கொரோனாவை கொல்வது எப்படி? வழிகாட்டும் இணையதளம்

7b34fa74-5676-47f8-b5ae-553a27eb9e2aகொரோனா வைரசை அரசும் சரி, மக்களும் சரி, கொஞ்சம் எளிதாக எடுத்துக்கொள்ள துவங்கிவிட்டது போல தோன்றுகிறது. இந்த பின்னணியில், கொரோனா பரவலை தடுப்பதற்கான அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எளிமையாக வலியுறுத்தும் ’பிளாட்டன் தி கர்வ்…’ இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்வது நல்லது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினைச்சேர்ந்த மென்பொருளாலர் ஒருவர் அமைத்துள்ள இந்த இணையதளம், கொரோனா தடுப்பில் கை கழுவுவதன் அவசியத்தை கணிதத்தின் துணை கொண்டு விளக்குகிறது.

மொத்தமே ஒரு பக்கம் ( கொஞ்சம் நீளமான பக்கம்) கொண்ட இந்த தளம், கொரொனா பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கச்சிதமாக புரிய வைக்கிறது.

கொரோனா தடுப்பில் அடிக்கடி குறிப்பிடப்படும் வளைவை தட்டையாக்குவது (#flattenthecurve ) எனும் கருத்தாக்கத்தில் இருந்து இதன் விளக்கம் துவங்குகிறது.

வளைவு என இங்கே குறிப்பிடப்படுவது, கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதத்தை. முதல் நபர் பாதிக்கப்பட்டதில் இருந்து, நோய் எத்தனை பேருக்கு எத்தனை விரைவாக பரவுகிறது என்பது, மேலெழும் கோடாக வரையப்படுகிறது. இது வளைவாக அமைந்திருக்கும். நோய் பரவல் உச்சம் தொட்டு, பின்னர் குறையத்துவங்கி மங்கிவிடும்.

வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு, ஒரு வளைவாக அமைந்திருக்கும். இந்த வளைவு மிக வேகமாக உச்சம் தொட்டால், பாதிப்பு மிக அதிகமாக இருக்க்கும் என பொருள். பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இப்படி தான் கொரோனா ஆட்டிப்படைத்தது.

மாறாக, நோய் பாதிப்பை மட்டுப்படுத்த முடிந்தால், இந்த வளைவின் உச்சம் குறைந்து தட்டையாக இருக்கும். இதை தான் வளைவை தட்டையாக்குவது என்கின்றனர். இவ்வாறு நிகழும் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு அவகாசம் கிடைக்கும். அரசுகளுக்கும் நிலைமையை சமாளிக்க போதிய நேரம் கிடைக்கும். இல்லை என்றால், ஒரு பக்கம் நோயாளிகள் எண்ணிக்கை பெருக, மற்றொரு பக்கம், மருத்துவமனை உள்கட்டமைப்பு திணற நிலைமை மிக மோசமாகிவிடும்.

எனவே தான் நோய் பாதிப்பு வளைவை முடிந்த வரை தட்டையாக்க வேண்டும் என்று மன்றாடுகின்றனர். இதை செய்ய இரண்டு விஷயங்கள் மிக முக்கியம். ஒன்று வீட்டுக்குளேயே இருப்பது. மீறி வெளியே சென்றாலும் சமூக தொலைவை கடைப்பிடிப்பது. மற்றொன்று, கைகழுவுவது உள்ளிட்ட தனிநபர் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது.

மருத்துவ வல்லுனர்களும், சுகாதார துறையினரும் துவக்கத்தில் இருந்து இந்த இரண்டு விஷயங்களை தான் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர். அறிவியல்பூர்வமான இந்த விஷயங்களை, கணிதவியல் நோக்கில், இந்த தளம் விளக்குகிறது.

இதற்காக ‘ஆர் நாட்’ (R0) கருத்தாக்கத்தை கையில் எடுத்துக்கொள்கிறது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவும் ஆற்றலை இந்த ஆர் நாட் குறிக்கிறது. இந்த எண்ணிக்கை 2 ஆக இருந்தால், வைரஸ் பாதித்த ஒருவரிடம் ஒருந்து மேலும் இருவருக்கு பரவும் என பொருள். இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தால், வைரஸ் பரவுவதும் குறைவாக இருக்கும். மேலும், நோய் பாதிப்பின் உச்சத்தையும் குறைக்கும், அதற்கு தேவைப்படும் காலத்தை அதிகமாக்கும்.

ஆக, நோய் பாதிப்பு வளைவு தட்டையாகி விடும்.

இதை செய்தால் என்ன நன்மை, செய்யாவிட்டால் என்ன தீமை என்பதை, நோய் பாதிப்பு வரைபடம் மூலம் சுட்டிக்காட்டுகிறது இந்த தளம். இதற்காக அமைக்கப்பட்டுள்ள வரைபடத்தில், வைரஸ் பாதிப்பு ஆற்றலான ஆர் நாட்டை மாற்றி அமைத்தால், அதற்கேற்ப நோய் பாதிப்பு எண்ணிக்கை உயர்வது அல்லது குறைவதை பார்க்கலாம். தொடர்புடைய வளைவையும் பார்க்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ப எண்ணிக்கை மாறும் இந்த கணிதவியல் சார்ந்த வரைபடம், ஆர் நாட் ஒன்றுக்கும் குறைவாக இருந்தால் எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை புரிய வைக்கிறது.

ஆக, வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டுமா? ஆர் நாட்டை குறையுங்கள், அதற்கு வீட்டில் இருங்கள், விலகி இருங்கள் மற்றும் கைகழுவுங்கள் என்கிறது இந்த தளம்.

இந்த கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில், இன்னும் சற்று விரிவான கணிதவியல் சமன்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஆக, கொரோனா வைரஸை கொல்ல வேண்டும் என்றால், கைகழுவதும், சமூக தொலைவை கடைப்பிடிப்பதும் தான் வழி என்கிறது இந்த தளம்.

ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து மார்ச் மாத காலத்தில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தளம் சொல்லும் சேதி, எல்லா காலத்திற்கும் பொருந்துவது.

இணையதள முகவரி: https://flattenthecurve.herokuapp.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *