முககவசம் திரட்டித்தரும் இணையதளம்

mபேரிடர் காலங்களில், உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்யத்தயாராக இருப்பவர்களையும் இணைத்து வைப்பதை நோக்கமாக கொண்ட இணையதளங்கள் பேருதவியாக இருக்கும். கொரோனா காலத்திலும், இதே போன்ற இணைப்பு பால தளங்கள் அமைக்கப்பட்டு, மருத்துவ பணியாளர்களுக்கு கைகொடுத்து வருகின்றன.
மாஸ்க்-மேட்ச்.காம் (https://www.mask-match.com/ )
கொரோனா கோரத்தாண்டவம் ஆடத்துவங்கிய போது, முககவசம் உள்ளிட்ட தற்காப்பு சாதனங்களின் முக்கியத்துவம் புரிந்ததோடு, இவற்றின் தேவையும் புரிந்தது. ஆனால், வைரஸ் பரவத்துவங்கிய வேகத்திற்கு ஈடு கொடுக்க கூடிய அளவுக்கு, தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாததை மருத்துவ பணியாளர்களும், சுகாதார பணியாளர்களும் உணர்ந்து தவித்தனர்.
தேவைக்கேற்ப உடனடியாக தனிநபர் பாதுகாப்பு கவசங்களை விநியோகிக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகங்கள் தடுமாறும் நிலை உண்டானது. தயாரிப்பில் கோட்டைவிட்டு நின்ற அரசு அமைப்புகளாலும் பெரிய அளவில் இதற்கு தீர்வு காண முடியவில்லை.
இந்த சோதனைக்கு மத்தியில், மருத்துவ பணியாளர்களும், அவர்களுடன் துணை நிற்கும் சுகாதார பணியாளர்களும் கையறு நிலையில் பணியாற்றும் நெருக்கடி உண்டானது.
பல மருத்துவமனைகளில், மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் போதிய முககவசம் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவில், இத்தகைய நிலை இருப்பதை செவிலியராக பணியாற்றும் தனது அம்மாவிடம் இருந்து கேள்விபட்ட லிஸ் கிளிங்கர் (Liz Klinger) எனும் பெண்மணி. முககவச பற்றாக்குறைக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடன், மேலும் இருவருடன் இணைந்து மாஸ்க்-மேட்ச் இணையதளத்தை அமைத்தார்.
மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தக்கூடிய என் -95 ரக முககவசம் வைத்திருப்பவர்கள், தேவைப்படும் மருத்துவர்களுக்கு அனுப்பி வைக்க உதவும் வகையில் இந்த தளம் அமைந்திருந்தது.
முககவசம் எல்லோருக்கும் முக்கியம் என்றாலும், பொதுமக்களை பொருத்தவரை, சாதாரன முககவசம் போதுமானது. ஆனால், மருத்துவ பணியாளர்களுக்கு சர்ஜிகல் மாஸ்க் எனப்படும் என் -95 ரக மாஸ்க் அவசியம். எனவே, இந்த வகை மாஸ்குகளை கைவசம் வைத்திருப்பவர்கள் அவற்றை, மருத்துவ பணியாளர்களுக்கு வழங்க வழி செய்யும் வகையில் இந்த தளம் செயல்பட்டது.
இந்த தளம் இரண்டு முக்கிய பகுதிகளை கொண்டிருந்தது. ’என்னிடம் முககவசம் உள்ளது’ (I have masks ) எனும் பகுதியில், முககவசம் அளிக்க விரும்பிகிறவர்கள் தங்களைப்பற்றிய விவரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். ’எனக்கு முககவசம் தேவை’ (I need masks) எனும் இரண்டாவது பகுதியில், மருத்துவ பணியாளர்கள் தங்கள் தேவையை குறிப்பிட வேண்டும்.
இந்த இரு தரப்பினரையும் இணைத்து வைக்கும் பாலமாக இந்த தளம் செயல்பட்டு, முககவசங்கள் தேவை உள்ளவர்களுக்கு சென்றடைய வழி செய்கிறது.
மருத்துவமனை நிர்வாகங்களும், அரசு அமைப்புகளும் சுதாரித்துக்கொண்டு நிலைமையை சீராக்க நடவடிக்கை எடுப்பதற்கு முந்தைய நெருக்கடியான சூழலில், இந்த தளம் மருத்துவ பணியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டது. அதற்கேற்ப பொதுமக்களில் பலரும் இந்த தளம் மூலம் தங்களிடம் இருந்த உபரி மருத்துவ முககவசங்களை அளித்தனர். முககவசங்களை தயாரிக்கும் சிறிய நிறுவனங்களும் இந்த பணியில் தங்களை இணைத்துக்கொண்டன.
முதல் மூன்று மாத காலத்தில், அமெரிக்கா மற்றும் பக்கத்து நாடான கனடாவில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட முககவசங்கள் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட வழி செய்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதே போல மாஸ்க் க்ருசேடர்ஸ் (https://maskcrusaders.org/) இணையதளமும், கையுறை, முககவசம் உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள், தன்னார்வலர்கள் மூலம் மருத்துவ பணியாளர்களிடம் வழங்கப்பட வழி செய்கிறது.

மகளுக்காக தந்தை அமைத்த இணையதளம்!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *