புதிய மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தால், அதற்கு வழிகாட்ட பல இணையதளங்கள் இருக்கின்றன. இந்த முயற்சியை மோஸ்ட்காமன்வேர்ட்ஸ் (https://mostcommonwords.co/ ) தளத்தில் இருந்து துவக்கலாம். வேற்று மொழியை கற்றுக்கொள்வது சவலாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு இந்த தளம், ஒரு மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆயிரம் வார்த்தைகளை கற்றுக்கொள்ள உதவுகிறது. இப்போதைக்கு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளை ஆயிரம் வார்த்தைகளாக கற்கலாம்.
–
அந்த ஆயிரம் வார்த்தைகள்
ஆயிரம் வார்த்தைகள் கருத்தாக்கம் தொடர்பான பயனுள்ள மற்றொரு தளம், 1000 மோஸ்ட் காமன் வேர்ட்ஸ். (https://1000mostcommonwords.com/ ). இந்த தளம், ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பயன்படுத்தப்படும் ஆயிரம் வார்த்தைகள் பட்டியலை தருகிறது.
இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் அகர வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ள உலக மொழிகள் பட்டியலில், எந்த ஒரு மொழியையும் தேர்வு செய்து, அந்த மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆயிரம் வார்த்தைகளை பார்க்கலாம்.
இந்த பட்டியல் படி, தமிழில், அதிகம் பயன்படுத்தப்படும் ஆயிரம் வார்த்தைகள்: https://1000mostcommonwords.com/1000-most-common-tamil-words/
–
இந்த மின்மடல் தொடர்பான அறிமுகம் இந்த வாரம் புதிய தலைமுறை கல்வி இதழில் வெளியாகி இருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தூண்களாக விளங்கும் ஆரம்ப ஆதரவாளர்கள் போல, இந்த மின்மடலில் இணைந்து ஊக்குவிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த மின்மடல் பயனுள்ளதாக கருதினால், உங்கள் நட்பு வட்டத்திலும் பரிந்துரைக்கவும்
- அன்புடன் சைபர்சிம்மன்
புதிய இணையதளங்களை அறிமுகம் செய்யும், இணைய மலர் மின்மடலில் இணையுங்கள்: https://tinyletter.com/cybersimman