’எழுத ஒரு இணையதளம், உரையாட பேஸ்புக், புத்தகங்களுக்கு கிண்டில்’ – எழுத்தாளர் பா.ராகவன் சிறப்பு பேட்டி

cropped-1-700x394பயனுள்ள இணையதளங்கள், இணைய சேவைகள், செயலிகள் ஆகியவற்றை தமிழில் அறிமுகம் செய்வது, இந்த மின்மடலின் நோக்கம். இத்தகைய சேவைகளை தேடி கண்டறிந்து அறிமுகம் செய்வதோடு, இணைய அனுபவம் சார்ந்த மின்மடல் பேட்டிகளையும் வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம்.
எழுத்தாளர்கள் மற்றும் துறை சார்ந்த தொழில்முறை வல்லுனர்களின் அனுபவம் வாயிலாக, இணையதளங்களையும், இணைய சேவைகளையும் புதிய கோணத்தில் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்பது என் எண்ணம். இது நம்முடைய இணைய அறிவை விசாலமாக்கவும் உதவும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில், ’பாரா’ என அறியப்படும், எழுத்தாளர் பா.ராகவனின் பேட்டியில் இருந்து இந்த வரிசை துவங்குகிறது.
முதல் மின் மடல் பேட்டியை பாராவிடம் இருந்து துவங்குவது தற்செயலானதும் தான், திட்டமிட்டதும் தான். முதல் விஷயம், என்னளவில் பாராவின் இனையதளம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அவரது எழுத்து போலவே ஆர்பாட்டம் இல்லாமல், எளிமையாக ஆனால், எழுத்தாளர் பாரா பற்றி அறியக்கூடிய போதுமான தகவல்களோடு அந்த தளம் அமைந்திருக்கும்.
இரண்டாவதாக, எழுத்துலகில் தீவிரமாக இயங்கி வரும் ’பாரா’, இணைய போக்குகளையும் நன்கறிந்தவர். தமிழில் வலை அதன் பிள்ளை பருவத்தில் இருந்த காலத்தில், ராயர் காபி கிளப் மின்மடல் குழுவில் அங்கம் வகித்தது முதல் டிவிட்டர் அறிமுகமான காலத்தில் அதை காதலுடன் வரித்துக்கொண்டவர் என்பது வரை தொழில்நுட்பத்துனான பாராவின் நெருக்கத்தையும், இணக்கத்தையும் நன்றாக உணரலாம்.
பதிப்புலகின் எதிர்காலமாக கருதப்படும் மின்னூல் சேவைகளில் ஒன்றான கிண்டிலை பயன்படுத்துவதில் அவர் காட்டி வரும் தீவிரமும் நன்கறிந்ததே. பேஸ்புக் உள்ளிட்ட மேடைகளை தனது வாசகர்களுடன் உரையாடுவதற்கான களமாக பயன்படுத்தி வருபவர்.
லாக்டவுன் காலத்தில், வீட்டு முடக்கத்தை வெல்லும் வகையில்,
ஆதியில் நகரமும் நானும் இருந்தோம்’ எனும் வாழ்வனுபவ தொடரை அவர் தனது இணையதளத்தில் பிரத்யேகமாக எழுதி வரும் நிலையில், இந்த மின்மடல் பேட்டி வெளியாவது பொருத்தமானதே.

பேட்டியில் நுழையும் முன்
இது மின்மடல் பேட்டி. ( மெசஞ்சர் இதன் வாகனமாக பயன்பட்டாலும் இமெயில் பேட்டி தான்.). இணைய அனுபவம் எத்தனை சுவாரஸ்யமாக இருக்க கூடும் என்பதை பாராவின் பதில்கள் உணர்த்துகின்றன. அவருக்கே உரிய பாணியில் அளித்துள்ள பதில்களில் மின்னும் லேசான நகைச்சுவையை ரசித்தபடி, இமெயிலின் ஆரம்ப காலம், இண்டியா.காம் போன்ற நினைவுகளில் மூழ்கலாம். பிராட்பேண்டுக்கும், வைபைக்கும் பழிகிய இளம் தலைமுறைக்கு டயல் அப் கனெக்‌ஷனும், இமெயில் அனுப்பி விட்டு, நாலு முறை போனில் கேட்பதும் புதிய கண் திறப்பாக இருக்கும்.
பதிப்புலகில் இணையத்தின் தாக்கம் பற்றி குறிப்பிடுவதோடு, பயனுள்ள இணையதளத்திற்கான அம்சங்களாக அவர் குறிப்பிடும், நேவிகேஷன், சீக்கிரம் திறப்பது மற்றும் பாப் அப் இல்லாதது ஆகியவை இணைய பயன்பாட்டு தன்மையின் இலக்கணமான அம்சங்களில் சில.
பாரா ஒரு மேக் பிரியர் என்பதையும், கல்ட் ஆப் மேக்கை நேசிக்கும் ஆப்பிள் அபிமானி என்பதையும் பதில்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
ஊடகத்துறையின் ஜாம்பவான்களில் ஒருவர் என்ற முறையில் அல்ஜஸிரா உள்ளிட்ட தளங்களுக்கு அவர் கொடுக்கும் அழுத்தத்தையும் உணரலாம்.

எளிய ஆனால் செறிவான பேட்டி. பாராவுக்கு மனமார்ந்த நன்றி.

உங்களுக்கு முதலில் அறிமுகம் ஆன இணையதளம் நினைவில் இருக்கிறதா?

