டெக் டிக்ஷனரி- 29 பி.டி.எப் (PDF) – மின்னணு அச்சு ஆவண கோப்பு வடிவம்

17837312_de4a8b1767_zஇணையத்தில் புழங்கும் பெரும்பாலானோருக்கு பி.டி.எப் பரிட்சியமானதே. பி.டி.எப்பை நாம் பலவிதமாக பயன்படுத்துகிறோம். ஏதேனும் கோப்பு தேவை என்றால், பி.டி.எப் வடிவில் அனுப்புமாறு கேட்க பழகியிருக்கிறோம். பி.டி.எப் தொடர்பான சின்ன சின்ன நுணுக்கங்களும் கூட பலருக்கு அத்துபடியாக இருக்கிறது.

ஆக, பி.டி.எப் எல்லோருக்கும் அறிமுகமானதாகவே இருக்கிறது. எல்லாம் சரி, பி.டி.எப் என்றால் என்ன என்று தெரியுமா? பி.டி.எப் என்பது ஒரு கோப்பு வடிவம், அடோப் நிறுவன மென்பொருள் என்பதை தாண்டி, பி.டி.எப் பற்றி எத்தனை பேருக்குத்தெரியும்?

பி.டி.எப் என்பதன் ஆங்கில விரிவாக்கமான ’போர்டபில் டாக்குமெண்ட் பார்மெட்’ படி பார்த்தால், எங்கும் எடுத்துச்செல்லக்கூடிய ஆவண வடிவம் என இதை குறிப்பிடலாம். எங்கும் எடுத்துச்செல்லக்கூடிய தன்மையை நடமாடும் என்ற நோக்கிலும் பயன்படுத்தலாம். ஆனால் நடமாடும் ஆவண வடிவம் எனும் பயன்பாடு நன்றாக இல்லை: உகந்ததும் இல்லை.

எனில், பி.டி.எப்பை தமிழில் எப்படி குறிப்பிடுவது? பயன்பாட்டு நோக்கில் பார்த்தால், இதை மின்னணு நகல் என்றோ அதைவிட பொருத்தமாக மின்னணு அச்சு என்றோ புரிந்து கொள்ளலாம். அந்த வகையில், மின்னணு அச்சு ஆவண வடிவம் என குறிப்பிடலாம்.

இந்த மொழியாக்கம் எந்த அளவு பொருத்தமானது என்பதை புரிந்து கொள்ள முதலில் பி.டி.எப் அடிப்படையை, அதாவது அது என்ன செய்கிறது, எதற்காக பயன்படுகிறது போன்ற விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். தொழில்நுட்ப நோக்கில் பார்த்தால், எந்த ஒரு கோப்பையும், இணையத்தில் எளிதாக பரிமாறிக்கொள்ள வழி செய்யும் கோப்பு வடிவமாக இது அமைகிறது. அதாவது, ஒரு கோப்பு எந்த வடிவில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதை வேறு ஒரு இயந்திரம் அல்லது இயங்குதளத்தில் எந்த சிக்கலும் இல்லாமல், உள்ளது உள்ளபடியே அணுகுவதற்கான வழியாக இது அமைகிறது.

அந்நிய மொழியில் அனுப்பி வைக்கப்பட்ட தகவலை, மூலத்தின் பொருள் மாறாமல், அதை பெறுபவர் தன் மொழியிலேயே படிக்க முடிந்தால் எப்படி இருக்குமோ அதே போல தான் இதுவும். இத்தகைய மொழியாக்க அற்புதம் இன்னும் கைகூடவில்லை என்றாலும், இணைய கோப்புகளை பொருத்தவரை, பி.டி.எப் இத்தகைய அற்புதத்தை சாத்தியமாக்குகிறது.

இந்த ஒப்பீடும், வர்ணனையும் கொஞ்சம் மிகையானது தான். ஆனால், பி.டி.எப் செயல்பாட்டில் இதற்கு நிகரான அற்புதமே நிகழ்கிறது. எப்படி என்றால், இணையம் மூலம் அனுப்பி வைக்கப்படும் ஒரு கோப்பில் என்ன எல்லாம் இருக்கிறதோ, அவை எல்லாம் எந்த பாதிப்பும் இல்லாமல், அதே வடிவில் தோன்றுவதை இந்த வடிவம் சாத்தியமாக்குகிறது. இதென்ன பெரிய விஷயமா? என நினைக்கலாம். ஆம், பி.டி.எப் உருவாக்கப்படுவதற்கு முன்வரை அப்படி தான் கருதப்பட்டது.

