ஐபோனுக்கு போட்டி

நையாண்டியை விட மிகச்சிறந்த விமர்சனம் இல்லை. உண்மையா? பொய்யா? என்று  பிரித்துணர முடியாதபடி அமைந்திருப்பதை விட, நையாண்டி சிறந்த முறையாக இருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் பார்த்தால் ஐ போனுக்கு போட்டியாக உருவாக்கப் பட்டுள்ள ஐ புவர் செல்போனை மிகச்சிறந்த நையாண்டி என்று சொல்ல வேண்டும்.

ஐ போன் அறிமுகமும், அது ஏற்படுத்திய பரபரப்பும் எல்லோரும் அறிந்ததுதான். ஐ போன் பராக்கிர மகங்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டு விட்டன. இன்னமும் எழுதப்பட்டு வருகிறது. பொதுவாக ஆப்பிள் தயாரிப்பு என்றாலே விசேஷமானதாகத்தான் இருக்கும்.
வடிவமைப்பில் ஆகட்டும், உள்ளடக் கத்தில் ஆகட்டும்,  இரண்டும் இணைந்த செயல்திறனில்ஆகட்டும் ஆப்பிள் தனி முத்திரை பதித்திருக்கிறது. எனவே ஆப்பிள் நிறுவனம் ஐ போன் என்னும் பெயரில் செல்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப் பட்டதுமே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உண்டானது.

இந்த போன் அறிமுகமானபோது, அது தொடர்பான பரபரப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. ஐபோன் புரட்சியை ஏற்படுத்தி விட்டது என்றெல்லாம் வர்ணிக்கப் படுகிறது.
ஐபோன் பற்றிய விமர்சனங்கள் இல்லாமல் இல்லை என்றாலும் அதன் பாராட்டு சத்தத்தில் இவையெல்லாம் அடங்கிப்போய்விட்டன. இது போதாதென்று புதிதாக அறிமுக மாகும் செல்போன்கள் எல்லாம் ஐ போனுக்கு போட்டி என்றே வர்ணிக்கப் படுகிறது.

எந்த புதிய போனைப் பற்றி பேசினா லும் அது ஐபோனின் செல்வாக்கை முறியடிக்க வல்லதா என்ற நோக்கி லேயே விவாதிக்கப் படுகிறது. இது ஐபோனுக்கு இன்னமும் கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஆப்பிள் நிறுவனத்தை விட மற்றவர்கள்தான் ஐபோன் பற்றி பெருமையாக பேசிக் கொண்டு இருக்கின்றனர்.

மற்ற எந்த ஒரு போனைப்போலவும் ஐ போன் ஒரு போன்தான். அதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று ஒரு சிலர் நினைக்கின்றனர். அதிலும் ஐ போன் மற்ற எந்த போனையும் விட மேம்பட்டது என்று ஆப்பிள் நிறுவனத்தால் முன் வைக்கப்படும் போது இது வெறும் விளம்பர வாசகமே என்று சொல்லத் தோன்றுகிறது. இந்த கருத்தை மிகவும் சுவாரசிய மான முறையில் பதிவு செய்வதற்காக உருவாக்கப் பட்டிருப்பதுதான் ஐ போனுக்கு போட்டியான ஐ புவர் செல்போன்.

ஸ்டீவ் நோ ஜாப்ஸ் என்பவர் இந்த ஐ புவர் போனை வடிவமைத்திருக்கிறார். ஐபோனை நையாண்டி செய்யும் வகையில் இந்த போனை உருவாக்கி யுள்ள அவர், தனது பெயரையும் ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் பெயரை நையாண்டி செய்யும் வகையில் அமைத்துக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

ஐ புவர் செல்போனின் தனித் தன்மைகளை அவர் விவரிக்கும் விதம்  அலாதியானது. உண்மையில் ஐ புவர்தான் புரட்சிகரமான போன் என்கிறார் அவர். ஒரு செல்போன் ஏன் படம் எடுக்க வும், பாட்டு கேட்கவும், கம்ப்யூட்டர் போல் பயன்படவும் செய்ய வேண்டும் என்று கேட்கும் அவர் செல்போனின் ஆதார குணமான பேசுவதற்கான சாதனமாக மட்டும் ஐ புவர் பயன்படும் என்று சொல்கிறார். மேலும் ஐ புவர் ஐந்தே ஐந்து பட்டன் களை மட்டுமே கொண்டிருக்கிறது. அதனை இயக்குவது மிகவும் எளிது.

அது பளபளப்பான உலோகத்தால் செய்யப்படாமல் அழகிய பிளாஸ் டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் அவர் ஐ புவரின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகிறார். நீங்கள் ஐ போன் பெருமைகளை கேள்விப்பட்டிருந்தீர்கள் என்றால், இந்த வர்ணனை அதனை கேலி செய்யும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது என்பது தெளிவாக புரிந்து விடும். ஒரு செல்போன் அதன் அடிப்படை செயல்பாட்டை விட ஏன் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று இதன் மூலம் அவர் சொல்லாமல் சொல்லி விடுகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஐ போன் அல்லாமல் ஐ புவர் விலை மலிவானது. யார் வேண்டுமானாலும் அதனை வாங்கி விடலாம்.10 டாலருக் கும் குறைவாக அது கிடைக்கிறது.

இப்படி ஐ புவரை புகழ்வது போல உண்மையில் ஐ போனை நையாண்டி செய்யும் ஸ்டீவ்நோஜாப்ஸ் இதை யெல்லாம் விளக்க, ஐபுவருக்காக என்று தனியே இணையதளம் ஒன்றை அமைத்திருக்கிறார். அந்த இணைய தளத்தில் ஐ புவர் போனை தான் வடிவமைக்க நேர்ந்த கதையையும் அவர் சுவாரசியமாக குறிப்பிட்டுள்ளார். ஒரு முறை பிச்சைக்காரர் ஒருவர் செல் போன் வைத்திருப்பதை பார்த்து வியந்து நின்றபோது, எல்லோரும் வாங்கக்கூடிய வகையில் போன் இருந்தால்தானே நன்றாக இருக்கும் என்ற சிந்தனை ஏற்பட்டு 10 டாலரில் கிடைக்கக்கூடிய ஐ புவரை உருவாக்கியதாக தெரிவிக்கிறார்.
இப்படி சொல்வதன் மூலம் கிட்டத் தட்ட 500 டாலருக்கு மேல் இருக்கும் ஐ போனை வாங்குவது மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்றும் அவர் கூறுகிறார். ஐ போனுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை ஐ புவர் மூலம் முன் வைக்கும் இவர் இந்த பிரச்சாரத்தை குறிப்பிட்ட சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டவும் பயன்படுத்தி வருகிறார்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஐபோனுக்கு போட்டி

  1. ஆட்காட்டி

    சாம்சுங் காரனும், நோக்கியாக்காரனும் ரிலீசு பண்ணிட்டாங்களே..

    Reply
  2. RamuKakka

    இதயும் கொஞ்சம் பார்த்து மகிழுங்கள்..என்ன கிண்டல்.

    http://in.youtube.com/watch?v=QwnsQpcNvpE

    இதன் பெயர் iPhone shuffle – ஆம்.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *