பூமி தின நிகழ்வுகள் இந்த ஆண்டு டிஜிட்டல்மயமாகி இருக்கின்றன. இந்த நிகழ்வுகளில் வீட்டில் இருந்தபடியே நீங்களும் பங்கேற்கலாம். கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் உண்டாகியுள்ள அசாதாரண சூழலில், நம் புவி காப்பதற்கான முயற்சிக்கு இணையம் மூலமே ஆதரவு தெரிவிக்கலாம். இதற்காக, 72 மணி நேர நேரலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து நமது பூமியை பேணி காப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 22 ம் தேதி பூமி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1970 ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கி, உலகலாவிய இயக்கமாக வளர்ந்திருக்கும் பூமி தினத்திற்கு இந்த ஆண்டும் பொன்விழா ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பொன் விழா ஆண்டில், பூமி தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, மக்கள் வீட்டிக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள சூழலில், பூமி தினத்தை திட்டமிட்டபடி கொண்டாடுவது கேள்விக்குறியானது. கொரோனா தாக்கம் காரணமாக, பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும், கொரோனாவின் கோரத்தாண்டவம், நவீன வாழ்க்கையின் போதமைகளை உணர்த்தியிருப்பதோடு, இயற்கையோடு இணைந்து வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் நிலையில், புவியின் நலனை காப்பதை நோக்கமாக கொண்ட பூமி தினத்தின் செய்தியை இன்னும் வலுவாக சொல்வது அவசியமாகியிருக்கிறது.
இந்த பின்னணியில் தான், பூமி தின ஏற்பாட்டாளர்கள், இந்த ஆண்டு பூமி தின நிகழ்ச்சிகளை இணையத்தை மையமாக கொண்டு நடைபெறும் டிஜிட்டல் நிகழ்வுகளாக மாற்றி அமைத்துள்ளனர். இதன் மூலம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் இந்த நிகழ்ச்சிகளில் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.
இணையம் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, கலை மூலமாக போராட்டம் நடத்துவது போன்ற நிகழ்வுகளுடன், புவியை காக்கும் நோக்கத்தை வலியுறுத்தும் 72 மணி நேர நேரலைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூற்றுச்சூழல் அமைப்புகளுடன் பிரபலங்களும், கலைஞர்களும் கைகோர்த்துள்ள இந்த 72 மணி நேர இணைய நேரலைக்காக தனியே இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது: https://www.earthdaylive2020.org/
இந்த ஆண்டு பூமி தின நிகழ்வுகளை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாது என தெரிந்த நிலையில், ஏற்பாட்டாளர்கள் ஜும் மூலமான வீடியோ ஆலோசனை மற்றும் கூகுள் டாக்ஸ் மூலமான பரிமாற்றங்களுக்கு பிறகு, பூமி தின நிகழ்வுகளை முழுவதும் டிஜிட்டல்மயமாக்கியுள்ளனர்.
இதன்படி, பூமி தின நேரலை நிகழ்ச்சிகள் இன்று காலை துவங்கின. சுற்றுச்ச்சூழல் பாதிப்பு, பருவநிலை தாக்கம் போன்றவற்றை உணர்த்தும் வகையில் மக்களின் கூட்டு ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்நிகழ்ச்சிகளை காணலாம்.
இரண்டாம் நாள் நிகழ்வின் போது, உலக நிதி அமைப்புகளுக்கு எதிராக குரல் எழுப்பட உள்ளது. அரசியல்வாதிகளுக்கும், மாசுபடுத்துபவர்களுக்கும் ஆதரவாக இருப்பதற்கு மாறாக, பூமிக்கும், அதில் வாழ்பவர்களுக்கும் ஏற்றதாக பொருளாதாரத்தை மாற்றி அமைப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட இருக்கிறது.
24 ம் தேதி மூன்றாம் நாள் நிகழ்வுகள், அரசியல் மாற்றம் தொடர்பாக வலியுறுத்தப்படும்.
72 மணி நேரலை நிகழ்ச்சிகளின் விவரம் மற்றும் அவற்றில் பங்கேற்பதற்கான வழிமுறைகளை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.- https://www.earthday.org/