விக்கிபீடியாவிற்கு கை கால் முளைத்தால் எப்படி இருக்கும்? கை, கால் என்று கூறுவது வீடியோவையும் ஆடியோவையும் தான். இவற்றோடு பகைபடத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்படி சகல வசதிகளோடும் விக்கிபீடியாவை பார்க்க உதவும் தளம் தான் நேவிஃபை.விக்கிபிடியா கட்டுரைகளை வாசிக்கும் அனுபவத்தை மேம்படுத்து நோக்கத்தோடு நேவிஃபை உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையவாசிகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் விக்கிபீடியாவில் எந்த தலைப்பின் கிழ் தகவலை தேடினாலும் கிடைத்துவிடும்.அநேக கட்டுரைகள் விரிவாக இருப்பதும், அவை தொடர்மான புதிய தகவல்கள் உடனுக்குடன் அந்த கட்டுரையில் சேர்க்கப்படுவதும் விக்கிப்பிடியாவின் தனிச்சிறப்புகளாக குறிப்பிடலாம்.
வேறு எந்த கலைகளஞ்சியத்தாலும் நெருங்கமுடியாத அளவுக்கு விக்கிபிடியாவின் உள்ளடக்கம் பரந்து விரிந்ததாக இருக்கிறது.ஆனாலும் விக்கிபிடியாவிஏகு ஒரு குறை இருக்கிறது.
யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெறச்செய்ய முடியும் என்பதாலும் எவர் வேண்டுமானாலும் அவற்றை திருத்தலாம் என்பதாலும் இதில் உள்ள தகவல்கள் நம்பகத்தன்மையற்றவை என்று கூறப்படும் விமர்சனம் அல்ல அந்த குறை.
விக்கிபிடியாவில் தகவல்கள் இடம்பெற்றுள்ள அளவுக்கு புகைப்படங்கள் ,மற்றும் விடியோ ஆடியோ ஆகியவை இல்லை என்பதே அந்த குறை.
எந்த தலைப்பின் கீழும் கட்டுரை இடம்பெற்றிருக்குமே தவிர அந்த கட்டுரை தொடர்பான புகைப்படங்கள் மிக குறைவு. ஒரு சில கட்டுரைகளை பொருத்தவரை புகைப்படங்கள் தகவல்களை சரியாக புரிந்துகொள்ள உதவும்.உதாரனத்திறகு சோனியின் ரோல்யோ என்னும் இசை சாதனம் தொடர்பான கட்டுரையில் முட்டை வடிவான சாதனம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்த சாதனத்தை நேரில் பார்த்திராதவர்களுக்கு இந்த வர்ணனையை புரிந்துகொள்வது கடினம். அதே நேரத்தில் ரோல்யோ சாதனத்தின் படத்தை பார்த்தால் வர்ணனை நன்றாக புரியும்.
இதே போல சில கட்டுரைகளுக்கு ஆடியோ மற்றும் வீடியோ இணைப்புகள் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
இதனை தான் நேவிஃபை நிறைவேற்றுகிறது. விக்கிபிடியாவிற்கு நேரடியாக செல்லாமல் நேவிஃபை வழியே என்றால் அதில் நாம் தேர்வு செய்யும் எல்லா கட்டுரைகளுக்கும் தொடர்புடைய புகப்படங்கள் , ஆடியோ மற்றும் வீடியோ இணைப்புகள் இடம்பெற்றிருக்கும்.
புகைப்படங்களையோ , வீடியோவையோ நாம் தனியே தெடிசெல்ல வேன்டியதில்லை. எல்லாம் நேவிஃபை பக்கத்திலேயே இருக்கும்.
ஃபிளிக்கர் போன்ற தளங்களில் இருந்து புகைப்படங்களையும் யூடியூப் பொன்ற தளங்களில் இருந்து வீடியோவையும் எடுத்து தருகிறது நேவிஃபை.
அதோடு விக்கிபிடியாவைப்போலவே கட்டுரைகள் தொடர்பான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.புகைப்படங்கள் மற்றும் ஆடியோ வீடியோ இணப்புகளை திர்த்தவும் செய்யலாம்.
இந்த தளம் பிடித்துப்பொய்விட்டால் அப்புறம் விக்கிபீடியா பக்கமே போகமாட்டீர்கள். நேவிஃபை வழியேதான் விக்கிபிடியாவிற்கே செல்வீர்கள்.
—-
link;
http://navify.com/

0 Comments on “கால் முளைத்த விக்கிபீடியா”
colvin
பயனுள்ள குறிப்பு. மிக நீண்ட நாட்களாக இப்படியொரு வசதி கிடைக்காதா என எதிர்பார்த்திருந்தேன்
நன்றி
கொல்வின்
இலங்கை
கிரி
இதுல உள்ள தகவல்களை Facebook, Twitter ல் இணைத்துக்கொள்ள இணைப்பு கொடுத்துள்ளார்கள், இது மிக எளிதாக உள்ளது மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு.
//யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெறச்செய்ய முடியும் என்பதாலும் எவர் வேண்டுமானாலும் அவற்றை திருத்தலாம் என்பதாலும் இதில் உள்ள தகவல்கள் நம்பகத்தன்மையற்றவை //
இது தவிர்க்க முடியாத குறை
Pingback: பயனுள்ள வலைத்தளங்களை அறிமுகப்படுத்தும் வலைப்பதிவு. « chalkpiece