கொரோனா வைரஸ் பொருளாதார நோக்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல துறைகளில் உற்பத்தி முடங்கியிருக்கும் அதே நேரத்தில் ஒரு சில துறைகளில் உற்பத்தி, சேவைகளுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது.
இப்படி கொரோனாவால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் போக்கை அடையாளம் காண உதவுகிறது மீட்கிளிம்ஸ் இணையதளத்தின் கோவிட்-19 பகுதி. கொரோனாவால் எந்த எந்த பிரிவுகளில் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது மற்றும் தேவை குறைந்துள்ளது என்பதை இந்த தளம் வரைபடமாக காட்டுகிறது.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாக திட்டமிட வர்த்தக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் தேடப்படும் விஷயங்கள் உள்பட பல்வேறு அம்சங்களை வைத்து, கொரோனா கால போக்குகளை இந்த தளம் அடையாளம் காட்டுகிறது.
கிளிம்ஸ் இணையதளம், வழக்கமான காலத்தில் இணைய உலக போக்குகளை தெரிந்து கொள்ள உதவும் சேவையை வழங்கு வருவதாகும்.
இணையதள முகவரி: https://meetglimpse.com/covid19/
இதே போலவே, எக்ஸ்ப்லோடிங்டாபிக்ஸ் இணையதளம், கொரோனா நெருக்கடிக்கு பின்னர் தாக்கம் செலுத்தக்கூடிய போக்குகளை அடையாளம் காட்டுகிறது. அதற்கான விளக்கத்தையும் அளிக்கிறது. – https://explodingtopics.com/post-covid-trends?
–
இணைய மலர் மின்மடலில், இந்த வாரம் எழுத்தாளர் இரா.முருகன் பேட்டி இடம்பெற்றுள்ளது. அவர் பகிர்ந்து கொள்ளும் சுவாரஸ்யமான இணைய அனுபவங்களுக்கு… https://cybersimman.substack.com/p/–2d5