கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட பலவித இணையதளங்கள் பற்றி எழுதி வருகிறேன். இவை எல்லாமே அக்கரையில் அமைக்கப்பட்ட அக்கறை தளங்கள். விதிவிலக்காக அமைந்த ஜன்னலோர காட்சிகளை பார்த்து ரசிக்க உதவும் இணையதளம் தவிர, ( ஒருசிலவற்றை நான் தவறவிட்டிருக்கலாம்),இந்தியாவில் கொரோனா சூழலை எதிர்கொள்ள ஆசுவாசம் அளிக்கும் இணையதளங்கள் அமைக்கப்படவில்லை.
இந்தக்குறையை போக்கும் வகையில் அமைகிறது கிராப்சாய்.ஆன்லைன் (https://www.grabchai.online/ ) இணையதளம்.
சாய் என இந்தியில் குறிப்பிடப்படும் தேநீர் இந்தியர்களின் தேசிய பானம் போன்றது. அதிலும் பணியிடத்தில் இருக்கும் போது தேநீர் அருந்துவது என்பது வெறும் பானம் பருகுவது மட்டும் அல்ல, நட்பை சுவைப்பதும், இளைப்பாருவதும் தான்.
ஒரு டீ சாப்பிடலாம் வாங்க என நண்பர்களை அழைத்து, டீக்கடைக்கு சென்று வரும் நிகழ்வு என்பது பணி புரியும் சூழலில் தேவையான உற்சாகம் அளிக்க கூடியது.
ஆனால், கொரோனா சூழலில், பெரும்பாலானோர் ரிமோட் வொர்கிங் எனப்படும் தொலைதூர பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்படி வீட்டில் இருந்தே பணியாற்றுவதில் பலவித அணுகூலங்கள் உண்டென்றாலும், அலுவலக சூழலையும், நண்பர்களையும் தவறவிடுவதாக உணரலாம்.
இந்த குறையை போக்கும் வகையில் கிராப்சாய் இணையதளம் அமைகிறது. அலுவலகத்தில் இருந்தால் எப்படி அடிக்கடி டீ சாப்பிட நண்பர்களுடன் வெளியே செல்வோமோ அதே போல, இந்த தளம் நண்பர்களுடன் சேர்ந்து மெய்நிகர் தேநீர் பருக வழிச்செய்கிறது.
அதாவது, இணையம் மூலம் நண்பர்களை தேடி அவர்களுடன் உரையாடியபடி ஜூம் சந்திப்பில் தேநீர் பருக வழி செய்கிறது.
இதற்கு முதலில் இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஏற்கனவே பதிவு செய்தவர்களில் இருந்து பொருத்தமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் தேநீர் பருகுவதற்கான அழைப்பு அடுத்த சனிக்கிழமைக்கு திட்டமிடப்படும். அன்றைய தினத்தில், ஜூமில் சந்தித்து தேநீர் பருகியபடி உரையாடி மகிழலாம்.
ஆதித்யா மொகந்தி (@adityamohanty_) மற்றும் சுஹாஸ் மோட்வானி (@MotwaniSuhas ) ஆகியோர் இந்த சேவையை உருவாக்கியுள்ளனர். இந்த மெய்நிகர் தேநீர் சேவையை உருவாக்கியதற்காக பலரும் டிவிட்டரில் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர். நாமும் வாழ்த்தலாம்!.
–
புதிய இணையதளங்களை அறிமுகம் செய்யும் இணைய மலர் மின்மடலில் இணையுங்கள்; https://cybersimman.substack.com/