுமே குறைக்க பார்க்கின்றனர். இது எந்த அளவு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு பயனாளிகள் அதிகம் கஷ்டப்படாமல் அவர்கள் நாடும் தகவலை பெற முடியும்.
ஆனால் இது அத்தனை எளிதல்ல. பல அம்சங்களை இதற்காக மனதில் கொள்ள வேண்டும். தகவல்களை வாசிக்க தேவைப்படும் முயற்சியை குறைக்க, வலைக்கு என்று தனியே அதன் தன்மையை உணர்ந்து எழுத வேண்டும் என்கின்றனர். இதே போல மற்ற அம்சங்களுக்கான நெறிமுறைகளும் இருக்கின்றன.
பயனாளிகள் தரப்பிலான இடைமுக விளைவு செலவை பெரிய விஷயமாக நினைப்பதற்கான காரணம் என்னத்தெரியுமா? இந்த செலவு என்பது பயன்பாட்டுத்தன்மைக்கான அளவாக இருப்பது தான். வடிவமைப்பின் நோக்கமே பயன்பாட்டு தன்மை என்பதால், அது எப்போதுமே அதிகமாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். இடைமுக செலவு குறைவாக இருந்தால் பயன்பாட்டு தன்மை அதிகமாக இருக்கும் என்பதால் அதை முக்கியமாக நினைக்கின்றனர். இதற்காக சின்ன சின்ன விஷயங்களை கூட அலட்சியம் செய்யாமல் கவனிக்க வேண்டியிருக்கிறது.
–