மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உலகம் முழுவதும் உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறைக்கைதிகள் அவருக்காக நடத்திய நடன அஞ்சலி நிகழ்ச்சி யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அநாட்டில் உள்ள செபு மாகாண சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தான் இப்படி நடன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
யூடியூப்பில் புகழ்பெரும் வீடியோக்களை கவனித்து வருபவர்களுக்கு இந்த சிறை கைதிகளை நினைவிருக்கலாம். ஏற்கனவே இந்த சிறைப்பறைவகளின் நடனம் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு பல லட்சம் இணையவாசிகளால் பார்க்கப்பட்டு பிரபலாமானது. (இது பற்றி இந்த வலைப்பதிவிலும் எழுதப்பட்டுள்ளது)
இந்த சிறைக்கைதிகள் ஜாகச்னின் த்ரில்லர் ஆல்பத்தில் வரும் பாடலுக்கு ஏற்ப நடனமாடி புகழ்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்வே தான் ஜாக்சன் இறந்த செய்தி கேள்விப்பட்டதும் இவர்கள் மறைந்த பாப் இசை மன்னனுக்கு இசையாஞ்சலி செலுத்த தீர்மானித்தனர். இதற்காக 1500 கைதிகள் சுமார் 9 மணிநேரமடினமான பயிற்சி மேற்கொண்டு சனிக்கிழமை காலை திரில்லர் ஆல்பத்தின் பாடலுக்கு நடனமாடினர்.
ஜாக்சன் நினைவை போற்றும் வகையில் அறங்கேறிய இந்த நடன நிகழ்ச்சி பின்னர் யூடியூப்பிலும் பதிவேற்றப்பட்டது. முன்னதாக ஜாக்சன் குடும்பத்தினருக்காக சிறப்பு பிராத்தனையும் நடத்தப்பட்டது.
இங்குள்ள கைதிகள் பலர் ஜாக்சனின் ரசிகர்கள் என்பதோடு அவரை கடவுளாகவே நினைத்துக்கொண்டிருப்பவர்கள்.
—-