புகைப்பட கலைஞரான நோவா கலினா (Noah Kalina), வீட்டை விட்டு வெளியே செல்லாமலேயே, உலகின் பல இடங்களுக்கு சென்று, அங்குள்ள காட்சிகளை படம் எடுத்து பகிர்ந்து கொண்டு வருகிறார். வீட்டிலிருந்தபடியே வெளியே செல்வது எப்படி சாத்தியம் எனும் குழப்பம் ஏற்படலாம். கலினா, இணையம் மூலம் இந்த பயணங்களை மேற்கொள்கிறார்.
இணையம் மூலம் காட்சிகளை படம் பிடித்து ஒளிபரப்ப வெப்காமிராக்கள் வழி செய்வதை நீங்கள் அறிந்திருக்கலாம். உலகின் பல நகரங்களில், இத்தகைய வெப்காமிராக்கள் அமைந்துள்ளன. இந்த வெப்காமிரா காட்சிகளை திரட்டித்தரும் இணையதளங்களும் இருக்கின்றன.
கலினாவுன், வெப்காமிராவுன் ரசிகர் தான். அவரது வீட்டிலேயே ஒரு வெப்காமிராவை பொருத்தியிருக்கிறார்.
இதனிடையே, கொரோனா பாதிப்பு உலகையே முடக்கி போட்டிருக்கும் நிலையில், அவர் இந்த வெப்காமிராக்கள் மூலம் பார்க்க கூடிய காட்சிகளை படம் பிடித்து வெளியிட்டு வருகிறார். முதலில் கலினா, இந்த படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு தொடர் சரடாக வெளியிட்டவர், தற்போதை இவற்றுக்கு என தனி வலைப்பதிவு துவங்கியிருக்கிறார். https://panopticam.tumblr.com/
கொரோனா பாதிப்பால் நிலைகுலைந்திருக்கும், இத்தாலியின் வெனிஸ், மிலன், ஸ்பெய்னின் மாட்ரிட் உள்ளிட்ட நகரங்களின் வெறிச்சோடிய காட்சிகளை பார்க்கும் போது, நெஞ்சம் வெடித்துவிடும் போல தான் இருக்கிறது.
கலினா பற்றிய கூடுதல் தகவல்களுக்கு முந்தைய பதிவை பார்க்கவும்:
வாழ்க்கையே ஒரு புகைப்படம்