ஜூம் சேவையை பயன்படுத்துவது எளிது என்பதால், ஜூம் வழி வீடியோ சந்திப்புகளையும் ஏற்பாடு செய்வது எளிது. இந்த எளிமையை இணைய மொழியில் பயன்பாட்டுத்தன்மை அல்லது பயணர் நட்பான தன்மை என்று சொல்லலாம். இதன் காரணமாகவே ஜூம் சேவை, வீடியோ வழி கூட்டங்களை நடத்த விருப்பம் கொண்டவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.
இப்போது, ஜூம் சந்திப்புகளை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வழிகாட்டும் வகையில் துணை சேவை ஒன்று அறிமுகமாகியுள்ளது.
ஜூம்.யூ.ஆர்.எல் எனும் அந்த சேவை மூலம், ஜூம் சந்திப்புகளை இன்னும் அழகாக்கி கொள்ளலாம். அதாவது, ஜூம் சந்திப்புகளுக்கான இணைய பக்கங்களை உருவாக்கி, பகிர்ந்து கொள்ளலாம்.
தற்போது ஜூம் கூட்டங்களை நடத்துபவர்கள், அதற்கான அறிவிப்பை சுவரொட்டி போல தயார் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது அத்தனை ஈர்ப்பில்லாதது மட்டும் அல்ல பாதுகாப்பும் இல்லாதது. ஜூம் சந்திப்புகள், ஜூம் பாமிங் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான ஐடியையையும், பாஸ்வேர்டையும் பொதுவெளியில் பகிர்வது ரிஸ்கானது தானே.
இதற்கு தீர்வை ஜூம்.யூ.ஆர்.எல் வழங்குகிறது.
இந்த சேவை மூலம், ஜூம் சந்திப்புகளுக்கான தனி பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம். உங்கள் ஜூம் சந்திப்புக்கான பக்கத்தில், கூட்டத்தின் பெயர், அதற்கான அறிமுக குறிப்பு ஆகிய தகவல்களோடு, நிகழ்ச்சிக்கான ஐடி மற்றும் பாஸ்வேர்டையும் குறிப்பிடலாம். நிகழ்ச்சி நடைபெறும் நாள், நேரம் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
இந்த தகவல்களை சமர்பித்தவுடன், ஜூம் கூட்டத்திற்கான தகவல் பக்கம் தயாராகிவிடும். அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.
கூட்டத்திற்கான பாஸ்வேர்டை தெரிவித்திருப்பதால், அனுமதி பெற்றவுடன் மட்டுமே உள்ளே நுழையும் வகையில், ஏற்பாட்டாளர் அங்கீகாரம் அளிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. எனவே, ஜூம் பாமிங் தாக்குதல் நடைபெறும் வாய்ப்புகள் குறைவு.
மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரும்பினால் தங்கள் கூட்டங்களுக்கு கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.
ஜூம் சந்திப்புகளை தொழில்முறையாக நடத்த விரும்புகிறவர்களுக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும்.
இணையதள முகவரி: https://zmurl.com/