இணைய உலகில் போட்டோ பாமிங் என்றொரு செயல்பாடு உண்டு. அதே போல இப்போது ஜூம் பாமிங் அறிமுகமாகியிருக்கிறது. போட்டோ பாமிங் என்றால், தமிழில் புகைப்பட ஊடுருவல் என்று புரிந்து கொள்ளலாம். அதாவது, ஒருவர் புகைப்படம் எடுக்கும் போது, தொடர்பில்லாத இன்னொருவர் குறுக்கிட்டு பிரேமுக்குள் நுழைந்து, அந்த புகைப்பட தருணத்தையே பாழடித்து விடுவதை தான், இப்படி குறிப்பிடுகின்றனர்.
புகைப்பட ஊடுருவல் திட்டமிட்டு நிகழ்வதும் உண்டு. பல நேரங்களில் தற்செயலாக வேறு ஒருவர் புகைப்படத்தில் விழுந்து விடுவதும் உண்டு.
இதே போலவே, ஜூம் பாமிங் (“Zoombombing ) எனும் நிகழ்வு இணைய உலகை இப்போது ஆக்கிரமிக்க துவங்கியுள்ளது.
வீடியோ சந்திப்பு வழியிலான உரையாடலை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் சேவையான ஜூம், கொரோனா அலையின் நடுவே எல்லோரும் அறிந்த சேவையாகி இருக்கிறது. கொரோனா காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே பணி சார்ந்த உரையாடலை மேற்கொள்ள ஜூம் வீடியோ சந்திப்பு உதவுவதால், பலரும் ஜூமுக்கு தாவியுள்ளனர். மாணவர்களுக்கு ஜூம் மூலமே ஆசிரியர்கள் பாடம் நடத்துவது, ஜூம் வழியே நிகழ்ச்சிகளை நடத்துவது எல்லாம் பிரபலமாகி வருகிறது.
ஜூமில் என்ன விஷேசம் என்றால் அதை பயன்படுத்துவது எளிது. யார் வேண்டுமானாலும் ஜூம் மென்பொருளை நிறுவி, அதன் மூலம் வீடியோ சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யும் அளவுக்கு அதன் இடைமுகம் நட்பானது என்கின்றனர். ஜூமில் கூடுதல் வசதி என்னவென்றால், வீடியோ சந்திப்புகளுக்காக அழைப்பு விடுப்பவர்கள், அந்த செயலியை நிறுவியிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
ஜூம் செயலியை பயன்படுத்துவது எளிதாக இருப்பது போலவே, அதில் அழையா விருந்தாளிகள் அத்துமீறி நுழைவதும் எளிதாக இருக்கிறது. அதாவது, ஜூம் செயலி மூலம் நிகழும் இணைய கூட்டங்களுக்கான முகவரியை தெரிந்து கொண்டு, விஷமிகள் உள்ளே நுழைந்து, திரையில் வில்லங்கமான உள்ளட்டக்கத்தை தோன்றச்செய்வது நடக்கிறது.
இப்படி ஜூம் வீடியோ சந்திப்புகளுக்குள் விஷம நோக்கம் கொண்டவர்கள் அழைப்பின்றி உள்ளே நுழைந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் செயலே ஜூம்பாமிங் எனப்படுகிறது. தமிழில் ஜூம் குண்டெறிதல் என வைத்துக்கொள்ளலாம். ஜூம் குறுக்கீடு அல்லது ஜூம் தாக்குதல் என்பதும் பொருத்தமாக இருக்கும்.
வீடியோ கூட்டங்கள் நடத்த ஜூம் செயலி பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில், ஜூம் தாக்குதலில் அதிகரித்திருக்கிறது. ஜூம் கூட்டம் நடுவே நிகழ்த்தப்பட்ட ஆபாச தாக்குதல் தொடர்பான செய்திகள் இதன் தீவிரத்தை உணர்த்துகின்றன.
எனவே, ஜூம் வீடியோ கூட்டம் நடத்துபவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆனால், நல்லவேளையாக, ஜூம் கூட்டத்தின் நடுவே எதிர்பாராமல் குறுக்கீடு நிகழாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர்.
ஜூமி செட்டிங் பகுதியில் உள்ள அம்சங்களை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். காத்திருப்பு அறை ( வெயிட்டிங் ரூம் ) வசதியை இயக்கினால், புதிதாக யார் உள்ளே நுழைய முயன்றாலும் தெரிந்து விடும் என்கின்றனர்.
அதே போல, ஏற்பாட்டாளருக்கு முன்னே வரும் வசதியையும் முடக்க வேண்டும் என்கின்றனர்.
ஜூம்: Zoom.us
ஜூம்பாமிங் தடுக்க வழி: https://www.cnet.com/how-to/zoombombing-what-it-is-and-how-you-can-prevent-it-in-zoom-video-chat/
—