1990 களின் துவக்கத்தில், அடோப் நிறுவனத்தால் பி.டி.எப் கோப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் வரை, இணையத்திலும், கம்ப்யூட்டர் உலகிலும், கோப்பு பரிமாற்றம் என்பது சிக்கலானதாக இருந்தது. அதாவது, வரி வடிவ தகவல்கள் அமைப்பு, மற்றும் படங்கள் அல்லது வரைகலை போன்ற காட்சிரீதியான தகவல்களை மூல வடிவில் இருப்பது போலவே பெறுவதில் பெரும் சிக்கல் இருந்தது. கோப்புகளை அனுப்பி வைக்கும்போது, மூலத்தில் இடம்பெற்றிருந்த தகவல்கள் பரிமாற்றத்தின் போது பாதிப்புக்குள்ளாயின.

அட்டவணை போன்ற தகவல்களை உருவாக்கி விட்டு, அதை சேமிக்க முயலும் போது, அட்டவனை கட்டணங்களை மீறி அதில் உள்ள விவரங்கள் கலைந்து போயிருக்கும் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டிருக்கலாம். இதே போன்ற பிரச்சனையே, அந்த காலத்தில் கோப்பு பரிமாற்றத்தில் நிலவியது.

கோப்பு வடிவங்கள் பெரும்பாலும் அவை உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் அல்லது அதன் இயங்குதள மொழி சார்ந்து இருந்ததால், வேறுபட்ட கம்ப்யூட்டர் அல்லது இயங்குதளங்களில் அவற்றை அப்படியே பிரதியெடுப்பது சாத்தியம் ஆகவில்லை.

இது நடைமுறை சிக்கலாக மட்டும் அல்லாமல் பயன்பாட்டு சிக்கலாகவும் அமைந்தது. கம்ப்யூட்டர் பயன்பாடு காரணமாக, காகித வடிவில் அல்லாமல், எல்லாவற்றையும் மின்னணு கோப்பு வடிவில் கையாளும் சாத்தியம் காகிதம் இல்லா அலுவலகம் எனும் கருத்தாக்கம் பற்றி பெரிதாக பேச வைத்திருந்தது.

ஆனால், மூல வடிவில் கோப்புகளை கம்ப்யூட்டர் இடையே மற்றும் இணையம் வாயிலாக பரிமாறிக்கொள்ள வழியில்லாத போது, காகிதம் இல்லா அலுவலகம் எனும் கருத்தாக்கம் ஏட்டுச்சுரைக்கையாகவே இருந்தது.

இந்த சிக்கலுக்கு தீர்வாக தான், அடோப் நிறுவனத்தின் பி.டி.எப் முறை அறிமுகமானது. எந்த ஒரு கோப்பையும், பி.டி.எப் வடிவில் மாற்றிவிட்டால், அதை மூல வடிவிலேயே அனுப்பி வைத்து அதே வடிவிலேயே பெற்று பயன்படுத்துவது சாத்தியமானது. கோப்பில் இடம்பெற்றிருந்த தகவல்களை அமைப்பு மற்றும் வரைகலை உள்ளிட்ட விவரங்கள் எந்தவித மாற்றத்திற்கும் உள்ளாகாமல் மூல வடிவிலேயே நீடித்தன.

அடோப் அறிமுகம் போது உடனே பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், முதலில் பதிப்புலகில் முழுமனதாக ஏற்கப்பட்டு, பின்ன மற்ற துறைகளிலும் பிடிஎப் கோலோச்சத்துவங்கியது. மூலம் மாறாமல் கோப்புகளை அனுப்பி, பெறும் வசதியே பி.டி.எப் முறையின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

பி.டி.எப் முறையில் இந்த அற்புதம் எப்படி நிகழ்கிறது என்பதை புரிந்து கொள்ள போஸ்ட் ஸ்கிரிப்ட்  பற்றியும் கம்ப்யூட்டர் மூலம் அச்சிடுவதில் இருந்த ஆரம்ப கால பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். போஸ்ட் ஸ்கிரிப்ட் என்பது, அடோப் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட புரோகிராமிங் மொழி. மின்னணு ஆவணங்களில் உள்ள காட்சிரீதியான தகவல்களை அப்படியே தக்க வைத்துக்கொள்ளவும், பின்னர் அவற்றை வேறு ஒரு இயந்திரத்தில் அணுகுவதையும் போஸ்ட் ஸ்கிரிப்ட் சாத்தியமாக்கியது.

போஸ்ட் ஸ்கிரிப்ட் மென்பொருளை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜான் வார்னாக் (John Warnock), கோப்புகள் பரிமாற்றத்தில் நிலவிய பிரச்சனையை நன்றாக உணர்ந்திருந்தார். அதன் பயனாக, போஸ்ட் ஸ்கிரிப்ட் வசதியை அடிப்படையாக கொண்டு, எந்த ஒரு கோப்பையும், பரிமாற்றத்தின் போது பாதிக்கப்படாமல் அனுப்பி வைக்க வழி செய்யும் கோப்பு வடிவத்தை கண்டறிந்தார். இதுவே போர்டபில் டாக்குமெண்ட் பார்மெட்டாக அமைந்தது.

அடிப்படையில், ஒரு கோப்பை அப்படியே மின்னணு அச்சு வடிவில் அனுப்பி வைக்க முடிந்ததால், அதே அச்சு வடிவை மறுமுனையிலும் பெற முடிந்தது. இதற்கென தனியே ஒரு ரீடரும் உருவாக்கப்பட்டது. பி.டி.எப் உருவாக்கத்திற்கான அக்ரோபட் மென்பொருளை அடோப் துவக்கத்தில் அதிக கட்டணத்தில் அறிமுகம் செய்தாலும், அதன் பிறகு இதில் நிறைய மாற்றங்களை செய்து, ஒரு கட்டத்தின் அனைத்து தரப்பினரும் அணுக கூடிய வகையில் திறவு மூல தன்மையும் பெற வைத்தது.

ஆக, பி.டி.எப் என்பது, மின்னணு கோப்புகளை அப்படியே அச்சிட்டு பாறிமாறிக்கொண்டு மூல வடிவம் சிதையாமல் பயன்படுத்த வழி செய்யும் கோப்பு முறை என கொள்ளலாம். காலப்போக்கில் இந்த முறை மிகவும் மேம்பட்டு, மூல கோப்பில் திருத்தம் செய்யும் வசதி, குறிப்புகளை எழுதும் வசதி உள்ளிட்ட குழு செயல்பாடு அம்சங்களும் அறிமுகமாகியிருக்கின்றன.

நிற்க, பி.டி.எப் உருவாக்கத்திற்கும், கம்ப்யூட்டர் அச்சு பிரச்சனைக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். துவக்க காலத்தில் கம்ப்யூட்டரில் இருந்து கோப்புகளை அச்சிடும் போது வரி வடிவ தகவல்கள் மற்றும் எண்களை மட்டுமே அச்சிட முடிந்தது. அதன் பிறகு டாட்மாட்ரிக்ஸ் பிர்ட்டனர் வந்த போது, வரைகலைகளை குத்துமதிப்பாக பிக்சல் ஓவியமாக மாற்றிக்கொள்ள முடிந்தது. எனினும் மூலத்தை அச்சிடுவது எளிதாக இல்லை. இந்த கட்டத்தில் தான் லேசர் பிரிண்டர்கள் அறிமுகமாயின. கோப்பில் உள்ள வரைகலை தகவல்களை அச்சிடும் இயந்திரங்களுக்கு புரிய வைக்கும் மொழியில் மாற்றிக்கொண்டும் மென்பொருள்களே இதற்கு அடிப்படையாக அமைந்தன. அடோப்பின் போஸ்ட் ஸ்கிரிப்ட் இத்தகைய முன்னோடி மென்பொருள்களில் ஒன்று.

இந்த தொழிநுட்ப பயணத்தில் ஜெராக்ஸ் நிறுவன ஆய்வும் முக்கிய பங்களிப்பு செலுத்தியுள்ளது. இப்படி, நாம் சாதாரணமாக நினைக்கும்,. பி.டி.எப் கோப்பு முறை செழுமையான வரலாற்றை கொண்டுள்ளது.

இணைப்புகள்: http://rgbcmyk.com.ar/en/history-of-pdf/

https://www.howtogeek.com/100016/printing-what-is-postscript/

டெக் டிக்ஷனரி- 28 ஜூம்பாமிங் (“Zoombombing) – வீடியோ குண்டெறிதல்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *