வாழ்க்கை, பிரபஞ்சம் மற்றும் எல்லா விஷயங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கும் பயனாளிகள் உருவாக்கும் வழிகாட்டி.
இந்த வாசகத்தை படித்தவுடன் விக்கிபீடியா தளம் நினைவுக்கு வருகிறதா? ஆனால், இது விக்கிபீடியாவுக்கான விளக்கம் அல்ல, விக்கிபீடியாவுக்கு முன்னரே துவக்கப்பட்ட பயனாளிகளின் கூட்டு முயற்சியால் உருவான எச்2ஜி2 (h2g2.com/) இணைய வழிகாட்டி தளத்திற்கான அறிமுக குறிப்பு.
ஆச்சர்யமாக இருக்கலாம் என்றாலும் உண்மை இது தான். யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம், அவற்றை யார் வேண்டுமானாலும் திருத்தலாம் எனும் திறந்த வெளி தன்மையுடன் செயல்பட்டு வரும் கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியா 2001 ல் உருவாக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே எச்2ஜி2 வழிகாட்டி தளம் துவக்கப்பட்டு விட்டது.
இன்றளவும் துடிப்புடன் இயங்கி வரும் இந்த தளம், ஆங்கில எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், நகைச்சுவையாளர் என பன்முகம் கொண்ட ஆளுமையான டக்ளஸ் ஆடம்சால், 1999 ல் நிறுவப்பட்டது. டக்ளஸ் ஆடம்ஸ், நகைச்சுவையும், கற்பனையும் கலந்து எழுதிய அறிவியல் புனைகதை தொடருக்கான துணை நூலான ஹுட்ஷைக்கர்ஸ் கைடு டு காலக்சி ( Hitchhiker’s Guide to the Galaxy) எனும் படைப்புக்காக அதிகம் அறியப்படுகிறார்.
மேலும், ஆடம்ஸ் இணையத்தின் முக்கியத்துவத்தையும், எதிர்கால வாழ்வில் அதன் தவிர்க்க இயலாத இடத்தையும் கச்சிதமாக உணர்ந்திருந்த முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
பிரபஞ்சத்தில் உள்ள எல்லா விஷயங்களுக்கமான கற்பனை கையேடாக அமைந்த அவரது புத்தகத்தைப்போலவே, நிஜத்தில் ஒரு கையேட்டை உருவாக்க விரும்பி எச்2ஜி2 தளத்தை அவர் துவக்கினார். அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த இணையத்தின் ஆற்றலால், பயனாளிகள் பங்களிப்புடன் இத்தகைய இணைய கையேட்டை உருவாக்க முடியும் என அவர் நம்பினார்.
நீங்கள் அறிந்த மற்றும் நேசிக்கும் விஷயங்கள் குறித்து எழுதி அவற்றை கொண்டாடுங்கள் என்றும் டக்ளஸ் பயனாளிகளிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நம்பிக்கையின் செயல்வடிவமாக விளங்குகிறது எச்2ஜி2 தளம். விக்கிபீடியா போலவே பரந்து விரிந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், இதிலும் பல தலைப்புகளின் கீழ் தகவல் கட்டுரைகளை பார்க்கலாம். எல்லாமே உறுப்பினர்கள் எழுதியவை. ஆனால், விக்கிபீடியா கட்டுரைகளைவிட சுருக்கமாக, கட்டுக்கோப்புடனும், வாசிப்புத்தன்மையுடனும் இருக்கின்றன.
இந்த தளத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக பதிவு செய்து கட்டுரைகளை எழுதலாம். இந்த கட்டுரைகள், சக உறுப்பினர்களை கொண்ட ஆசிரியர் குழுவால் சரி பார்க்கப்பட்டு அனுமதிக்கப்படும். கட்டுரைகள் தொடர்பாக கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
முகப்பு பக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கட்டுரைகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றின் கீழ், அண்மை பதிவுகள் மற்றும் ஆசிரியர் குழு ஏற்புகளை பார்க்கலாம். இவைத்தவிர வகைப்படுத்தப்பட்ட் கட்டுரைகளையும் அணுகலாம்.
கட்டுரைகளை வாசிக்க நமக்கான தனிப்பகுதியையும் இந்த தளத்தில் உருவாக்கி கொள்ளலாம்.
விக்கிபீடியா போன்ற கூட்டு முயற்சி தளம் என்றாலும், விக்கிபீடியாவில் இருந்து வேறுபட்ட ஒரு தன்மையை இந்த தளம் பெற்றிருக்கிறது.
டக்ளஸ் ஆடம்சின் கனவான இந்த தளம் அவரது மறைவுக்கு பின் பல ஆண்டுகள் பிபிசி நிறுவனத்தால் நடத்தப்பட்டு தற்போது வேறு ஒரு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
இணையதள முகவரி: https://h2g2.com/
–
பி.கு: எச்சரிக்கை, இந்த தளத்தை பயன்படுத்தி பார்த்தீர்கள் என்றால், டக்ளஸ் ஆடம்ஸ் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டாகும். ( இது வரை அறிந்திருக்கவில்லை எனில்). அதன் பிறகு ஆடம்ஸ் பற்றி தெரிந்து கொண்டீர்கள் என்றால் நீங்கள் அவரது ரசிகராக மாறிவிடுவீர்கள்!