இது போன்ற இணையதளமே இப்போதைய தேவை என சொல்லக்கூடிய வகையில், இணைய வேலைவாய்ப்புகளை பட்டியலிடும் மாடரன் ஜாப்ஸ் (https://moderndayjobs.com/) எனும் இணையதளம் அறிமுகம் ஆகியிருக்கிறது.
இணையத்தில் சம்பாதிப்பது எப்படி? என்பதே இணையம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. அதற்கேற்ப இணையம் மூலம் சம்பாதிக்கவும் எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. ஆனால், இந்த வழிகளை அறிவதற்கான வழி தான் பலருக்கும் தெரிவதில்லை.
இந்நிலையில், கொரோனா தாக்கத்தால் பலரும் வேலையிழப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். இத்தகைய நபர்களுக்கு, கொரோனா முடக்கம் கூடுதல் சோதனையாக அமையலாம். இந்த பாதிப்பை குறைக்கும் வகையில், இணையம் மூலம் மேற்கொள்ளக்கூடிய பணிகளை அளிக்கும் இணையதளங்களை பட்டியலிடும் வகையில் மேலே சொன்ன இணையதளம் அமைந்துள்ளது.
இணையம் மூலம் சம்பாதிக்க உதவும் நூறு வழிகளை தேர்வு செய்து பட்டியலிட்டிருப்பதாக இந்த தளம் தெரிவிக்கிறது. இந்த வேலைவாய்ப்புகளை ஒவ்வொன்றாக பரிசீலித்து பொருத்தமானதாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒவ்வொரு வேலை வாய்ப்பு தொடர்பாகவும், அது என்ன வகையான வேலை, அதன் தன்மை என்ன போன்ற விவரங்கள் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த பட்டியலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம். இத்தகைய பயனுள்ள இணைய வேலைவாய்ப்பை அறிந்தவர்கள் அந்த தகவலையும் சமர்பிக்கலாம்.
கொரோனா காலத்தில் கைகொடுப்பதற்காக, @ajt எனும் டிவிட்டர் பயனாளி https://twitter.com/ajt/status/1… எனும் இணைய வேலைவாய்ப்பு பட்டியலை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டதாகவும், அந்த பட்டியலின் விரிவாக்கமாக , @elaine_zelby1 என்பவருன் இணைந்து, இந்த தளத்தை உருவாக்கியுள்ளதாகவும், தளத்தை உருவாக்கியுள்ள Bram Kanstein (@bram கூறியிருக்கிறார்.
இந்த தளத்தை அடையாளம் காட்டிய பிராடக்ட் ஹண்ட் தளத்திற்கு நன்றி: https://www.producthunt.com/posts/modern-day-jobs