கொரோனா வீட்டுக்குள்ளேயே முடக்கிப்போட்டிருந்தாலும், பலரும் ஜூம் சந்திப்புகள், இண்ஸ்டா நேரலை என இணையம் சார்ந்து சுறுசுறுப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். இலக்கிய சந்திப்புகளும், வாசிப்புகளும் கூட இணையம் மூலம் நிகழ்கின்றன. வகுப்புகள், பயிலறங்குகளையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
எல்லாம் சரி, இந்த மெய்நிகர் நிகழ்ச்சிகளை எல்லாம் அறிந்து கொள்வது எப்படி? பேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் தகவல்கள் பகிரப்பட்டாலும், இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வது? அதைவிட முக்கியமாக நமது சமூக ஊடக நட்பு வட்டத்திற்கு வெளியே நடக்கும் மெய்நிகர் நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்வது எப்படி?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக அமைகிறது ஸ்டேஹோம் அண்ட் சில்.டிவி இணையதளம். (https://stayhomeandchill.tv/ )
இணையத்தில் நடைபெறும் மெய்நிகர் நிகழ்ச்சிகள் மற்றும் நேரலை நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்தளிக்கிறது இந்த தளம்.
நாளிதழ்களின் இன்றைய செய்திகள் போல, நிகழ்ச்சிகளை தொகுத்தளிக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன.
இப்போது கொரோனா காலத்தில், மெய்நிகர் நிகழ்ச்சிகளும், நேரலை நிகழ்ச்சிகளும் அதிகரித்திருக்கும் நிலையில், இத்தகைய நிகழ்ச்சிகளின் தகவல் பலகையாக இந்த தளம் அமைந்துள்ளது. நிகழ்ச்சிகளை தேதிவாரியாக மற்றும் தலைப்புகளின் அடிப்படையிலும் தேடிப்பார்க்கும் வசதி இருக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தாங்கள் திட்டமிட்டுள்ள நிகழ்வுகளையும் இந்த தளத்தில் பதிவு செய்யலாம்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் பயனுள்ள நேரலை நிகழ்ச்சிகளை பின் தொடர நினைத்தால் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் ஒன்று இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஒரே அமெரிக்க வாடை. அதனால் என்ன மெய்நிகர் நிகழ்வு தானே, ஆர்வம் இருந்தால் இங்கிருந்தே பங்கேற்க வேண்டியது தான்.
–
மெய்நிகர் உரையாடலுக்கு வழி செய்யும் ஹைக் சேவையின் புதிய ஹைக் லாந்து வசதி பற்றிய அறிமுகம் இன்றைய இணைய மலர் மின்மடலில் இடம்பெற்றுள்ளது.
இணையதளங்கள், இணைய சேவைகளை அறிமுகம் செய்து கொள்ள இணைய மலர் மின்மடலில் உங்கள் இமெயில் முகவரி சமர்பித்து இணையுங்கள்: https://cybersimman.substack.com/p/–b23

1 Comments on “இன்றைய மெய்நிகர் நிகழ்ச்சிகள்”
Ravichandran R
இந்திய தகவல்கள் வந்தால் நன்றாக இருக்கும்!