நேரம் தொடர்பான சில சுவாரஸ்யமான இணையதளங்களை பார்க்கலாம். முதலில் டைம்.இஸ் – https://time.is/
இப்போது நேரம் என்ன என்பதை இந்த தளத்தில் நுழைந்ததுமே தெரிந்து கொள்ளலாம். பயனாளியின் இருப்பிடம் அடிப்படையில், தற்போதைய நேரத்தை பெரிய எழுத்துகளில் தோன்றுவதோடு, உங்கள் கம்ப்யூட்டரில் காட்டப்படும் நேரத்திற்கும், தற்போதைய நேரத்திற்குமான வேறுபாடும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அப்படியே இன்றைய தேதி, மாதம், கிழமை உள்ளிட்ட விவரங்களோடு, முக்கிய நகரங்களில் இப்போதைய நேரமும் சுட்டிக்காட்டப்படுகிறது. கொஞ்சம் கீழே வந்தால், உலக நகரங்களின் பெயர்கள் வரிசையாக சிதறிக்கிடக்கின்றன. எந்த நகரம் தேவையோ அதை கிளிக் செய்தால், அந்த நகரில் தற்போதைய நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட அந்த நகரம் அமைந்துள்ள தேசத்தின் நேரம், பயனாளியின் நகர நேரத்திற்கும், அந்த நகரின் நேரத்திற்குமான வேறுபாடு உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
இன்னும் தேவை எனில், குறிப்பிட்ட அந்த நகரில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், பகலின் அளவு உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இத்துடன் முடிந்தவிடவில்லை. மற்ற முக்கிய நகரங்களுக்கும், இந்த நகருக்குமான நேர வேறுபாடு சுட்டிக்காட்டப்படுவதோடு, உலக வரைபடத்தின் மீது அந்த நகரம் தொடர்பான விவரங்கள் தோன்றச்செய்வதோடு, அதே நாட்டில் உள்ள மற்ற முக்கிய நகரங்கள் தொடர்பான இதே போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
உலகின் பெரும்பாலான நகரங்களுக்கும் இதே போன்ற விவரங்களை பார்க்கலாம்.
இவைத்தவிர, எளிமையான நாட்காட்டி உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. கடிகாரத்தின் ஒலியையும் கேட்கலாம். இந்த தளத்திலேயே பயனாளிகளுக்கான தனிப்பட்ட நேர அமைப்பையும் உருவாக்கி கொள்ளலாம். இணையதளம் தவிர, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி வடிவவங்களிலும் பயன்படுத்தலாம்.
பி.கு: இந்த தளத்தின் சுட்டிக்காட்டபடும் நேரம், அணு கடிகாரத்தின் அடிப்படையிலான துல்லியமான பிரதிபலிப்பாக அமைகிறது.
–
அங்கே என்ன நேரம்?
நம்மூர் நேரத்தை தெரிந்து கொள்ள கடிகாரம் போதும். ஆனால், இதே நேரம், வேறு நாட்டில் நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், நேரம் மாற்றி வசதியை நாட வேண்டும். டைம்சோன்கன்வர் தளம் இதை கச்சிதமாக செய்கிறது. இதில் உள்ள நேரம் மாற்றி அட்டவணையில், ஒரு பக்கத்தில் உள்ளூர் நேரம் காண்பிக்கப்படும். மறு பக்கம் உள்ள கட்டத்தில் நாம் நேரம் பார்க்க விரும்பும் நகரின் பெயரை குறிப்பிட்டால் அங்கு இப்போது என்ன நேரம் என தெரிந்து கொள்ளலாம். மிக எளிமையான சேவை தான்.
இதே தளத்தில் உலக நேரம் காட்டும் கடிகாரமும் உள்ளது. : https://www.thetimezoneconverter.com/
—
வேர்ல்டுடைம்சர்வர் (https://www.worldtimeserver.com/) இணையதளமும், உலக நேரம் மற்றும் நேரம் மாற்று சேவை உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது. ஆனால், இந்த தளத்தின் இடைமுகம் அத்தனை சிறப்பானது அல்ல. இதில் என்ன வசதி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள மெனக்கெட வேண்டும். அதற்குள், வந்த வேகத்தில் தளத்தில் இருந்து வெளியேற த்தோன்றலாம்.
மேலே உள்ள இரண்டு தளங்களும் அப்படி அல்ல. முதல் தளம், பல அம்சங்களை கொண்டிருந்தாலும், அவற்றை பயனாளிகள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சிறந்த வழிகாட்டுதல் அமைப்பை பெற்றுள்ளது. இரண்டாவது தளம் அதன் எளிமையால் கவர்கிறது.
–
சந்திப்புகளை திட்டமிட …
எவ்ரிடைம்சோன் (https://everytimezone.com/) தளம், முதல் பார்வைக்கு குழப்பத்தை அளிக்கலாம். ஆனால் கொஞ்சம் பொறுமையோடு அணுகினால், இதன் சிறப்பை புரிந்து கொள்ளலாம். அடிப்படையில், வெவ்வேறு நகரங்களில் உள்ளவர்கள் தங்கள் சந்திப்புகளை திட்டமிடுவதற்கான இணையதளம் இது.
இதில் உள்ள அட்டவனையில், வெளி நகரகங்களில் தற்போதைய நேரமும், அருகே உள்ளூர் நேரமும் இடம்பெறுகிறது. அருகே அடுத்து வரும் நாட்கள் இடம்பெறுகின்றன. இவற்றில் இருந்து பொருத்தமான நேரத்தை தேர்வு செய்து சந்திப்புகளை திட்டமிடலாம். இதற்கான இணையப்பையும் தருவித்து, அனுப்பி வைக்கலாம்.
வேர்ல்டுடைம்பட்டி (https://www.worldtimebuddy.com/) தளமும் இதே போன்ற வெவேறு நேர நகரங்களில் வசிப்பவர்கள் இடையே சந்திப்பை திட்டமிட உதவுகிறது. ஆனால், இதற்கான இடைமுக வசதி சற்று வித்தியாசமாக இருக்கிறது. ஸ்லடைர் போல நகரும் இந்த வசதியில் இருந்து, நமக்கான நகரத்தை தேர்வு செய்து, சந்திப்புக்கான நாளையும் குறிப்பிட்டு, இரு தரப்பிற்கும் பொருத்தமான நேரத்தை தீர்மானிக்கலாம். வார இறுதி நாட்களை தவிர்ப்பது, நாட்காட்டியை காண்பது உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
–
நேரத்தை திருத்தும் இணையதளம்
உங்கள் கடிகாரம் காட்டிக்கொண்டிருக்கும் நேரம் எந்த அளவு துல்லியமானது என அறிய உதவுகிறது ’வாட்ச் அக்வரசி’ (https://watchaccuracy.com/ ) இணையதளம். உங்கள் கடிகாரம் காட்டும் நேரத்தை இந்த தளத்தில் குறிப்பிட்டால், அணு கடிகாரத்தின்படி துல்லியமான நேரத்துடன் ஒப்பிட்டு, உங்கள் நேரம் எந்த அளவு வேறுபட்டிருக்கிறது என்பதை இந்த தளம் காண்பிக்கிறது.
—
இவை எல்லாம், நேரம் அல்லது காலம் சார்ந்த பயனுள்ள தளங்கள். அடிப்படையில் இவை எல்லாமே மிகவும் எளிமையானவை. காலம் காட்டும் கருவி சார்ந்த சேவைகளின் புத்திசாலித்தனமான தானியங்கி வடிவமாக இவை விளங்குகின்றன. இன்னும் கூட காலம் சார்ந்த சுவாரஸ்யமான இணையதளங்கள் இருக்கின்றன. இவற்றை கண்டறிய ஒரு வழி, கூகுள் போன்ற தேடியந்திரங்களில், ஆங்கிலத்தில் டைம் என்று குறிப்பிட்டு தேடிப்பார்த்தாலே போதுமானது.
ஆனால், அதே போல தமிழில் நேரம் அல்லது காலம் என தேடிப்பார்த்தால், காலம் காட்டும் சேவை சார்ந்த ஒரே ஒரு இணையதளம் கூட கண்ணில் படுவதில்லை. ஏன்? காலம் காட்டும் சேவை தளங்களை ஆங்கிலத்திலேயே அணுகுவது போதுமானது என தமிழ் மனது நினைக்கிறதா?
—
புதிய இணையதளங்கள், இணைய சேவைகளை அறிமுகம் செய்யும் இணைய மலர் மின்மடலில் எழுதியது. நீங்களும் இந்த மின்மடலில் இணையுங்கள்: புதிய இணையதளங்கள், இணைய சேவைகளை அறிமுகம் செய்யும் இணைய மலர் மின்மடலில் எழுதியது. நீங்களும் இந்த மின்மடலில் இணையுங்கள்: http://tinyletter.com/cybersimman/archive