1998 அக்டோபர். india.com என்றொரு இணையத்தளத்தில் மின்னஞ்சல் வசதி கிடைக்கிறது என்று அலுவலகத்துக்கு வந்திருந்த சுஜாதா சொன்னார். கல்கி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் இருந்த அறைக்குச் சென்று (ஆம். அப்போதெல்லாம் கம்ப்யூட்டர்கள் திருப்பதி பெருமாள் போலவே கருதப்படும். அனுமதி பெற்று பயபக்தியுடன் நெருங்கவேண்டும்.) டயலப் கனெக்ட் செய்து அரை அணி நேரம் போராடி இந்தியா டாட்காம் தளத்தைத் திறந்தேன். ஆசை ஆசையாக paaraa@india.com என்றொரு ஐடியை உருவாக்கினேன். அதிலிருந்து யாருக்குத் தபால் அனுப்புவது என்றுதான் புரியவில்லை. முதல் மின்னஞ்சலை இரா. முருகனுக்கு அனுப்பியதாக நினைவு. தலையில் சும்மாடு வைத்து சோத்துக்கூடையை ஏற்றுவது போல எழுதிய மின்னஞ்சலுடன் ஃபாண்ட் இணைத்து அனுப்பவேண்டிய காலம். ஒரு மின்னஞ்சல் அனைத்து அட்டாச்மெண்ட்களுடனும் தயாராகி, எதிராளிக்குப் போய்ச் சேர அநேகமாக அன்று பத்து நிமிடங்கள் ஆகும். அதற்குள் ‘வந்துவிட்டதா, வந்துவிட்டதா’ என்று நாலைந்து போன் செய்து கேட்டுவிடுவேன்.

உங்களை மிகவும் கவர்ந்த இணையதளங்கள்?

ராய்டர்ஸ் மற்றும் அல் ஜசீரா செய்தித் தளங்களைப் பல்லாண்டுகளாக வாசித்து வருகிறேன். இந்தளவு நீண்ட நாள் விசுவாசியாக வேறு எந்தத் தளத்துக்கும் இல்லை. தமிழில் சாரு, பேயோன், ஜெயமோகன், எஸ்ரா தளங்களை தினமும் ஒருமுறை பார்ப்பேன். பேயோன் புதிதாக ஒன்றும் எழுதவேயில்லை என்றாலும் பழையதையாவது போய்ப் படித்துவிட்டு வருவேன். தமிழில் செய்திப் பத்திரிகை தளங்களுக்கு அதிகம் போவதில்லை. அனைத்தும் ஃபேஸ்புக்கிலேயே கிடைத்துவிடுகிறது.

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் இணையதளம்

எல்லோரையும் போல கூகுள்தான்.

தொழில் நிமித்தமாக, நீங்கள் சிறந்தது என கருதும் இணையதளங்கள்?

என் தொழிலுக்கு அப்படி ஏதுமில்லை.

பயனுள்ள இணையதளத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் எவை?

பாப் அப் விளம்பரங்கள் கூடாது. சீக்கிரம் திறக்க வேண்டும். நேவிகேஷன் எளிதாக இருக்க வேண்டும். போதும்.

மற்றவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் இணையதளங்கள்?

இதெல்லாம் அவரவர் ரசனை மற்றும் தேவையைப் பொறுத்த விஷயம். பரிந்துரைகள் பயனளிக்காது.

எழுத்தாளர்களுக்கு சொந்த இணையதளம் எந்த அளவு அவசியமானது?

இக்காலத்தில் மிகவும் அவசியம். எழுத்தாளர்களைப் பத்திரிகைகளில், புத்தகங்களில் படித்த காலங்கள் மாறி, இணையத்தில் நேரடியாக அணுக முடிகிற காலம் இது. எழுத ஓர் இணையத்தளம், உரையாட ஃபேஸ்புக், புத்தகங்களுக்கு கிண்டில் என்று சூழ்நிலை மாறிவிட்டது. கால மாற்றத்துக்கு ஏற்ப எழுத்தாளர்கள் தம்மை மாற்றிக்கொண்டே தீரவேண்டும். மீண்டும் அச்சுப் பத்திரிகைகளுக்கு ஒரு காலம் வரும் என்று தோன்றவில்லை. அப்படியே வந்தாலும் அது எழுத்தாளன் விரும்பக்கூடிய விதத்தில் இராது.

தமிழில் உங்களைக் கவர்ந்த இணையதளம்?

translate.google.com எனது சிறந்த பொழுதுபோக்கே இதுதான். தலை கொதித்துக் கிடக்கும் நேரங்களில் எதையாவது காப்பி பேஸ்ட் செய்து கூகுள் மொழிபெயர்ப்பானில் போட்டுத் தமிழில் படிப்பேன். மனம் விட்டு நெடுநேரம் சிரிக்கத் தலை சிறந்த வழி அதுவே.

நீங்கள் இணையதளங்களை, எதற்காக, எப்போதெல்லாம் பயன்படுத்துகிறீர்கள்?

செய்திகளுக்காக. நான் வாசிக்க விரும்பும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்காக. பொழுதுபோக்குக்காக தினமும் பயன்படுத்துகிறேன்.

உங்களின் முன்னணி பத்து இணையதளங்கள் எவை?

Google
Reuters
al jazeera
osxdaily
cultofmac
kalachuvadu
uyirmmai
tamil.hindu
kindle ebooks
writerpara.com

இணைய மலர் மின்மடலுக்கான பேட்டி: http://tinyletter.com/cybersimman/archive

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *