உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிரான சிறந்த தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கைகளை கழுவுவது வலியுறுத்தப்படும் நிலையில், கை கழுவும் செயலை மருத்துவ நோக்கில் முதன் முதலில் பரிந்துரைத்த முன்னோடி மருத்துவர் இக்னாஸ் செமல்வெய்சை கவுரவிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.
கூகுள் தேடியந்திரத்தின் முகப்பு பகத்தில் அதன் லோகோவில் இடம்பெற்றுள்ள இந்த அனிமேஷன் டூடுலில், சரியாக கை கழுவுவது எப்படி என்பதற்கான காட்சி விளக்கம் இடம் பெற்றுள்ளது. அனிமேஷனில், மீசையுடன் காட்சி அளிக்கும் மனிதர் ஒருவரும் தோன்றுகிறார்.
இந்த மனிதர் தான், மருத்துவர் இக்னாஸ் செமல்வெய்ஸ் (Dr. Ignaz Semmelweis ). ஜெர்மனி-ஹங்கேரி மருத்துவரான இவர் தான், மருத்துவ நோக்கில் கை கழுவும் பழக்கத்தை முதலில் வலியுறுத்தியவராக அறியப்படுகிறார்.
இக்னாஸ் செமன்வெய்ஸ் பற்றிய சுருக்கமான அறிமுகத்தையும், கிருமிகளை அழிக்க கை கழுவுவதன் முக்கியத்துவத்தை அவர் கண்டறிந்த விதத்தையும், கூகுள் தனது டூடுல் விளக்க பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
1818 ம் ஆண்டு ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் பிறந்த இக்னாஸ் பின்னர் வியன்னா பல்கலையில் மருத்துவ பட்டம் பெற்றார். அதன் பிறகு அவர் வியன்னா பொது மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, சைல்டுபெட் காய்ச்சல் எனும் மர்ம நோய் இளம் தாய்மார்களை அதிக அளவில் பலி வாங்கிக்கொண்டிருந்தது.
பெரும்பாலான மருத்துவர்கள் இதை தடுக்க முடியாத நோய் என கருதிய நிலையில், இக்னாஸ் இதற்கான காரணத்தை அறிய தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையின் இரண்டாவது பிரிவை விட, பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றிய இரண்டாவது பிரிவில் இறப்பு விகிதம் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருப்பதை அவர் கவனித்தார்.
இரண்டு பிரிவுகளும் ஒரே மாதிரியான தன்மையை பெற்றிருந்த நிலையில், ஒரு பிரிவில் மட்டும் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததற்கான காரணம் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியது.
இதனிடையே மருத்துவ நண்பர் ஒருவரும் மரணம் அடைந்தார். மர்ம காய்ச்சலால் பாதித்த பெண் ஒருவருக்கு பிரேத பரிசோதனை செய்த போது ஏற்பட்ட காயத்தின் விளைவாக அந்த நண்பர் இறந்திருந்தார். இதற்கான காரணத்தை ஆய்வு செய்த போது, நண்பரும், மர்ம காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, மருத்துவர்கள் மூலம் நோய் தொற்று ஏற்படுவதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த கையோடு, மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, நோய் பரவியதையும் அவர் உணர்ந்தார்.
இதன் விளைவாக, மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், ஒவ்வொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்த பிறகு தங்கள் கைகளை குளோரினேடட் லைம் கரைசலில் கழுவிக்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்தார்.
மருத்துவர் இக்னாசின் இந்த பரிந்துரையை அப்போதைய மருத்துவ உலகம் சந்தேகத்துடன் அணுகினாலும், கை கழுவும் பழக்கம் அமல் செய்யப்பட்ட பிறகு இறப்பு விகிதம் பெருமளவு குறைந்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மருத்துவ உலகில் அவரது கருத்து முழுமையாக ஏற்கப்படவில்லை. இது தொடர்பாக ஆய்வுக்கட்டுரை மற்றும் கடிதங்களை அவர் எழுதி வெளியிட்டாலும், பெரும்பாலும் அலட்சியமே அவருக்கு பதிலாக கிடைத்தது.
பின்னர், அவர் மனநல காப்பக்கத்தில் சேர்க்கப்பட்டு, அங்கு தாக்கப்பட்டு நோய் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். எனினும், பல ஆண்டுகளுக்கு பின், விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் கிருமிகள் பாதிப்பு குறித்து கண்டறிந்து கூறிய போது, மருத்துவர் இக்னாசின், கை கழுவும் பழக்கம் தொடர்பான முக்கியத்துவத்தை மருத்துவ உலகம் தெளிவாக புரிந்து கொண்டது.
தற்போது கொரோனா பாதிப்பின் போது, கிருமிகளை கொல்ல கை கழுவுவது முக்கிய தற்காப்பாக வலியுறுத்தப்படும் நிலையில், இதை கண்டறிந்த முன்னோடியாக இக்னாசை நினைவு கூறும் வகையில் கூகுள் அவருக்கு டூடுலால் மரியாதை செய்துள்ளது.
கூகுள் டூடுல் பக்கத்தில் அவரைப்பற்றி மேலும் அறிவதற்கான இணைப்பை அளித்தள்ளதோடு, இந்த டூடுலை சமூக ஊடகங்களில் பகிரும் வசதியையும் அளித்துள்ளது. மேலும், கை கழுவுவதை விரிவாக விவரிக்கும் தகவல் வரைபடத்தையும் தனது டூடுல் பக்கத்தில் அளித்துள்ளது.
இக்னாஸ் பற்றி அறிய: https://www.britannica.com/biography/Ignaz-Semmelweis